சிறுதானியங்களில் நவநாகரிக உணவு

By நிஷா

ஆதிகாலம் முதல் இன்றைய நவீனக் காலம் வரை உலகெங்கும் உள்ள பல கலாச்சாரங்களுக்கு முக்கிய உணவு ஆதாரமாகச் சிறுதானியங்கள் இருந்து வருகின்றன. சிறுதானியங்கள், ஆரோக்கியத்தின் ஊற்று; நமது பாரம்பரிய உணவு முறைகள் நமக்கு வழங்கியிருக்கும் நலக் கவசம். சிறுதானியங்களில் நம்பமுடியாத அளவுக்கு நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுக்களும் புரதங்களும் ஊட்டச்சத்துக்களும் நிரம்பி உள்ளன.

இருப்பினும், காலவோட்டத்தில் நம் முன்னோர்களின் பிரதான உணவாக இருந்த சிறுதானியங்கள் சற்றே பின்தங்கிவிட்டன. இந்த நிலையை மாற்றியமைத்து, சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் நோக்கில் 2023 சர்வதேச ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகக் கடந்த வியாழன் அன்று சென்னையின் ஒயிட்ஸ் சாலையில் உள்ள அமேதிஸ்ட்டின் வைல்ட் கார்டன் கஃபேவில் சிறுதானியங்களைக் கொண்டாடும் 'தி கோல்டன் கிரைன்’ (The Golden Grain) எனும் நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரபல உணவு வரலாற்று ஆய்வாளர் ராகேஷ் ரகுநாதன் வழங்கிய உணவு வகைகள் வியப்பில் ஆழ்த்துகின்றன. இன்றைய நவ நாகரிக உணவு வகைகளை சிறுதானியங்களைக் கொண்டு அவர் உருவாக்கியிருந்தார். சிறுதானியங்கள் கொண்டு சமைக்கப்பட்டிருந்த சூப், சாலட், பிரியாணி, பாயசம், இனிப்புகள் போன்றவை இன்ப அதிர்ச்சி அளித்தன; வயிற்றையும் மனத்தையும் நிரப்பின.

நிகழ்வில் வழங்கப்பட்ட சைவ உணவுகள்: குதிரைவால், பீன்ஸ் சாலட், காளான் சேர்க்கப்பட்ட சூப், சிறுதானிய டிக்கி, கம்பு டார்ட், படுகர்களின் பிரதான உணவான கேழ்வரகு உருண்டையும் அவரைக்காய் உதக்காவும், வரகு கொண்டு உருவாக்கப்பட்ட திண்டுக்கல் பாணி வெஜ் பிரியாணி, தாள்ச்சா, கத்திரிக்காய் கட்டா, தயிர் பச்சடி

நிகழ்வில் வழங்கப்பட்ட அசைவ உணவுகள்: சோளம், மாங்காய், இறால் கலந்து உருவாக்கப்பட்ட சாலட், பனிவரகு கொண்டு சமைக்கப்பட்ட ரஷ்ய மீனவர்களின் சூப், பனிவரகும் மூலிகையும் கலந்த கோழிக்கறி, கம்பும் சீஸும் கலந்த கோழிக்கறி, படுகர்களின் பிரதான உணவான கேழ்வரகு உருண்டையும் கோழி புலுசும் (குழம்பு), வரகு கொண்டு உருவாக்கப்பட்ட திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி, தாள்ச்சா, கத்திரிக்காய் கட்டா, தயிர் பச்சடி

நிகழ்வில் வழங்கப்பட்ட இனிப்புகள்: சாமை, சுட்ட பேரீச்சம்பழம், தேங்காய்ப்பால் கொண்டு உருவாக்கப்பட்ட படுகர்களின் விருப்ப இனிப்பான ஹட்சிக்கே, குதிரைவாலி கேக், வரகு புட்டிங்

மார்ச் 31 முதல் ஏப்ரல் 9, 2023 வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை வைல்ட் கார்டன் கஃபேயில் இந்த உணவு வகைகள் கிடைக்கும். கூடுதல் தகவல்களுக்கு 9382713370 எனும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்