துலாம் ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன், குருசார சஞ்சாரம் பெற்று இருப்பதால் எண்ணிய காரியங்களைத் திறமையாகச் செய்து முடிப்பீர்கள். இழுபறியாக இருந்த வர்த்தக ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமானாலும் வந்து சேரும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். சிற்றின்பச் செலவுகள் கூடும். அக்கம்பக்கத்தவரிடம் கவனமாகப் பேசுவதும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நல்லது. அரசியல்வாதிகளுக்கு, முக்கிய நபர்களின் ஆதரவு கிடைக்கலாம். ஓயாமல் உழைக்க வேண்டி வரலாம். கலைத் துறையினருக்கு, சுமுகமாக அனைத்து விஷயங்களையும் செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு, கவனக்கூர்மையுடன் செயல்பட்டால் சாதிக்கலாம். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும். கல்விப் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெண்பச்சை
எண்கள்: 1, 6
பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்மனை வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும்.
விருச்சிக ராசி வாசகர்களே
இந்த வாரம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் குருவுடன் சேர்ந்து சஞ்சரிக்கப் போவதால் பாராட்டுகள் கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கக் காரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையினால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வீர்கள். சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, யாருக்கும் அஞ்சாமல் செயல்படுவீர்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு வெளிநாட்டுக்குச் சென்று வர வாய்ப்புகள் உண்டாகும். பெண்களுக்கு, எதிலும் தயக்கமோ பயமோ இல்லாமல் ஈடுபட்டுச் சிறப்பாகச் செய்வீர்கள். மாணவர்களுக்கு, கல்விக்கான உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 3, 9
பரிகாரம்: மகாலட்சுமியை பூஜை செய்து வழிபட, பணத் தட்டுப்பாடு நீங்கும்.
தனுசு ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியில் இருக்கும் சனி, கேதுவால் வீண் கவலை உண்டாகலாம். எதிர்பார்த்த வெற்றி தாமதமாகக் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமை இருக்கும். விருந்தினர்கள் வருகையும் சுபச்செலவும் உண்டாகலாம். வழக்குகளைத் தள்ளிப்போட்டு, பேசித் தீர்க்க வேண்டும். ஆயுதம், தீயைக் கையாளும்போது கவனம் தேவை. அரசியல்வாதிகள் சிறப்பாகச் செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்க்க முடியும். அரசாங்க சம்மந்தமான விஷயங்கள் சாதகமாக நடக்கும். கலைத் துறையினருக்கு, வாய்ப்புகள் அமையும். திடீர் உடல் நலக்குறைவு ஏற்படலாம். பெண்களுக்கு, அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டுச் செயல்பட வேண்டாம். மாணவர்களுக்கு, உயர் கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண் பெறுவதற்காகப் படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 1, 3
பரிகாரம்: சிவன் கோயிலுக்குப் போய் வணங்கி வர கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
மகர ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியை மூன்று கிரகங்கள் பார்க்கின்றன. அதிலும் அஷ்டமாதிபதி சூரியனின் பார்வை ராசியின் மீது விழுவதால் எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். வீண் அலைச்சல், வேலைப்பளு இருக்கும். ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளுக்காகப் பாடுபட வேண்டி இருக்கும். திடீர்ப் பணிச்சுமை காரணமாக உணவருந்தக்கூட முடியாமல் போகலாம். கலைத் துறையினருக்கு, வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களில் கவனம் தேவை. பெண்களுக்கு, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவு இருக்கும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பாடங்களில் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு ஆசிரியர் உதவி கிடைக்கும். வெளியூருக்கு விளையாட்டுப் போட்டிகளுக்குச் செல்வீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: நீலம், சிவப்பு
எண்கள்: 6, 7
பரிகாரம்: சிவன் கோயிலுக்குப் போய் சிவன், அம்பாளை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மனக்குழப்பத்தை நீக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க உதவும்.
கும்ப ராசி வாசகர்களே
இந்த வாரம் வீண் அலைச்சல் காரியத் தடை ஏற்பட்டாலும் முடிவில் செவ்வாயின் பார்வையால் வெற்றியே கிடைக்கும். உத்தியோகத்தில், வீண் அலைச்சல் ஏற்படலாம் முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் முடியும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர், நண்பர்களிடம் கவனமாகப் பேசிப் பழக வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, உழைப்புக்கேற்ற லாபத்தைப் பெறுவீர்கள். தந்தைவழியில் நல்ல ஆதாயத்தைப் பெற முடியும். கலைத் துறையினருக்கு, அதிகப்படியான வேலைகளைச் செய்து சோர்ந்து போகலாம். தேவைக்கு மேல் வரவு அதிகமாக இருக்கும். பெண்களுக்கு, உடல் சோர்வும் திடீர் கவலையும் ஏற்பட்டு நீங்கும். பணவரவு திருப்தி தரும். மதிப்பும் மரியாதையும் கூடும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். சக மாணவர்கள் ஆதரவும் இருக்கும். கல்விக் கடன் கிடைக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், சனி
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: பச்சை, நீலம்
எண்கள்: 3, 8
பரிகாரம்: சிவனை வணங்குவதால் எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கும்.
மீன ராசி வாசகர்களே
இந்த வாரம் அனைத்து கிரகங்களின் சஞ்சாரமும் அனுகூலம் தரும். வீண் பகை, மன சஞ்சலம், தேவையற்ற செலவு ஏற்படும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஆனால், அவர்களிடம் திறமையாகப் பேசித் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடம் எதிர்த்துப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகள் அதிகப்படியான பளுவைச் சுமக்க வேண்டி வரலாம். தொண்டர்கள் கட்டுக்குள் இருப்பார்கள். கலைத் துறையினருக்கு, சுலபமாக அனைத்துக் காரியங்களும் நடக்கும். உடனிருப்பவர்களிடம் ரகசியங்கள் எதையும் பகிர வேண்டாம். பெண்களுக்கு, கடன் பிரச்சினைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும். புதிய நபர்களின் நட்பும் கிடைக்கலாம். மாணவர்களுக்கு, வீண் விவாதங்களைத் தவிர்த்துக் கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிக்க வேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்சு
எண்கள்: 3, 6
பரிகாரம்: விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வர எதிர்ப்புகள் அகலும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago