வார ராசி பலன்கள் - ஆகஸ்ட் 15 முதல் 21 வரை ( மேஷம் முதல் கன்னி வரை)

By செய்திப்பிரிவு

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் மிகப் பலமாக பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். முடிவெடுக்க முடியாத தடுமாற்றம் நீங்கும். எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரவு திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில் ஸ்தானத்தை மூன்று முக்கியமான கிரகங்கள் பார்க்கின்றன. தொழில், வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

பங்குதாரர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்ல வேண்டும். கணவன் மனைவிக்குள் இடைவெளி ஏற்படலாம். பெண்களுக்கு, பணவரவு திருப்திதரும் விதத்தில் இருக்கும். கலைத் துறையினருக்கு, இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகளுக்கு, தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு, திறமையான பேச்சால் மற்றவர் மனத்தில் இடம் பிடிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 1, 3
பரிகாரம்: நரசிம்மரை தீபம் ஏற்றி தரிசித்து வரக் கடன் பிரச்சினை குறையும். வீண் அலைச்சல், பயம் குறையும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் சுக்கிரனால் எதிர்ப்புகள் விலகும். பணவரவு திருப்தி தரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை ஓட்டும்போது கவனம் தேவை. தனிமையைத் தேடிச் செல்வீர்கள். வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வதுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். பெண்களுக்கு, உங்கள் செயல்களில் மற்றவர்கள் குறைகாண நேரலாம். கலைத் துறையினருக்கு, தெய்வபக்தி அதிகரிக்கும். அரசியல்வாதிகள் பயணம் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு, சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். கவனத்தைச் சிதறவிடாமல் படிப்பது அவசியம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.
திசைகள்: தென்மேற்கு, தெற்கு.
நிறங்கள்: வெள்ளை.
எண்கள்: 3, 6.
பரிகாரம்: ரங்கநாதரைத் தரிசித்து வர பாவங்கள் நீங்கும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் தனவாக்கு, குடும்ப ஸ்தானத்தில் ராசிநாதன் புதன் பாக்கியாதிபதி சனியின் சாரம் பெற்று சஞ்சரிக்கிறார். பணவரவு திருப்தி தரும். சிந்தித்துச் செயல்படுவது வெற்றிக்கு உதவும். பயணங்கள், வாகனங்களை ஓட்டும்போது எச்சரிக்கை தேவை. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய வர்த்தக ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும்.

கணவன் மனைவி சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு, எடுத்த காரியத்தை நிறைவேற்ற அலைய வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு, கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு, உங்கள் பக்கமுள்ள நியாயம் நிலைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றியடையக் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்..

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: பச்சை, மஞ்சள்.
எண்கள்: 2, 3, 5.
பரிகாரம்: புதன்கிழமை துர்க்கை அம்மனைத் தரிசனம் செய்து தீபம் ஏற்றி வர காரியத் தடைகள் நீங்கும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் தனாதிபதி சூரியன் உங்கள் ராசியில் சஞ்சரிக்க தன ஸ்தானத்தில் செவ்வாய் இருக்கிறார். நிலுவைப் பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்கத் திட்டமிட்டிருந்த வாகனம், சொத்து, வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் மந்தமாகக் காணப்பட்டாலும் வருவாய் சீராக இருக்கும். உத்தியோகத்தில், சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாகப் பேச வேண்டும். பெண்களுக்கு, பயணங்களால் நன்மை உண்டாகும். கலைத் துறையினருக்கு, எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். அரசியல்வாதிகளுக்கு, பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு, கூடுதல் மதிப்பெண்களுக்குக் கூடுதலாக உழைக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெள்ளை.
எண்கள்: 2, 6.
பரிகாரம்: முருகனை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தேவையான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். மங்களநாயகன் செவ்வாய் ராசியில் இருக்கிறார். சுபச்செலவுகள் உண்டாகும். பிறர் கடனுக்குப் பொறுப்பேற்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புதிய வர்த்தக ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்பதில் குழப்பம் வரும். உத்தியோகத்தில், நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன பதவி உயர்வு, நிலுவைப் பணம் வந்து சேரலாம். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பாடுபடுவீர்கள். கணவன் மனைவிக்குள் சங்கடங்கள் வரலாம். பெண்களுக்கு, எதிர்பாராத செலவுகள் உண்டாகும். கலைத் துறையினருக்கு, காரிய தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு, கல்வி குறித்த பயம் ஏற்பட்டு நீங்கும். தெளிவாகப் பாடங்களைப் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், நீலம்.
எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: விநாயகப் பெருமானைத் தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் இருக்கிறார். பகை நீங்கும். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் கைகொடுப்பார்கள். தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் படபடப்புடன் காணப்படுவார்கள். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டுப் பேசவேண்டும்.

எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். பெண்களுக்கு, வீண்கவலை, எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். கலைத் துறையினருக்கு, எதையும் திட்டமிட்டுச் செய்வது நன்மை தரும். அரசியல்வாதிகள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். மாணவர்களுக்கு, சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாகப் படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன்.
திசைகள்: தெற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: பச்சை, சிவப்பு
எண்கள்: 3, 5, 9
பரிகாரம்: சனிக்கிழமை சனிபகவானை வணங்கி வர காரியத் தடை, எதிர்ப்புகள் அகலும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்