கேட்டாரே ஒரு கேள்வி
இரண்டு ஆங்கில எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி ‘Too much’ என்ற பொருள் வரும்படியான வார்த்தையைக் கூற முடியுமா?
***********
கேட்டாரே ஒரு கேள்விக்கு எனக்கு ஒரு விடை தோன்றுகிறது. XS (அதாவது excess). ஆனால், இதை ஒரு வார்த்தை என்ற கூறிவிட முடியாது.
இதுபோன்ற புதிர்களில் ஆர்வம் கொண்ட வாசகர்களைப் ‘பழிவாங்கும்’ விதத்தில் கீழே சில கேள்விகளைக் கொடுத்திருக்கிறேன். பதில் கூறுங்கள்.
1. What fruit has been known since man invented calendars?
2. What musical instrument does not tell the truth?
3. What animal breaks the law?
4. Why wheels are considered the laziest part of a car?
***********
Sinister என்றால் என்ன?
He is a sinister looking man என்றால் அவரைப் பார்த்தாலே ஏதோ தவறாக அல்லது தீமையாக நடக்கப்போகிறது என்ற எண்ணம் உங்களுக்கு வருகிறது என்று பொருள். There was no kind of sinister conspiracy at the start என்றால் தொடக்கத்தில் தீயசக்திக்கான சதி திட்டம் எதுவுமில்லை என்று பொருள்.
Sinister motive என்றால் சதித்தன்மை உள்ள நோக்கம் (கிரிமினலான நோக்கம்) என்று பொருள்.
ஆனால், இந்த வார்த்தையின் தொடக்கத்தைக் குறிப்பிட்டால் இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்குக் கொஞ்சம் வருத்தம் உண்டாகலாம். லத்தீன் மொழியில் sinister என்றால் ‘இடது’ என்று பொருள். வலது கையால் கைகுலுக்குவதுதான் அமைதியாகவும் மகிழ்ச்சியைக் குறிப்பதாகவும் முன்பு கருதப்பட்டது.
ரோமானிய காலத்தில் உடலின் இடது புறம் என்பது துரதிருஷ்டமானது என்று நம்பினார்கள். எனவே, sinister side-ஐ (இடது பாகத்தை) தீமையான, கொடுமையானவற்றுடன் இணைத்தார்கள். ஹாரி பாட்டர் நூலில்கூட சுடுகாட்டில் வால்ட்மோர்ட் எனும் தீயசக்தி தன் இடதுகையால்தான் மாய மந்திரத்தை வெளிப்படுத்தும்.
Left handed compliment என்றால் அது உண்மையான பாராட்டு அல்ல. வெளிப்படையாக அது பாராட்டுவதுபோல இருந்தாலும், உண்மையில் அதன் நோக்கம் அவமதிப்புதான்.
***********
Scoot over என்ற வார்த்தையின் பயன்பாடு உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நடைமுறையில் அடிக்கடி நாம் பார்க்கும் ஒரு விஷயம்தான் இது.
ரயிலில் முன்பதிவு இல்லாத ஒரு பகுதிக்குள் நுழைகிறீர்கள். அங்கே ஒரு வரிசையில் மூன்று பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். “கொஞ்சம் நெருக்கி உட்கார்ந்துக்க முடியுமா?” என்று நீங்கள் கேட்க, அவர்கள் நெருக்கிக்கொண்டு உட்காருவதால் உங்களுக்கு உட்கார இடம் கிடைக்கிறது. இதுதான் scoot over.
If you can please scoot over, the old woman can sit down too.
tennisjpg100
மேலே இடம்பெற்ற கேள்விகளுக்கான பதில்கள் இதோ:
1. Dates (பேரீச்சம்பழம்)
2. Lyre (பண்டைக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஓர் இசைக்கருவி)
3. Cheetah (சிவிங்கிப் புலி)
4. Tired!
***********
Scene - Scenery - Scenario
He painted street scenes. Scene என்றால் காட்சி. ஒரு நாடகம் அல்லது திரைப்படத்தின் ஒரு பகுதி. In the first scene the camera moves slowly across the hospital.
விரும்பத்தகாத நிகழ்வு நடைபெற்ற இடத்தைக் குறிக்கவும் scene என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதுண்டு. Scene of the crime, scene of the destruction என்பதுபோல.
Scenary என்றால் அது மிக அழகிய இயற்கைச் சூழலின் தோற்றத்தைக் குறிக்கிறது. From the top of the hill the scenery was very beautiful.
Scene என்பதற்கு ப்ளூரல் scenes. Scenery என்பதற்குப் பன்மை கிடையாது.
Scenario என்றால் வருங்காலத்தில் நடைபெறக் கூடும் என்று ஊகிக்கப்படும் தொடர் நிகழ்வுகள். There are several possible scenarios. The worst scenario is that we lose 3,000 soldiers.
“They treatied with us five years back” -இது சரியா?
பல nouns, verbs ஆக மாற்றப்படுகின்றன. Solid என்பது solidify என்றும் drama என்பது dramatise என்றும், apology என்பது apologise என்றும் மாற்றம் பெறுகின்றன.
Treaty என்பது உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம். ஆனால், இதை treatied என்று verb வடிவத்தில் மாற்றக் கூடாது.
***********
போட்டியில் கேட்டுவிட்டால்?
நுழைவுத் தேர்வு ஒன்றில் ஒரு பத்தியில் முதல் வாக்கியம் இப்படி இருந்தது.
“Tarun lived ……….. (in the heart of the city / in a small flat / alone / in a sparsely spread area) in the outskirts of Chennai.
இவை எல்லாமே பொருத்தமானவையாக இருக்கின்றனவே. இவற்றில் எது சரியான தேர்வு?”
நண்பரே. இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் மனதில் கொண்டு விடையளிக்க முயன்றால் குழப்பம்தான் வரும். இதுபோன்ற கேள்விகளில் முழுப் பத்தியையும் படித்துவிட்டு அதற்குப் பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள்.
ஓருவேளை அந்தப் பத்தியின் முதல் மூன்று வாக்கியங்கள் இப்படி இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
Tarun lived ……….. (alone / a sparsely spread area / with his family) in the outskirts of Chennai. He liked the neighbourhood …….. (ever since he came to work in the city / very much / two years ago / as he grew as an orphan). He missed his parents and sister. Hence he went home …………….. (every three months / rarely / sometimes).
கடைசியாக உள்ள வாக்கியத்தைப் படிக்கும்போதுதான் அவர் ஆதரவற்றவர் அல்ல என்பதும், அவர் அவர்களை விட்டுவிட்டு வந்ததால் தனிமையை உணர்கிறார் என்பதும் தெரியவருகிறது. இரண்டாம் வாக்கியத்தைப் படிக்கும்போது அக்கம்பக்கத்தில் கணிசமானவர்கள் இருப்பது தெரியவருகிறது. இந்தப் பின்னணியில் முதல் வாக்கியத்தில் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் in a sparsely spread area என்பதும், with his family என்பதும் பொருத்தமானதாக இல்லை. எனவே, alone என்பதுதான் சரியான வார்த்தை.
“தனிமையிலே இனிமை காண முடியுமா?” என்ற கேள்விக்கான பதில் ஆம் அல்லது இல்லை என்று எதுவாகவும் இருக்கலாம். ஆனால், அந்தப் பாடலின் இரண்டாவது வரியான “நள்ளிரவிலே சூரியனும் தெரியுமா?” என்பதைக் கேட்கும்போது முதல் வரிக்கான விடை “இல்லை” என்பது புரிகிறதல்லவா? அதே லாஜிக்தான் இதற்கும்.
ஆங்கிலம் அறிவோமே 180-ல் கீழ்க்கண்ட வசனங்களைக் கூறுவது, ‘a’ என்ற எழுத்தில் தொடங்கும் யாராக இருக்கும் என்று கேட்டிருந்தேன்.
1. கடவுள் உண்டா இல்லையான்னு என்னைக் கேட்டால் “தெரியல்லே’ என்பதுதான் என் பதிலாக இருக்கும்.
2. மகாத்மா காந்தி, சச்சின் டெண்டுல்கர், லியனார்டோ டாவின்ஸி, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆகியோர் எல்லாம்கூட என்னைப் போலத்தான்.
3. ஆலமரத்தின் கீழ் கையில் சொம்போடு நடுநாயகமாக உட்கார்ந்து தீர்ப்பு சொல்வேன்.
4. கண்ணுங்களா, உலகத்திலே எல்லாரும் சந்தோஷமாக இருக்கணும். வசதியாக இருக்கணும் அதுதான் எனக்கு வேணும்.
5. குத்திக் காட்டறது தப்பு என்பார்கள். ஆனால் சரியான இடங்களில் குத்துவதன் மூலம் நோயைத் தீர்க்க முயல்வதுதான் என் வேலை.
6. மனிதனின் பரிணாம வளர்ச்சியை ஆராய்ச்சி செய்பவன் நான்.
அவற்றுக்கான விடைகள் –
1. agnostic 2. ambidextrous 3. arbitrator / adjudicator 4. altruist
5. acupuncturist 6. anthropologist
ஐந்து சரியான விடைகளையாவது எழுதியவர்கள் -
N.சுவாமிநாதன், வழக்கறிஞர், கோயம்புத்தூர்
இந்திரா பத்மநாபன்
R.செல்வ சங்கர், கிழக்குத் தாம்பரம் சென்னை
P.செர்புதீன், கடலூர்
நைனா தேவி, சென்னை
சிப்ஸ்
Treason என்றால் துரோகம்தானே?
தேசத் துரோகம்
Vegetable என்பதை எப்படி உச்சரிப்பது?
வெஜ்-ட-பிள் என்பது போல. அதாவது veg-க்குப் பிறகு வரும் ‘e’ உச்சரிப்புக்கானதல்ல.
Flamboyant என்றால்?
அமைதியாக என்பதற்கு எதிர்ச்சொல்.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago