தி
ரைப்படத்துக்கான படப்பிடிப்பு, எடிட்டிங், டப்பிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் முடிந்த பிறகு, நடைபெறும் முக்கியமான பணி ‘கலர் கிரேடிங்’. திரைக்கதையின் போக்குக்கு ஏற்றமாதிரி பாடல், சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட அத்தனை காட்சிகளுக்கும் தேவையான வண்ணங்களை முடிவுசெய்து சேர்ப்பதுதான் கலர் கிரேடிங்’. ‘ஓ காதல் கண்மணி’ , ‘இரண்டாம் உலகம்’, ‘புலி முருகன’உள்ளிட்ட பல படங்களுக்கு கலர் கிரேடிங்’ செய்த ரங்காவிடம் இத்துறை சார்ந்த படிப்பு, வேலைவாய்ப்பு குறித்துப் பேசியதிலிருந்து…
‘கலர் கிரேடிங்’’கில் என்னவெல்லாம் செய்வீர்கள்?
ஒரு படத்தின் இறுதி கட்டப் பணிகள் முடிந்த பிறகும் ஒவ்வொரு காட்சியும் நிற அடிப்படையில் பார்க்கும்போது தனித்தனியாக இருக்கும். அவற்றை ஒருங்கிணைத்து ஒரே நிற வரிசையில் படத்தை உருவாக்கும் பணிதான் ‘கலர் கிரேடிங்’’. ஏனென்றால் படப்பிடிப்பு செய்யும் காட்சிகள் அப்படியே திரையில் வருவதில்லை.
கதைப்படி காலை 10 மணியா மதியம் 1 மணியா மாலை 4 மணியா எனக் கேட்டு அந்த நேரத்தில் எப்படி வண்ணங்களின் பிரதிபலிப்பு அந்தப் படத்துக்குத் தேவை என்பதையும் பொருத்து ‘கலர் கிரேடிங்’’கில் முழு படத்துக்கும் கலரை முடிவுசெய்வோம். உதாரணத்துக்கு, ‘குற்றம் 23’ படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் வெள்ளை நிறச் சாயல் இருக்கும். அவை ‘கலர் கிரேடிங்’’கின் மூலமாக உருவாக்கப்பட்டவை. இதேபோல காலையில் படமாக்கிய காட்சிகளைக்கூட இரவில் படமாக்கியது போல மாற்றுவது உள்ளிட்ட பல வேலைகளை இதில் செய்ய முடியும்.
இத்துறைக்குள் நுழைய என்ன படித்திருக்க வேண்டும்?
பி.எஸ்சி., எம்.எஸ்சி. அனிமேஷன் படிப்பு அவசியம். அதன் பிறகு ‘கலர் கிரேடிங்’’துறைக்குள் வருவதற்கு பேஸ் லைட் (Base Light), ரிசால்வ் (Resolve) உள்ளிட்ட பல மென்பொருள்களைக் கற்றுக்கொள்ளலாம். அவற்றில் பேஸ் லைட் தற்போது முன்னணியில் உள்ளது. அதே நேரத்தில் கலர் கிரேடிங்’ தொடர்பான ஏதாவது ஒரு மென்பொருளை முழுமையாகத் தெரிந்து கொண்டாலே போதுமானது.
இதற்குத் தனியாகப் படிப்பு கிடையாதா?
கிடையாது. ஏனென்றால் கிராபிக்ஸ் துறையில் இது ஒரு பாகம்தான். கிராபிக்ஸ் துறையின் அனைத்துக் கிளைகளுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. தற்போது பி.எஸ்சி. அனிமேஷன் படிப்பில் ஒவ்வொரு செமஸ்டருக்கும் கிராபிக்ஸ் துறைக்குத் தேவையான அனைத்துப் பாடத்திட்டத்தையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அது நல்ல விஷயம். முழுமையாகப் படித்துவிட்டு, நமக்கு எதில் ஆர்வம் அதிகமாகிறதோ அதற்குச் செல்லலாம்.
எம்.எஸ்சி. படித்துவிட்டு, இணையத்தில் பேஸ் லைட் மென்பொருளின் டுயூட்டோரியல்ஸ் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம். விளையாட்டு, சினிமா எனப் பல்வேறு பிரிவில் கலரிங் செய்யக் கற்றுக்கொள்ளலாம். மேற்கத்திய நாடுகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நாடகங்களைக்கூட ‘கலர் கிரேடிங்’’செய்கிறார்கள். இங்கே சில இந்தி நாடகங்களை ‘கலர் கிரேடிங்’’ செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். படிப்பு முடித்து, ஒரு மென்பொருளை முழுமையாகத் தெரிந்துகொண்டால் மிகவும் நல்லது.
எடிட்டிங் பணிகள் போல, வீட்டிலிருந்தபடியே ‘கலர் கிரேடிங்’’ செய்ய முடியுமா?
‘கலர் கிரேடிங்’’ முடிந்தவுடன் நேரடியாகத் திரையரங்கில் படம் திரையிடப்படுவதால், படத்தை புரொஜக்டர் வைத்துதான் பணிபுரிவோம். திரையில் என்ன வரப் போகிறது என்பது மானிட்டரில் பணிபுரியும்போது சரியாகத் தெரியாது.
அதுமட்டுமன்றி புரொஜக்டர், பேஸ் லைட் மென்பொருள் அதற்கான கணினி மற்றும் கலர் பேனல் கீ-போர்ட் ஆகியவை மட்டுமன்றி நீங்கள் பணிபுரியும் இடத்தை முழுமையாக வடிவமைப்பது எனச் சேர்த்தால் மொத்தமாக ஒன்றரைக் கோடிவரை செலவாகும். இது வீட்டில் சாத்தியமில்லையே!
திரைத் துறைக்குள் வர என்ன செய்ய வேண்டும்?
மென்பொருள் தெரிந்துவிட்டது என்றால், பயிற்சியாளராகப் பணிபுரியத் தொடங்கலாம். நீங்கள் கற்றதை 6 மாதங்களில் வேலையில் நடைமுறைப்படுத்தும் திறமையை வெளிப்படுத்தினால் அடுத்தடுத்துப் பட வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும்.
இத்துறையில் வேலைவாய்ப்பு அதிகமாக இருப்பதாக எப்படிக் கூறுகிறீர்கள்?
இப்போது வீடியோ கேம்ஸ் துறையில் நிறைய வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. விளம்பரங்கள் எப்போதுமே வேலைவாய்ப்பு அதிகம் இருக்கும் துறை. ஒவ்வொரு நாளும் புதுப்புது விளம்பரங்களில் பணிபுரியலாம். ‘பாகுபலி’ வெளியான பிறகு இந்தியாவிலுள்ள நிறுவனங்கள் மீது பல வெளிநாட்டு நிறுவனங்களின் பார்வை திரும்பி உள்ளது. ‘2.0’ வெளியான பிறகு இன்னும் அது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2CH_COLORISTRANGA ரங்கா rightஉங்களுக்கு எப்படி ‘கலர் கிரேடிங்’’துறையில் ஆர்வம் வந்தது?
பென்டாஃபோரில் சிலிக்கான் கிராபிக்ஸ் படித்துவிட்டு விஷுவல் எபெக்ட்ஸ் துறையில் பணிபுரிந்துவந்தேன். கம்போசிட்டிங்தான் அப்போது என்னுடைய களம். அப்பணி முடிந்தபிறகு காட்சிகள் அருமையாக வந்திருந்தாலும், கலரிங் ஒற்றுமை இருக்காது. அப்போது இரண்டையும் ஒன்றிணைத்து கலரிங் செய்து எப்படி வரும் என்று சோதனை முயற்சியாகச் செய்துபார்க்க ஆரம்பித்தேன்.
கிரீன் மேட் பயன்படுத்தி சென்னையில் எடுத்துவிட்டு, சுவிட்சர்லாந்து பின்னணியில் வர வேண்டும் என்பார்கள். கலரிங் செய்தால் மட்டுமே நிஜமாகப் படமாக்கியது போலவே இருக்கும்.
அப்படித்தான் ஆர்வம் அதிகமானது. உடனே அப்போது கலரிங்கில் முன்னணி மென்பொருளாக இருந்த லஸ்டரைப் படித்தேன். முதலில் பாடல் மட்டும் செய்தோம். பிறகு ஒவ்வொன்றாகச் செய்து தற்போது முழுப்படமும் கலரிங் இல்லாமல் வருவதில்லை.
சம்பளம் விஷயத்தில் ‘கலர் கிரேடிங்’’ துறை எப்படியிருக்கிறது?
சமீபத்தில் ‘விக்ரம் வேதா’ படத்துக்கு ‘கலர் கிரேடிங்’’ செய்தேன். கதையம்சத்துக்கு ஏற்றவாறு கலரிங் செய்திருந்தேன். அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அனைவருமே அருமையாக இருந்ததாகச் சொன்னார்கள். அதனை அடுத்து மேலும் வளர்ந்திருக்கிறேன். நமது பணி நிறைய பேசப்பட்டால், நமக்கான சம்பளம் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago