என்.எல்.சியில் 213 காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

By ராகா

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி) உள்ள 213 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்த டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு ஜனவரி 31 அன்று முடிவடையும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் விண்ணப்பதாரர்களுக்குக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூனியர் ஓவர்மேன், ஜூனியர் நில அளவர், சிர்தார்
போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் என்.எல்.சியில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 14ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணைய வழியில் மட்டும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதி:

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டயம் (டிப்ளமோ) அல்லது பொறியியல் படிப்பு முடித்திருக்க வேண்டும். இதில் ஒவ்வொரு பதிவுக்குமான முன்னுரிமை படிப்புகள் குறித்த விவரங்களை என்.எல்.சி. இணையதளத்தைப் பார்வையிடவும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும், அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இதுகுறித்த விரிவான தகவல்களுக்கு என்.எல்.சி. இணையதளத்தைப் பார்வையிடவும்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

ஜூனியர் ஓவர்மேன் - 51

ஜூனியர் நில அளவர் - 15

சிர்தார் (Sirdar) (தேர்வு கிரேடு 1) – 147

மொத்த காலிப்பணியிடங்கள் - 213

விண்ணப்பிக்கும் முறை:

என்.எல்.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களைச் சரியாகப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 300ஐ செலுத்த வேண்டும். பட்டியல், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க வேண்டிய தளம்: https://web.nlcindia.in/rec122022/

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்குத் தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ச்சி பெறுபவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என என்.எல்.சி. குறிப்பிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு: https://www.nlcindia.in/new_website/careers/advt/12-2022.pdf

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்