வார ராசிபலன் 19-09-2019 முதல் 25-09-2019 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By செய்திப்பிரிவு


துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதுரியமான பேச்சினால் காரிய வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் மன வருத்தங்கள் நீங்கும். மேலதிகாரிகள் சொன்ன வேலையைச் செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையின் பேச்சைக் கேட்டுச் செயல்படுவீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்லுங்கள்.

பெண்களுக்கு, அனைத்து முயற்சிகளிலும் வெற்றிபெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, நிதியுதவி செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, பலன்களோடு மனக்கஷ்டமும் சேர்ந்து உண்டாகும். எதையும் தீர ஆலோசித்துச் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த தடைகள் நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 3, 6

பரிகாரம்: முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.


விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் தனபஞ்சமாதிபதி குருவின் பயணத்தால் எல்லா காரியங்களும் சுமுகமாக நடந்து முடியும். தொழில், வியாபாரத்தில் முட்டுக்கட்டைகள் நீங்கும். நல்ல பலன்களும் சேர்ந்தே கிடைக்கும். குடும்பத்துக்குள் வீண் வாக்குவாதங்கள் வரலாம். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு, சாதுரியமான பேச்சினால் காரிய வெற்றி உண்டாகும். கலைத் துறையினருக்கு, கவுரவம் உயரும். விரும்பிய பதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, தீவிர முயற்சியால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மேலிடத்துடன் நெருங்குவீர்கள். மாணவர்களுக்கு, எதையும் ஒரு முறைக்குப் பலமுறை தீர ஆலோசித்துச் செய்ய வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை

எண்கள்: 6, 9

பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானுக்கு முல்லை மலர் சாத்தி நெய்தீபம் ஏற்றி வர எல்லாக் கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும்.


தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்த பணவரவு தாமதப்படலாம். வீண் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். குதூகலம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டு. வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும். பெண்களுக்கு, எதையும் எளிதாகச் செய்து முடிக்கும் திறமை மேலோங்கும். பயணங்கள் வெற்றியைத் தரும். கலைத் துறையினருக்கு, நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். மாணவர்களுக்கு, மனத்தில் வீண் பயம் அகலும். கல்வியில் வெற்றிக்காகப் பாடுபடுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 3, 6

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி அர்ச்சனை செய்துவரக் குடும்பக் கஷ்டங்கள் நீங்கும்.


மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சனி மறைந்திருந்தாலும் பாக்கியஸ்தானம் வலுப் பெற்றிருப்பதால் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். எதிலும் ஒரு வேகத்தை உண்டாக்கும். நல்லதா, கெட்டதா? என்று யோசிக்க தோன்றாத மனநிலை உண்டாகும். தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு, நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினருக்கு, முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். மாணவர்களுக்கு, எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்ல பலன் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள்

எண்கள்: 5, 6

பரிகாரம்: ஆஞ்சநேயரை வெண்ணெய் சாத்தி வணங்கி தீபம் ஏற்றி வர எல்லாக் கஷ்டங்களும் நீங்கும்.


கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எடுத்த காரியத்தில் தடை, தாமதம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான சூழ்நிலைகள் ஏதுவாகும். செலவைக் குறைப்பதால் பணத்தட்டுப்பாடு குறையலாம். குறிப்பாக இயந்திரங்களை இயக்கும்போது கவனம் தேவை. மேலிடத்தினால் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் சுப பலன்கள் இருக்கும். கணவன் மனைவிக்குள் பந்தம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு, மனத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கலைத் துறையினருக்கு, கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். வெளிநாட்டுப் பயணங்கள் வாய்க்கும். அரசியல்வாதிகளுக்கு, நன்மை தீமை எனப் பலன்கள் கலந்து கிடைக்கும். செலவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: நீலம், மஞ்சள்

எண்கள்: 3, 6

பரிகாரம்: பைரவரை வணங்க எல்லாப் பிரச்சினைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.


மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியை ஐந்து கிரகங்கள் பார்ப்பதால் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண்செலவு குறையும். தொழில், வியாபாரம் மந்தமானாலும் பணவரவு திருப்தி தரும். மேலதிகாரிகள் உங்கள் பணியில் திருப்தியடைவார்கள். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை மாறும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாகப் பேச வேண்டும். பெண்களுக்கு, வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். கலைத் துறையினருக்கு, வாய்ப்புகள் வந்து குவியும். அரசியல்வாதிகள், எந்த வாக்குறுதியையும் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெற அதிக ஈடுபாட்டுடன் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: அய்யப்பனை வணங்க வாழ்க்கை வளம்பெறும். மனஅமைதி உண்டாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்