டிங்குவிடம் கேளுங்கள்: வால் விண்மீன் வந்தால் ஆபத்தா?

By செய்திப்பிரிவு

பேய் எப்படி இருக்கும் டிங்கு?

- எம். சுகன்யா தேவி, 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, மேலூர்.

பேய் எப்படி இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது சுகன்யா. ஏனென்றால் பேய் இருந்தால்தானே அதை யாராவது பார்த்திருக்க முடியும்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தங்கள் கற்பனையில் ‘அப்படி இருக்கும், இப்படி இருக்கும்’ என்று சொல்வதிலிருந்தே பேய் இல்லை என்பது தெளிவாகிறது அல்லவா! மனிதர்களின் கற்பனைகளிலும் பயத்திலும் மட்டுமே பேய் இருக்கிறது. பயத்திலிருந்து வெளியே வந்தால், அதுவும் இருக்காது.

வால் விண்மீன்கள் வானில் தெரிந்தால் ஆபத்து என்று கதைகளில் வருகிறதே உண்மையா, டிங்கு?

- பி. கணேஷ், 8-ம் வகுப்பு, கல்யாண சுந்தரம் பள்ளி, தஞ்சாவூர்.

ஆபத்துதான், ஆனால் மனிதர்களுக்கு அல்ல, வால் விண்மீன்களுக்கு! சூரியக் குடும்பத்துக்குள் ஒவ்வொரு முறை வால் விண்மீன்கள் வரும்போதும் சூரியனின் வெப்பத்தால் அவற்றிலுள்ள பொருள்கள் வாயு வடிவில் வெளியேறுகின்றன. இதனால் வால் விண்மீன்கள் சுருங்குகின்றன, கணேஷ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE