வார ராசி பலன்கள் செப் 12 முதல் 18 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By செய்திப்பிரிவு

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் தனஸ்தானத்தில் இருக்கும் தனகாரகன் குரு பகவானால் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனத்தில் திடீர்க் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரத்தில் ஆக்கப்பூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள்.

குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்குள் சகஜநிலை நீடிக்கும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் செயல்திறன் அதிகரிக்கும். பெண்களுக்கு, மனத்தில் திடீர்க் கவலை ஏற்பட்டு நீங்கும். கலைத் துறையினருக்கு, உத்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேறத் திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.
எண்கள்: 5. 6, 9.
பரிகாரம்: ஆறுமுகனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் வாக்குவன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். புதிய நபர்களின் அறிமுகம், நட்பு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். குடும்பத்தில் பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி குறித்த கவலை நீங்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க முற்படுவீர்கள்.

பெண்களுக்கு, எடுத்த காரியத்தைச் செய்துமுடிப்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத் துறையினருக்கு, கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாமல் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளுக்கு, பாராட்டுகள் கிடைக்கும். மனக்கவலை நீங்கும். உடல் சோர்வு அகலும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: மேற்கு, வடக்கு.
நிறங்கள்: மஞ்சள், பச்சை.
எண்கள்: 2, 6, 9.
பரிகாரம்: குருபகவானை வணங்க அனைத்துக் கஷ்டங்களும் நீங்கிச் சுகம் உண்டாகும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் தனாதிபதி சனி பகவான் உங்கள் ராசியில் பலமாகச் சஞ்சரிப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கலாம். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை காணப்படும்.

பிள்ளைகள் சொல்படி கேட்டு நடப்பது மகிழ்ச்சியைத் தரும். பெண்களுக்கு, எந்தக் காரியத்தைச் செய்து முடிப்பதிலும் வேகத்தைக் காண்பிப்பீர்கள். கலைத் துறையினர் உற்சாகமாகச் செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி, பொறுப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். மாணவர்களுக்கு, எதிர்காலக் கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்சு.
எண்கள்: 2, 3, 4.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வெற்றிலை மாலை போட்டு வணங்க காரிய வெற்றி உண்டாகும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் காரியங்களில் தடை நீங்கி நன்றாக முடியும். கொடுக்கல் வாங்கலில் சிக்கல் தீரும். எதிர்த்துச் செயல்பட்டவர்கள் விலகிப் போவார்கள். பணவரவு தடைபட்டு வந்துசேரும். வியாபாரப் பொறுப்புகளைப் பிறரிடம் ஒப்படைக்கும்போது கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் தன்மையாகப் பழக வேண்டும்.

பெண்களுக்கு, கோபம், படபடப்பு குறையும். கருத்து வேற்றுமைகள் நீங்கும். திடீர்ச் செலவு உண்டாகலாம். கலைத் துறையினருக்கு, அதீத கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்களுக்குப் பதவி உயர்வு வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு, லாபம் உண்டாகும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். மாணவர்களுக்கு, உயர்கல்வியில் திடீர்ப் பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: கருநீலம், பச்சை.
எண்கள்: 8, 9.
பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவுவதால் சமூகத்தில் அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த இடத்துக்கு மாற்றம் கிடைக்கலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன் மனைவிக்குள் இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

பிள்ளைகளால் மனவருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். பெண்களுக்கு, எல்லாக் காரியங்களும் அனுகூலமாக நடக்கும். கலைத் துறையினரின் பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, எடுத்த காரியத்தைச் செய்து முடித்து விடுவீர்கள். எடுத்த வேலைகளில் வீண்செலவு உண்டாகும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: கரும்பச்சை, வெண்மை.
எண்கள்: 4, 5, 8
பரிகாரம்: சித்தர்களை வணங்கிவர எல்லாக் காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் செலவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வாக்கு வன்மையால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம்; கவனம் தேவை. அலுவலகத்தில் உங்கள் அங்கீகாரம் அதிகரிக்கும். குடும்பத்தினருக்காக உழைக்க வேண்டி இருக்கும்.

கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் மோதல்கள் குறையும். பெண்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமையுடன் செயல்பட்டுப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, உங்கள் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். அரசியல்வாதிகளுக்கு, குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு, உயர்கல்வி முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தெற்கு. நிறங்கள்: மஞ்சள், வெண்மை.
எண்கள்: 4, 6, 9
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசையின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்