பிப்ரவரி 18 - உலக அலங்கு நாள் 2023: அலங்குகளைக் காப்போம்

By நிஷா

செதில்களால் மூடப்பட்டிருக்கும் ஒரே பாலூட்டி அலங்குகளே (பங்கோலின்) . அலங்கின் நாக்கு அதன் உடலை விட நீளமானது; முழுமையாக நீட்டினால் 40 செ.மீ நீளமாக இருக்கும். நன்கு வளர்த்த ஓர் அலங்கு ஆண்டுக்குச் சுமார் 7 கோடி எறும்புகளையும், கறையான்களையும் உணவாக்கிக்கொள்ளும். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, அவை முள்ளம்பன்றிகளைப் போல உருண்டைகளாகச் சுருண்டுவிடும். பெரிய விலங்குகளிடமிருந்து வரும் ஆபத்துகளைச் சமாளிக்கும் இந்த அலங்குகளால், கடத்தல்காரர்களின் வலையிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.

உலகம் முழுவதிலும் சட்டவிரோதமாக அதிகளவில் வேட்டையாடி, கடத்தப்பட்டு விற்கப்படுகின்ற உயிரினங்களில் அலங்குகள் முதலிடத்தில் இருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அலங்குகள் கொல்லப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அலங்குகள் காடுகளிலிருந்து பிடிக்கப்பட்டுக் கடத்தப்படுகின்றன. அழிவின் விளிம்பில் உள்ள அலங்கு இனத்தைப் பாதுகாக்கவும், அதனைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் பிப்ரவரியின் மூன்றாம் சனிக்கிழமை உலக அலங்கு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ’உலக அலங்கு நாள்’ உலகெங்கும் பிப்ரவரி 18 அன்று கொண்டாடப்பட்டது.

வெப்ப மண்டலப் பகுதிகளே வசிப்பிடம்

உலகின் வெப்ப மண்டலப் பகுதிகளான ஆப்பிரிக்காவிலும் ஆசியா நாடுகளிலும் அலங்குகள் அதிகம் காணப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் நான்கு வகை அலங்குகளும், ஆசியாவில் நான்கு வகை அலங்குகள் உள்ளன. வேட்டையாடுதல், காடழிப்பு போன்ற காரணங்களால் இந்த எட்டு வகை அலங்குகளும் இன்று அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளன. அலங்குகள் பெருமளவில் அதன் மருத்துவக் குணங்களுக்காகவும், உணவுக்காகவும் கொல்லப்படுகின்றன. பாரம்பரிய சீன மருத்துவத்தில் அலங்குகளின் தின்னியின் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன், சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் அவற்றின் இறைச்சி உணவாகவும் உள்ளது.

இந்தியாவில் அலங்குகள்

இந்தியாவை எடுத்துக்கொண்டால், அவை இந்தியா முழுவதும் காணப்படுகின்றன. வட கிழக்கு மாநிலங்களில் சீன வகை அலங்குகள் (Manis crassicaudata) உள்ளன; மற்ற பகுதிகளில் இந்திய வகை அலங்குகள் (Manis crassicaudata) காணப்படுகின்றன. இந்தியாவிலும் அலங்குகளே அதிகமாகக் கடத்தப்பட்டு, கொல்லப்படும் உயிரினமாக உள்ளன. தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் அலங்குகள் முன்பு பரவலாகக் காணப்பட்டன. இன்று அங்கே அலங்குகளை பார்ப்பது மிகவும் அரிது. இந்தியாவிலிருந்து அலங்குகள் பெரும்பாலும் சீனாவுக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன.

பகுப்பாய்வு

2018-2022 காலகட்டத்தில் இந்தியாவில் நடைபெற்ற அலங்குகள் பறிமுதல் சம்பவங்கள் குறித்த தனது பகுப்பாய்வை TRAFFIC, WWF-இந்தியா சமீபத்தில் வெளியிட்டது. அதன் படி, இந்தியாவில் நடைபெற்ற 342 பறிமுதல் சம்பவங்களில் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்திற்காக 1203 அலங்குகள் வேட்டையாடப்பட்டதும், கடத்தப்பட்டதும் கண்டறியப்பட்டன.

இந்தியாவில் 2018-2022 வரை 24 மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் அலங்குகள் பறிமுதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதிகபட்சமாக ஒடிசா மாநிலத்தில் 74 பறிமுதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 154 அலங்குகள் வேட்டையாடப்பட்டு இருந்தன. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 47 பறிமுதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றின் மூலம் 135 அலங்குகள் வேட்டையாடப்பட்டது தெரியவந்தது.

இந்தியாவில் அலங்குகள் பரவலாக இருந்ததைப் பற்றியும், அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும், அவை மூட நம்பிக்கைகளால் எப்படி அழிவை நோக்கிச் செல்கின்றன என்பதைப் பற்றியும் எல்லோரிடமும் முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உலக அலங்கு நாள் கொண்டாட்டங்கள் அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்