வரலாறு தந்த வார்த்தை 01: ஐஸ் உடைக்கலாமா?

By ந.வினோத் குமார்

ரு புது இடம். அது பள்ளி, கல்லூரி, பணியிடம், பார்ட்டி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நமக்குத் தெரிந்த நண்பர்களை, எல்லோரையும் விட்டு விலகி வந்திருப்போம். அந்தப் புதிய இடத்தில் நமக்கு அறிமுகமானவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். கழிவறை எங்கிருக்கிறது என்பதைக் கேட்பதற்குக்கூடத் தயக்கமாக இருக்கும்!

இதுபோன்ற தருணங்களில், புதிதாகச் சேர்ந்திருக்கும் நம்மை இலகுவாக்குவதற்கு, நமது தயக்கங்களைப் போக்குவதற்கு நமது சீனியர்கள், அங்கு ஏற்கெனவே பணியிலிருக்கும் சில அன்பர்கள் நம்மிடம் வந்து பேச்சு கொடுப்பார்கள். நம் பெயர், ஊர், பொழுதுபோக்கு விஷயங்கள், கடைசியாகப் பார்த்த சினிமா, சமீபத்தில் வாசித்த புத்தகம் போன்ற கேள்விகளைக் கேட்டு, அவர்களும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, மேற்கண்ட கேள்விகளுக்கான தங்களின் பதில்களைச் சொல்லி நம்மை சகஜ நிலைக்குக் கொண்டுவருவார்கள்.

இப்படி நம்மை ‘ஃபீல் ரிலாக்ஸ்ட்’ ஆக வைப்பதற்கு, அவர்கள் மேற்கொள்ளும் விஷயத்தை ஆங்கிலத்தில் ‘Breaking the ice’, என்று சொல்வார்கள். நம் தயக்கம்தான் இங்கு ‘ஐஸ்!’

சரி, இந்தச் சொற்றொடர், புழக்கத்துக்கு எப்படி வந்தது தெரியுமா? அந்தக் காலத்தில் கப்பல்தான், மக்களின் போக்குவரத்துக்குப் பெருமளவு உதவிவந்தது. குளிர் காலங்களில் கப்பல்கள் செல்லும் நதிகள் உறைந்து பனிக்கட்டியாகிவிடும். எனவே, கப்பல் மாலுமிகள், அந்தப் பனிக்கட்டிகளை உடைத்து, கப்பல் செல்வதற்கான வழியை ஏற்படுத்துவார்கள். பனிக்கட்டிகளை உடைப்பதன் மூலம், கப்பல் சுமுகமாகச் செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

அதிலிருந்துதான், மேற்கண்ட சொற்றொடர் நமக்குக் கிடைத்தது. நமது தயக்கத்தை உடைப்பதன் மூலம், புதிய இடத்தில் நமது பயணம் சுமுகமாக மாறும். வெட்டி அரட்டை, அலுவலகத்தைச் சுற்றிக் காண்பித்தல், விளையாட்டுகள் போன்ற விஷயங்கள் மூலம் நமது தயக்கத்தைப் போக்குவதை ‘ஐஸ் பிரேக்கிங் செஷன்ஸ்’ என்று இன்றைய கார்ப்பரேட் உலகம் சொல்கிறது.

மற்றபடி, ‘உங்களை மாதிரி திறமையான ஆட்கள் எங்களுக்குக் கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம்’ என்று யாராவது உங்களிடம் சொன்னால், அது உங்கள் தலையில் வைக்கும் மிகப் பெரிய ‘ஐஸ்!’

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்