ஆன்மிக நூலகம்: அரசியலிலிருந்து ஆன்மிகத்துக்கு!

By செய்திப்பிரிவு

இந்தியாவின் முக்கியத் தத்துவவியலாளர்களில் ஒருவரான அரவிந்தரின் (1872-1950) வாழ்க்கை வரலாற்று நூல் இது. கல்கத்தாவில் பிறந்த இவரின் இயற்பெயர் அரவிந்த கோஷ். இங்கிலாந்தில் கல்வி கற்றார். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்த இவர், அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்றார்.

விடுதலைக்குப் பின் ஆன்மிக அனுபவத்துக்கு ஆள்பட்ட அரவிந்தர், அரசியலிலிருந்து விலகி, புதுச்சேரியில் ஆசிரமத்துக்கு இடம்பெயர்ந்தார். அரவிந்தர் என்னும் தத்துவவாதியின் பயணம் இங்கிருந்து தொடங்கியது.

இந்தியாவின் முக்கிய வரலாற்றாய்வாளர்களில் ஒருவரான ரோஷன் தலால் எழுதியுள்ள இந்நூல், அரவிந்தரின் வாழ்க்கையைப் பற்றிய முழுமையான சித்திரத்தை வழங்குகிறது. அரவிந்தரின் 151ஆவது பிறந்தநாளையொட்டி (ஆகஸ்ட் 15) இந்நூல் வெளியாகியிருக்கிறது.

Sri Aurobindo: The Life and Teachings of a Revolutionary Philosopher Roshen Dalal

வெளியீடு: Pan Macmillan India

விலை: ரூ.699

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE