வார ராசிபலன் 26-09-2019 முதல் 02-10-2019 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By செய்திப்பிரிவு

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி செவ்வாய் ஆறாமிடத்துக்கு மாற்றம் பெற்று மறைந்திருந்தாலும் அவரின் பார்வை ராசியில் விழுவதால் நன்மைகளைப் பெறுவீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய வாகனச் சேர்க்கை இருக்கும். தொழில், வியாபார விவகாரங்களில் தாமதம் நீங்கும். கணவன் மனைவிக்குள் சுமுக உறவு நிலவுவதற்கு விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும்.

பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, உங்களது செயல்களுக்குப் பாராட்டுகள் கிடைக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். அரசியல்வாதிகளுக்கு, முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கூடுதல் கவனம் செலுத்திப் பாடங்களைப் படிக்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்.
எண்கள்: 2, 3, 9.
பரிகாரம்: தேவி கருமாரியம்மனை வணங்கி வர எல்லாப் பிரச்சினைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரனின் பஞ்சம பூர்வ புண்ணிய சஞ்சாரம் எதிலும் வேகம் காணப்படும். பகைமையால் ஏற்படும் தொல்லைகளைச் சுலபமாகச் சமாளிப்பீர்கள். புதிய நண்பர்களுடன் பழகும்போது எச்சரிக்கை தேவை. அலுவலகத்தில் கவனமாகப் பேசிப் பழக வேண்டும். ராசிக்கு இரண்டில் ராகு இருப்பதால் கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.

பெண்களுக்கு, அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். தெய்வபக்தி அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு, முன்னேற்றம் சீராக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மேலிடத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பில் படபடப்பு ஏற்பட்டு நீங்கும்; வெளிநாட்டுப் பயணங்கள் சிலருக்கு இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெள்ளை.
எண்கள்: 2, 6.
பரிகாரம்: அஷ்டலட்சுமிகளையும் வணங்கித் தீபமேற்றி வர மனோதைரியம் கூடும். பணக்கஷ்டம் குறையும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி புதன் ராசிக்கு நான்கில் சூரியன் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருப்பதால் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் சனியின் பார்வையால் அதைச் செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பிறருடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும். வர்த்தக ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் வீண் அலைச்சல், வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும்.

கணவன் மனைவிக்குள் இணக்கம் காணப்படும். பெண்களுக்கு, வீண் பேச்சைக் குறைக்க வேண்டும். எடுத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். கலைத் துறையினருக்கு, எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, புத்தித் தெளிவு ஏற்படும். மாணவர்களுக்கு, அடுத்தவர்களுக்கு உதவும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன். திசைகள்: மேற்கு, வடகிழக்கு. நிறங்கள்: பச்சை, மஞ்சள் எண்கள்: 3, 5. பரிகாரம்: பெருமாள் ஆலயத்தில் தாயாரை வணங்கிவர முன் ஜென்மப் பாவம் நீங்கும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் கிரகங்கள் அனைத்தும் ராசிக்கு அனுகூலமாக இருப்பதால் எதிர்ப்புகள் விலகும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனம் தேவை. தனிமையில் இனிமை காண்பீர்கள். உத்தியோகத்தில் எச்சரிக்கையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பதவி உயர்வு, நிலுவைப் பணம் தாமதப்படும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை வந்து நீங்கும்.

பிள்ளைகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். பெண்களுக்கு, பயணங்களின் போது உடைமைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்வது நல்லது. கலைத் துறையினருக்கு, சுக்கிரனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களைத் தரும். அரசியல்வாதிகளுக்கு, புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை உயரும். மாணவர்களுக்கு, சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பாடங்களை ஆர்வமாகப் படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை.
எண்கள்: 2, 5. பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லாக் கஷ்டமும் நீங்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். வெளிவட்டாரத் தொடர்புகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு இருக்கும். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேச வேண்டும். பிள்ளைகளை வெளியே அழைத்துச் செல்வீர்கள். பெண்களுக்கு எடுத்த காரியத்தைச் செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கலைத் துறையினருக்கு, பழைய பாக்கிகள் வசூலாகும்.

கொடுத்த வேலையைத் திறமையுடன் செய்து முடித்துப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, எதிர்காலச் சிந்தனை அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெறக் கடுமையாக உழைக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 1, 3.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்க காரியத் தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண் செலவுகள் குறையும். மற்றவர்களால் மனக்கஷ்டத்துக்கு ஆளாவீர்கள். அடுத்தவர்கள் கடனுக்குப் பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும் சுமாராக வரும். குடும்பத்தினரின் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்குள் திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவுத்திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள்.

பெண்களுக்கு, எதிர்பாராத செலவுகள் உண்டாகும். கலைத் துறையினருக்கு, பேச்சில் இனிமை, சாதுரியத்தால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த காரியங்கள் சிறப்பாகக் கூடுதல் சிரத்தை எடுப்பீர்கள். மாணவர்களுக்கு, கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாகப் படிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெளிர்பச்சை, வெள்ளை.
எண்கள்: 5, 6.
பரிகாரம்: லட்சுமி வராகப் பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்