மேஷ ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் பஞ்சமஸ்தான சஞ்சாரத்தால் விருப்பங்கள் கைகூடும். மன தைரியம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் தாமதம் நீங்கும். பங்குதாரர்களிடமிருந்த சங்கடங்கள் மாறும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நன்மை தரும். பெண்களுக்கு, தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். கலைத் துறையினருக்கு, பணவரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். எதிலும் வேகம் காட்டுவது நல்லது. மனக்குழப்பம் நீங்கும். அரசியல்வாதிகள் திட்டமிட்ட பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பில் தடை, தாமதம் ஏற்படலாம்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, சிவப்பு.
எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.
ரிஷப ராசி வாசகர்களே
இந்த வாரம் பஞ்சமஸ்தான ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். திடீர்ப் பணத்தேவை உண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த வர்த்தக ஆர்டர்கள் வரும். உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற நல்ல பலன் கிடைக்கும். மேலதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் பிரச்சினையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள்.
திருமண காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும். பெண்களுக்கு, சிறிய வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு, எல்லாக் காரியங்களிலும் கூர்ந்த கவனம் வெற்றியைத் தேடித் தரும். அரசியல்வாதிகளுக்கு, வேலைகள் இழுபறியாக இருக்கும். மாணவர்களுக்கு, சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு படிப்பது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.
திசைகள்: வடக்கு, வடமேற்கு.
நிறங்கள்: மஞ்சள், வெள்ளை.
எண்கள்: 2, 6.
பரிகாரம்: ரங்கநாதரை வணங்கி வரத் துன்பங்கள் விலகி இன்பங்கள் தேடி வரும்.
மிதுன ராசி வாசகர்களே
இந்த வாரம் சப்தமஸ்தான சனி ராசியைப் பார்ப்பதால் வீண் பேச்சுக்கு ஆளாகலாம். மற்றவர் செய்கையால் மனவருத்தம் உண்டாகும். ராசிநாதன் புதனின் சுகஸ்தான சஞ்சாரத்தால் இழுபறியாகவிருந்த பிரச்சினை முடிவுக்கு வரும். தொழில், வியாபாரம் தொடர்பில் போட்டிகள் நீங்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கும்.
கணவன், மனைவிக்குள் மனக்கசப்பு மாறும். பெண்களுக்கு, எந்தவொரு வேலையையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு, உங்கள் புத்திக்கூர்மை வெற்றியைத் தேடித் தரும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, வடக்கு.
நிறங்கள்: பச்சை, நீலம்.
எண்கள்: 1, 5, 8
பரிகாரம்: அம்மன் கோயிலுக்குப் போய் 11 முறை வலம் வந்து வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
கடக ராசி வாசகர்களே
இந்த வாரம் புதிய உற்சாகம் உண்டாகும். மனத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலையிலும் சமாளித்து முன்னேறுவீர்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவச் செலவு செய்ய வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள்.
பெண்களுக்கு, மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமலிருக்க கவனத்துடன் செயல்பட வேண்டும். கலைத் துறையினர் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் மெத்தனப் போக்கு காணப்படும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெள்ளை, பச்சை.
எண்கள்: 2, 6.
பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குப் போய் வில்வ அர்ச்சனை செய்து வணங்க எல்லாத் தொல்லைகளும் நீங்கும்.
கடக ராசி வாசகர்களே
இந்த வாரம் புதிய உற்சாகம் உண்டாகும். மனத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலையிலும் சமாளித்து முன்னேறுவீர்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவச் செலவு செய்ய வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பெண்களுக்கு, மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமலிருக்க கவனத்துடன் செயல்பட வேண்டும். கலைத் துறையினர் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் மெத்தனப் போக்கு காணப்படும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெள்ளை, பச்சை.
எண்கள்: 2, 6.
பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குப் போய் வில்வ அர்ச்சனை செய்து வணங்க எல்லாத் தொல்லைகளும் நீங்கும்.
சிம்ம ராசி வாசகர்களே
இந்த வாரம் தனஸ்தானம் வலுவாவதால் செல்வச் சேர்க்கை உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிலும் வேகம் உண்டாகும். உல்லாசப் பயணங்கள் இருக்கும். அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் மிதமாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் கடினமான பணிகளைச் செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்குள் மன வருத்தம் வந்து நீங்கும்.
பெண்களது செயல்களுக்குப் பக்கபலமாக யாராவது இருப்பார்கள். திறமையான பேச்சினால் வெற்றி காண்பீர்கள். கலைத் துறையினருக்கு, எதிலும் ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்களால் உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பில் அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 5.
பரிகாரம்: காவல் தெய்வத்தை வணங்க மனக்குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும்.
கன்னி ராசி வாசகர்களே
இந்த வாரம் உங்கள் ராசி வலிமையாகக் காணப்படுவதால் தன்னம்பிக்கை உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சிக்கல் ஏற்பட்டுப் பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் முடிவெடுப்பது தொடர்பாகக் கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பேச வேண்டும். எதிர்பாராத செலவு உண்டாகும்.
கணவன் மனைவிக்குள் சிறிய மனஸ்தாபங்கள் வரலாம். பெண்களுக்கு, விருப்பமற்ற வேலைகளில் ஈடுபட்டாலும் அதனால் நன்மை உண்டாகும். கலைத் துறையினருக்கு, பிரச்சினைகள் நீங்கும். ஆன்மிக நாட்டத்தை அதிகரித்துக் கொள்வதால் மன நிம்மதி ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்களுக்கு, விளையாட்டுப் போட்டிகளில் திறமை வெளிப்படும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: நீலம், மஞ்சள்.
எண்கள்: 2, 4, 7.
பரிகாரம்: கோபூஜை செய்து பசுவை வணங்கக் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago