வார ராசி பலன்கள் ஆகஸ்ட் 15 முதல் 21 வரை (துலாம்  முதல் மீனம் வரை)

By செய்திப்பிரிவு

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் சனி சாரம் பெற்று சஞ்சரிக்கிறார். களைப்பு, பித்தநோய் நீங்கும். வீண் கவலை அகலும். புதிய வர்த்தக ஆர்டர்களைப் பிடிக்க அதிகம் அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படும். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். வாகனங்களை ஓட்டும்போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை.

நண்பர்கள், உறவினர்களிடம் சிறு மனத்தாங்கல்கள் வரலாம். பெண்களுக்கு, பணத்தேவை பூர்த்தியாகும். கலைத் துறையினருக்கு, நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, கடந்த சிலமாதங்களில் நிலவிய தேக்கநிலை மாறும். மாணவர்களுக்கு, கல்வி பற்றிய கவலை ஏற்படும். படபடப்பைக் குறைத்துப் பாடங்களில் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 2, 6.
பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து சிவனை வணங்குவது நன்மையைத் தரும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கிறார். அவர் நான்காம் பார்வையால் ராசியைப் பார்க்கிறார். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைப்பதில் சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் மிகவும் கவனமாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பதவி உயர்வு, நிலுவைப்பணம் வருவதில் தாமதம் நீங்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் அறிவுத்திறன் ஜொலிக்கும்.

அவர்களது ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு, எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கலைத் துறையினருக்கு, பயணங்களில் உடைமைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு, திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்துவார்கள். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாகத் தோன்றிய பாடங்களை எளிதாகப் படித்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்.
திசைகள்: வடக்கு, வடமேற்கு.
நிறங்கள்: சிவப்பு.
எண்கள்: 1, 5, 9.
பரிகாரம்: மாரியம்மனைத் தீபம் ஏற்றி வணங்க எல்லாப் பிரச்சினைகளும் தீரும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் பஞ்சம விரயாதிபதி செவ்வாய் பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பணவரவு அதிகமாகும். வீண்செலவு குறையும். நீண்டநாட்கள் இழுபறியாக இருந்த காரியங்கள் நடந்து முடியும். தொழில், வியாபாரம் திட்டமிட்டபடி நடந்தாலும் நிதானமாக இருக்கும். போட்டிகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு, வீண் அலைச்சல் குறையும்.

எதிர்பார்த்த அதிகாரம், அந்தஸ்து கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். கணவன், மனைவிக்குள் இடைவெளி குறைய மனம்விட்டுப் பேசவும். பெண்களுக்கு, விருப்பமற்ற பயணம் செல்ல நேரிடலாம். கலைத் துறையினருக்கு, மனசங்கடங்கள் அகலும். அரசியல்வாதிகளுக்கு, பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வி பற்றிய பயம் நீங்கும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 3, 6.
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் அர்ப்பணித்து வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியைச் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்கள் பார்க்கின்றன. வாக்குவன்மை நன்மையைத் தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில், எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். பெண்களது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் அகலும். கலைத் துறையினருக்கு, எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, இருந்த பணமுடக்கம் நீங்கும். மாணவர்களுக்கு, விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.
திசைகள்: தெற்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள்.
எண்கள்: 2, 6.
பரிகாரம்: பெருமாளைத் தரிசித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் இருக்கிறார். அவர் தனது ஏழாம் பார்வையால் ராசியைப் பார்க்கிறார். எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் இழுபறியான நிலை மாறும். தொழில், வியாபாரம் சிறக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர்கள். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்குள் இணக்கமான போக்கு இருக்காது. பெண்களுக்கு, எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். கலைத் துறையினருக்கு, எதிர்ப்புகள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு, எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியைத் தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெள்ளை. மஞ்சள்.
எண்கள்: 3, 6.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்க காரியத் தடை நீங்கும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியை ராசிநாதன் குரு, செவ்வாய் ஆகியோர் பார்க்கிறார்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால், புதிய வர்த்தக ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் சங்கடத்துக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்குள் குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள்.

நண்பர்கள், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு, எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் ஏற்படும். வெளிநாட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல்வாதிகளின் செயல்திறன் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்.
திசைகள்: வடக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்.
எண்கள்: 3, 9.
பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லாக் கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்