தமிழக அரசு காலிப்பணியிடங்கள்: பிப்ரவரியில் காத்திருக்கும் பணிகள்

By ராகா

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. 2023-ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள் குறித்த விவரங்களைப் பார்ப்போம்.

1. சாலை ஆய்வாளர்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான 761 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தக் காலிப்பணியிடங்களுக்காக விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சிவில், பொறியியல் பிரிவில் டிப்ளமோ படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 11

விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கடைசி நாள்: பிப்ரவரி 16 – 18

மேலும் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/Document/tamil/02_2023_RI_TAM.pdf


2. ஒருங்கிணைந்த நூலகப் பணிகள் / சார்நிலைப் பணிகள்

ஒருங்கிணைந்த நூலகப் பணிகள் / சார்நிலைப் பணிகள் அடங்கிய 35 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்காகக் கணினி வழித் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுக்குத் தகுதியானவர்கள் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் நிபந்தனை சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி 10-ஆம் வகுப்பு, + 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியுடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருப்பவர்கள் இக்காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பதவி வாரியாக கேட்கப்பட்டுள்ள கல்வித் தகுதிப் பற்றிய விவரங்களை https://www.tnpsc.gov.in/Document/tamil/04_2023_Combined%20Library%20_Tamil.pdf என்கிற இணைப்பில் பார்க்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 1

விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கடைசி நாள்: மார்ச் 6 - 8

மேலும் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/Document/tamil/04_2023_Combined%20Library%20_Tamil.pdf


3. சுற்றுலா அலுவலர்

தமிழ்நாடு பொதுப் பணியில் சுற்றுலா அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்ய எழுத்துத் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இப்பதவிக்குத் தகுதியானவர்கள் பிப்ரவரி 23-ஆம் தேதிக்குள் இணையவழி மூலம் மட்டும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். சுற்றுலாப் படிப்பில் முதுகலைப் பட்டம் அல்லது சுற்றுலாப் பாடத்தைக் கொண்ட ஏதேனும் முதுகலைப் பட்டம் அல்லது சுற்றுலாப் படிப்பில் எம்.பில் அல்லது டிப்ளமோ படிப்பு முடித்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 23

விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கடைசி நாள்: பிப்ரவரி 28 – மார்ச் 2

மேலும் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/Document/tamil/03_2023_TOURIST_OFFICER_TAMIL.pdf


4. வேளாண்மை துறைப் பணிகள்:

வேளாண்மை அலுவலர், வேளாண்மை திட்ட இயக்குநர், தோட்டக்கலை அலுவலர் போன்ற 93 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் வரவேற்கப்படுகின்றன. வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் வேளாண்மைப் படிப்பில் இளங்கலை பட்டமும், திட்ட இயக்குநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் வேளாண்மைப் படிப்பில் முதுகலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 10

விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கடைசி நாள்: பிப்ரவரி 15 - 17

மேலும் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/Document/english/01_2023_Agri%20and%20Horti_English.pdf

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE