ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி!

By ம.சுசித்ரா

சு

ற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்கிற குரல் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே போகிறது. அதற்கு முதலில் நம்முடைய சூழலியல் இன்று எத்தகைய நிலையில் உள்ளது என்பதை அறிந்துகொள்ள வேண்டாமா? அதை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவியர்களுக்குப் புரியவைக்கும் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டுவருகிறது, ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்டம். 2002-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம் கடந்த 15 வருடங்களாகப் பள்ளி மாணவர்களை ஈர்த்து வருகிறது.

சோதனை நேரம்

சென்னையில் உள்ள மா.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் (எம்.எஸ்.எஸ்.ஆர்.எஃப்.) இத்திட்டம் அறிவியல் குறித்த விழிப்புணர்வைப் புதிய உத்தியைக் கையாண்டு, எளிய முறையில் வழங்கிவருகிறது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு மழை பெய்துள்ளது, வளிமண்டலத்தைச் சிதைத்துவரும் மாசின் அளவு என்ன, சுற்றுச்சூழலில் என்னென்ன அசுத்தங்கள் கலந்துள்ளன உள்ளிட்டவற்றைக் கண்டுபிடிக்க நான்கு வகையான சென்சார்களை எம்.எஸ்.எஸ்.ஆர்.எஃப் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் (Research & Development) பணிபுரியும் பொறியாளர் கண்ணப்பன் வடிவமைத்திருக்கிறார்.

அல்ட்ரா சானிக் அனலைசர் (Ultra Sonic Analyser) மூலம் வெப்பநிலை, ஈரப்பதம், மழைப் பொழிவு ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம். குறிப்பாக ஒரு பகுதியில் நிலத்தடி நீரின் அளவைகூட அறிந்துகொள்ளலாம்.

இந்தக் கருவியில் இரண்டு வகையான கதிர்கள் உள்ளன. ஒரு கதிர் உள்ளே செல்லும். மற்றொன்று வெளியே வரும். ஐந்து மீட்டர் உயரம் கொண்ட தொட்டி ஒன்றில் இந்த அல்ட்ரா ஸோனிக் அனலைசரைச் செலுத்தினால் 3 மீட்டர்வரை சென்று மீண்டும் திரும்பி வந்தால், தொட்டியில் இரண்டு மீட்டர் அளவுக்குத் தண்ணீர் உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.

வளிமண்டலத்தில் உள்ள மாசையும் சுற்றுச்சூழலில் என்னென்ன அசுத்தங்கள் கலந்துள்ளன என்பதையும் காஸ் அனலைசர் (Gas Analyser) கண்டறிந்து சொல்லும். இதயத்துடிப்பு அனலைசர் (Heart rate Analyser) மணிக்கட்டில் நாடித்துடிப்பு எவ்வளவு என்பதைத் துல்லியமாகச் சொல்லிவிடும். காற்றின் அழுத்தத்தை அறியும் அனலைசர் (Air pressure Analyser) மூலம் வளிமண்டலத்தில் உள்ள காற்றின் அழுத்தத்தை அறிந்துகொள்ளலாம்.

செயல்முறைப் பயிற்சி

“இத்திட்டம் மிகவும் பின்தங்கிய சமூகத்தில் இருந்து வரும் குழந்தைகள் அறிவியலைப் பாடமாகப் படிக்காமல், செயல்முறை விளையாட்டுகளைப் போல் கற்றுக்கொள்ளவும் சூழலியல் அக்கறையை வளர்த்துக்கொள்ளவும் உருவாக்கப்பட்டுள்ளது. எங்களுடைய மையத்தின் விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் சுபாஷ் கடந்த இரண்டு வருடங்களாக அருகில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பல அறிவியல் செயல்முறை விளக்கங்களை அளித்துவருகிறார். இங்கு வரும் குழந்தைகளில் பலருக்குச் சத்துணவுக் குறைபாட்டால் அவர்களுடைய வயதைக் காட்டிலும் குறைவான உடல் வளர்ச்சி இருப்பதைக் கவனித்துவருகிறோம். அதனால் அவர்களுக்குச் சத்துணவு அறிவியல் குறித்த விழிப்புணர்வையும் அளிக்கிறோம்.

அந்த வகையில் பல்லுயிர்ப் பாதுகாப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், அடிப்படை மனித நலன், சுத்தம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த பிரச்சினைகள் ஆகிய தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்டம் ” என்கிறார் எம்.எஸ்.எஸ்.ஆர்.எஃப் மையத்தின் ஊடகத் தொடர்புத் தலைவர் ஜெயஸ்ரீ.

ஆண்டுதோறும் ஜூன், மார்ச் ஆகிய இரு மாதங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து 20 மாணவ- மாணவிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பத்து நாட்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள். நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சியாளர்களால் அறிவியல் விளக்கங்கள் செயல்முறைப் பயிற்சி அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இதுபோன்று கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த மாநிலங்களில் அமைந்திருக்கும் எம்.எஸ்.எஸ்.ஆர்.எஃப்-ல் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் மாணவ- மாணவி பயிற்சி பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்