வால்விண்மீன்கள் தேயுமா?

By ஆதன்

* சூரியனைச் சுற்றி வரும் வால்விண்மீன்கள் தூசி, பனியால் ஆனவை.
* நீண்ட வால் இருப்பதால் வால்விண்மீன்கள் என அழைக்கப்படுகின்றன.
* 4.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியக் குடும்பம் உருவானபோது, உருவாகிய எஞ்சிய பொருள்கள் இந்த வால்விண்மீன்கள்.
* பழங்காலத்தில் இருந்தே மக்கள் வால்விண்மீனை அறிந்திருக்கிறார்கள். பண்டைய சீன வானியலாளர்கள் வால்விண்மீன்கள் பற்றிய விரிவான பதிவுகளையும் விளக்கப்படங்களையும் வைத்திருந்தனர்.
* கோடிக்கணக்கான வால்விண்மீன்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவை சூரியக் குடும்பத்துக்கு அப்பால் குய்பர் பட்டை, ஊர்ட் முகில் கூட்டங்களில் இருந்து வருகின்றன.


* வால்விண்மீன்கள் சூரியக் குடும்பத்தில், சூரியனில் இருந்து வெகு தொலைவில் உள்ளன. ஒரு வால்விண்மீன் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை குய்பர் பட்டையிலும் ஊர்ட் முகில் கூட்டங்களிலும் கழிக்கிறது.
* சில நேரம் வால்விண்மீன்கள் ஒன்றோடு ஒன்று மோதும்போது அவற்றின் திசையை மாற்றி, சூரியக் குடும்பத்தை நோக்கி வீசுகிறது. ஒரு வால்விண்மீன் சூரியக் குடும்பத்துக்குள் நுழையும்போது சூரியனால் வெப்பமடைகிறது. அப்போது தூசி, வாயுவை வெளியேற்றும்போது, தலை, வாலை உருவாக்குகிறது.
* வால் எப்பொழுதும் சூரியனிடமிருந்து விலகிச் செல்லும். சில நேரம் கோள்கள் வால்விண்மீனின் வால் வழியாகப் பயணிக்கலாம். இது நிகழும்போது, அந்தந்தக் கோள்களில் விண்கற்கள் பொழிகின்றன. அது போன்று பூமியிலும் விண்கற்கள் விழுந்துள்ளன.
* வால்விண்மீன்கள் கோள்களைப் போலவே சூரியனை நீள்வட்டப் பாதைகளில் சுற்றி வருகின்றன. வால்விண்மீன்கள் சூரியனுக்கு அருகில் செல்லும்போது ஒளிவட்டத்தைக் கொண்டிருக்கும். சூரியக் கதிர்வீச்சு வால்விண்மீனில் உள்ள பனி, வாயு வாயுவை ஆவியாக்கி, அதைச் சுற்றி ஒரு ஒளிவட்டமாக மாற்றுகிறது.


* மிகவும் பிரபலமான வால்விண்மீன் ஹாலி வால்விண்மீன். இது 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியிலிருந்து பார்க்கும்படி வருகிறது. இது இங்கிலாந்து வானியலாளர் எட்மண்ட் ஹாலியின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
* தற்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறியப்பட்ட வால்விண்மீன்கள் உள்ளன.
* ஒரு பெரிய வால்விண்மீன் என்பது தொலைநோக்கி இல்லாமல் பூமியிலிருந்து பார்க்கக்கூடிய அளவுக்குப் பிரகாசமாக இருக்கும். ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் தோராயமாக ஒரு பெரிய வால்விண்மீன் வரும்.
* ஒவ்வொரு முறை வால்விண்மீன்கள் சூரியனைச் சுற்றிவிட்டுச் செல்லும்போதும் தங்களின் எடையை இழக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்