ஆங்கிலம் அறிவோமே 182: எப்படியோ பரவிப் பதிந்துவிட்டது!

By ஜி.எஸ்.எஸ்

கேட்டாரே ஒரு கேள்வி

“The heads of various departments and their wives and children attended the picnic என்று அலுவலகக் கடிதம் ஒன்றில் எழுதிவிட்டேன். பிறகுதான் நினைவுக்கு வந்தது அந்தத் துறைகளில் ஒன்றின் தலைவர் பெண் என்பது. இப்போது எனக்குக் குழப்பமாக இருக்கிறது. The heads of departments and their wives/husbands and children attended the picnic என்று எழுதினால் சரிப்படவில்லை. ஒரே ஒரு பெண்மணிதான் Department Head என்பதால் wives / husband என்று எழுத வேண்டுமா? அர்த்தம் அனர்த்தமாக இருக்கிறதே”.

**********

Refute - Refuse

Refuse என்றால் ஒரு வேண்டுகோள் அல்லது உத்தரவை மறுப்பது. My request for a pay increment was refused. I refuse to listen to your stupid speech.

Refute என்றால் ஒன்றைத் தவறு என்று நிரூபிப்பது அல்லது ஒன்றை ஏற்க மறுப்பது. We have got somebody on the other side to refute you.

Refuse என்பதை decline என்று கூறலாம். Refute என்பதை disprove என்று கூறலாம்.

I refuse to refute my father.

**********

Slang என்றாலே அது மட்டமான வார்த்தைப் பிரயோகமா?

அப்படி இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதே நேரம் அதை வட்டார வழக்கு என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. Dialect என்பதுதான் வட்டார வழக்கு. ஆங்கிலத்தில் பல slangs இயல்பாகவே பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஆபாசமில்லாத சில slangs-ஐ இப்போது பார்ப்போம்.

Shoo-fly என்பது காவல்துறையைச் சேர்ந்த ஒருவரைக் குறிக்கிறது. இவர் பெரும்பாலும் சீருடை அணியாது சக காவல் அதிகாரிகள் பற்றி உயர் அதிகாரியிடம் ‘போட்டுக் கொடுப்பவராக’ இருப்பவர்.

Shonky என்றால் நேர்மையற்ற அல்லது நம்பகத்தன்மையற்ற என்று பொருள்.

ஒருவர் Bluefunk ஆக இருக்கிறார் என்றால் அவர் அச்சத்தால் மிகவும் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறார் என்று பொருள்.

இவையெல்லாம் பெரும்பாலும் ‘slangs-களின் தாயகமான’ அமெரிக்காவில் பேசப்படுபவை.

**********

கேட்டாரே ஒரு கேள்வி நண்பருக்கான ஆலோசனை இது. குழம்ப வேண்டாம். கீழே உள்ள வாக்கியம் நீங்கள் கூறவந்ததை விளக்குகிறது.

The heads of departments and their families attended the picnic.

**********

Revise, supervise போன்ற வார்த்தைகளில் இடம்பெறும் vise எதைக் குறிக்கிறது என்கிறார் ஒரு வாசக நண்பர்.

லத்தீனில் ‘videre’ என்ற ஒரு வார்த்தை உண்டு. இதற்குப் பொருள் ‘பார்ப்பது’. இதிலிருந்து உருவானது visus என்ற வார்த்தை. இதற்குப் பொருள் ‘பார்வை’.

Vis என்றால் பார்ப்பது என்ற கோணத்தில் கீழே உள்ள ஒவ்வொரு வார்த்தையும் எந்தப் பின்னணியில் vis பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை யோசியுங்கள்.

Visit

Visual

Supervise

Televise

Revise

Visible

**********

​Poetaster என்றால் என்ன பொருள் என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார்.

மட்டமான, தரக்குறைவான கவிதைகளை எழுதும் ஒருவரை Poetaster என்று குறிப்பிடுவார்கள். பென் ஜான்ஸன் என்ற நாடக ஆசிரியர் 1601-ம் ஆண்டில் எழுதிய தனது நாடகத்துக்கு இதைப் பெயராகவே வைத்திருக்கிறார்!

பொதுவாக -aster என்ற பின்னொட்டு (suffix) ஒன்றைச் சரியில்லாத வகையில் உருவாக்குவதைக் குறிப்பிடுகிறார்கள்.

Criticaster என்றால் மட்டமான விமர்சனம் எழுதுபவர்.

லத்தீன் மொழியில் aster என்றால் அற்பமான அல்லது முழுமையற்ற என்று பொருள்.

**********

“துப்பறியும் நிபுணர் ஷெர்லாக் ஹோம்ஸ் புதினங்களில் “Elementary my dear Watson” என்று கூறுவதாக அமைந்துள்ளது. இதற்குப் பொருள் என்ன?

ஏதோ ஒரு விஷயத்தை ஷெர்லாக் ஹோம்ஸ் கண்டுபிடிக்க, வியப்பின் உச்சிக்கே செல்லும் அவரது இணைபிரியாத நண்பர் டாக்டர் வாட்சனைப் பார்த்து ஷெர்லாக் ஹோம்ஸ் இப்படிக் கூறுவதாக நம்பப்படுகிறது.

Elementary என்றால் மிகவும் அடிப்படையான அல்லது சிக்கலற்ற என்று பொருள்.

“வாட்சன், இது மிக எளிமையாகப் புலப்படக்கூடியது” என்ற பொருள் தரும் வாக்கியம் இது.

ஆனால், ஷெர்லாக் ஹோம்ஸின் எந்தக் கதையிலும் அதன் ஆசிரியர் ஆர்தர் கானன் டாயில் இப்படி ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. என்றாலும் இந்த பேச்சு எப்படியோ பரவி, பலரது மனங்களில் இந்த வாக்கியம் பதிந்துவிட்டது.

Elementary-ஐத் தெரிந்துகொண்ட நாம் element என்பதையும் தெளிவாக்கிக்கொள்ளலாமே. வேதியலில் element என்றால் தனிமம். ஹைட்ரஜன், பாதரசம், ஆக்ஸிஜன், தங்கம் போன்ற ஒவ்வொன்றுமே elementதான்.

பொதுவாகப் பார்க்கும்போது element என்பது ஒன்றின் ஒரு பகுதி. All these political elements have somehow come together to form a new alliance, This story has all the elements of a tele-series.

english 2jpg100 

தொடக்கம் இப்படித்தான்

Bag and baggage என்பது tautology அல்ல (அர்த்தமே இல்லாமல் அதிகப்படி வார்த்தைகளைச் சேர்த்தால் tautology).

பிரிட்டிஷ் ராணுவத்தின் உயர் அதிகாரி ‘Bag and baggage’ என்று கட்டளையிட்டால் அத்தனை பொருள்களையும் எடுத்துக்கொண்டு அந்த கேம்ப்பிலிருந்து கிளம்பிவிட வேண்டும் என்று பொருள்.

குறைந்த காலத்துக்கு ஓரிடத்தைவிட்டு நீங்கினால் ஒரே ஒரு Bag போதுமானது. ஆனால், அந்த இடத்துக்குத் திரும்பி வரப்போவதில்லை என்றால் ‘Bag and baggage’. அதாவது ராணுவத் தளவாடங்கள், உணவு, தண்ணீர் போன்ற பொருள்கள் ஆகிய எல்லாவற்றையுமே எடுத்துக்கொள்ள வேண்டுமென்று பொருள். After marriage, Suresh left my room bag and baggage to settle at a flat with his wife.

சிப்ஸ்

Wheel chair என்றாலும், pram என்றாலும் ஒன்றுதானே?

கால்களில் குறைபாடு உள்ளவர்களும் நோயாளிகளும் முதியவர்களும் பயன்படுத்துவது Wheel chair. Pram என்பது குழந்தைகளைத் தள்ளிச் செல்லப் பயன்படும் தள்ளு வண்டி.

Esplanade என்று சென்னையில் ஒரு பகுதியைக் குறிப்பிடுகிறோமே அந்த வார்த்தையின் பொருள் என்ன?

பல நாடுகளிலும் Esplanades உண்டு. Esplanade என்றால் கடல் அல்லது ஏரிக்கு அருகே உள்ள திறந்த வெளிப் பகுதி.

Erstwhile என்றாலும் Former என்றாலும் ஒரே அர்த்தமா?

Erstwhile என்றாலும், former என்றாலும் ஒரே பொருள்தான். முன்னாள் அல்லது முந்தைய.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்