உலகின் மிகப் பெரிய சூடான, சுவையான உணவகம் சீனாவில் இருக்கிறது. சீனாவின் சாங்கிங் நகரில் உள்ள சிறு குன்றின் மீது இந்த உணவகம் அமைந்திருக்கிறது. குன்றின் பாதிப் பகுதியை ஆக்கிரமித்து இந்த உணவகத்தை அமைத்திருக்கிறார்கள்.
சீனாவின் சாங்கிங் பகுதியில் ஏராளமான உணவகங்கள் இருக்கின்றன. ஆனால், தனித்துவத்துடன் இருக்கும் உணவகத்தில் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், குன்றின் மீது இருக்கும் பிபா யூவான் உணவகத்துக்குதான் செல்ல வேண்டும். இங்கே இருக்கும் 888 உணவு மேஜைகளில் சுமார் 5,800 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடலாம்! நம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மிகவும் பிரம்மாண்டமானது. இவ்வளவு பெரிய உணவகமாக இருந்தாலும் முன்பதிவு செய்துவிட்டுதான், செல்ல முடியும்.
குன்றில் பல அடுக்குகளை உருவாக்கி, குடில்களை அமைத்து, சாப்பிடும் இடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். பல வண்ண மலர்களும் செடிகளும் சூழ, சூடான, சுவையான உணவைச் சுவைத்து மகிழலாம். உணவு மேஜையின் மீதுள்ள அடுப்பில் ஒரு பாத்திரத்தில் குழம்பு கொதித்துக்கொண்டிருக்கும். தேவையான சைவ, அசைவ உணவு வகைகளை வாங்கி, கொதிக்கும் குழம்புக்குள் போட்டுவிட்டு, வேறு ஏதாவது சாப்பிட்டுக்கொண்டிருந்தால், அவை வெந்துவிடும். அதை எடுத்துச் சாப்பிட்டுக்கொள்ளலாம். இப்படிச் சாப்பிட விருப்பம் இல்லை என்றால், சமைக்கப்பட்ட உணவு வகைகளை வாங்கிக் கொள்ளலாம்.
தரைப்பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு, குன்றின் மீதுள்ள படிகளில் ஏறி, ஒதுக்கப்பட்டுள்ள உணவு மேஜையை அடைவதற்கே அரை மணி நேரம் ஆகிவிடும். விரும்பிய உணவு மேஜைக்கு வந்து சேர மேலும் ஓர் அரை மணி நேரம் ஆகலாம். பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். பகலிலும் இரவிலும் உணவகம் இயங்கினாலும் இரவு நேரத்தில்தான் பெரும்பாலானவர்கள் சாப்பிட விரும்புகிறார்கள். இரவு நேரத்தில் குன்று உணவகம் வண்ண விளக்கு ஒளியில் ஜொலிக்கும். காத்திருக்கும் கஷ்டமும் தெரியாது.
இந்த உணவகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரிகிறார்கள். சமையல்காரர்கள், உணவு பரிமாறுபவர்கள், சாப்பிட்ட பாத்திரங்களை அப்புறப்படுத்துகிறவர்கள், சாப்பிட்ட இடத்தையும் பாத்திரங்களையும் சுத்தம் செய்பவர்கள் என ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். சாப்பிட்ட உணவுக்கான பணத்தைப் பெறுவதற்கு மட்டுமே 25க்கும் மேற்பட்ட காசாளர்கள் இருக்கிறார்கள்!
நீண்ட காலமாகவே உலகின் மிகப் பெரிய உணவகம் என்கிற பெயரைப் பெற்றிருந்தாலும் கடந்த ஆண்டுதான் பிபா யூவான் உணவகம் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது.
உலகின் மிகப் பெரிய சூடான, சுவையான உணவகத்தில் சாப்பிடுவதற்காகவே வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். உணவகம் மட்டும் பெரிதில்லை, இங்கே பரிமாறப்படும் உணவின் ருசியும் மிகவும் உயர்ந்தது என்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago