மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான ‘யந்த்ரா இந்தியா’ (Yantra India) ஆயுத தொழிற்சாலை நிறுவனத்தில் 5,395 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மார்ச் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை இணைய வழியில் மட்டும் சமர்ப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்:
ஐடிஐ பிரிவில் காலிப்பணியிடங்கள்: 3508
ஐடிஐ அல்லாத பிரிவில் காலிப்பணியிடங்கள்: 1887
மொத்தக் காலிப்பணியிடங்கள்: 5395
இதில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் 47 காலிப்பணியிடங்களும், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் 11 இடங்களும், சென்னை ஆவடியில் உள்ள கனரக ஊர்தி தொழிற்சாலையில் 374 இடங்களும் என மொத்தம் 432 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுதி:
விண்ணப்பதாரர் குறைந்தது பத்தாம் வகுப்பில் அல்லது அதற்கு இணையான தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ படித்தவர்கள் வேலைவாய்ப்புக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எந்தெந்தப் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம் என்ற தகவல்களுக்கு ‘யந்த்ரா’ இணையதளத்தைப் பார்க்கவும்.
வயது வரம்பு:
2023 மார்ச் 30 அன்று 18 வயது நிரம்பியவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இது குறித்த விரிவான தகவல்களுக்கு ‘யந்த்ரா’ இணையதளத்தைப் பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://yantraindia.co.in/home.php என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.200/-ஐ செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் ரூ.100/-ஐ பதிவுக்கட்டணம் செலுத்தி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பங்களை மார்ச் 30-ஆம் தேதிக்குள் இணைய வழியில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வின் மூலம் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு https://yantraindia.co.in/career/10_YIL_Career_Document_2023-03-01.pdf என்கிற இணைப்பைப் பார்வையிடவும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago