* தர்பூசணியின் தாயம் ஆப்பிரிக்கா.
* தர்பூசணி பெர்ரி வகையைச் சேர்ந்தது. இது வெள்ளரி, பூசணி போன்ற கொடி வகை தாவரங்களின் உறவு.
* தர்பூசணியில் சுமார் 6% சர்க்கரையும் 92% நீரும் உள்ளன. தர்பூசணியில் இருக்கும் நீர்ச்சத்து கோடைக்காலத்தில் தாகத்தைத் தணிக்கக்கூடியதாக இருக்கிறது. சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
* உலக அளவில் தர்பூசணி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது சீனா.
* பல்வேறு எடை, வடிவம், அளவுகளில் தர்பூசணிகள் காணப்படுகின்றன.
* சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் 1200 க்கும் மேற்பட்ட தர்பூசணி வகைகள் உள்ளன.
* ஜப்பானில் உள்ள விவசாயிகள் சதுர வடிவ தர்பூசணிகளை, கண்ணாடிப் பெட்டிகளில் விளைவிக்கிறார்கள்.
* அமெரிக்காவைச் சேர்ந்த லாயிட் பிரைட் என்பவர் 121.93 கிலோ தர்பூசணியை விளைவித்து, கின்னஸ் சாதனையில் இடம்பெற்றார்.
* தர்பூசணி உலகில் மிகவும் பரவலாக விரும்பப்படும் பழங்களில் ஒன்று. இன்று இனிப்பாக இருக்கக்கூடிய தர்பூசணி, ஆரம்பக் காலத்தில் அப்படி இல்லை. மஞ்சளும் வெள்ளையுமாக இருந்த அந்தத் தர்பூசணி, சுவையாக இல்லை. காலப்போக்கில் மனிதர்கள் இந்தப் பழத்தை இனிப்பாக மாற்றிவிட்டனர்.
* 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே லிபியாவில் தர்பூசணி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தர்பூசணி 7ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கும், 10ஆம் நூற்றாண்டில் சீனாவுக்கும் வந்தது. 17 ஆம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில் பரவலாகப் பயிரிடப்பட்டது.
* தர்பூசணியின் சிறப்பே முழுப் பழத்தையும் சாப்பிட இயலும் என்பதுதான். தர்பூசணியின் தோலை ஊறுகாய் போடுகிறார்கள். சாலட்களில் சேர்க்கிறார்கள்.
* தர்பூசணியில் பல்வேறு சத்துகள் இருக்கின்றன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago