அளவற்ற பொருள்களைத் திறனற்ற செயல்பாட்டில் வைத்திருந்தால் எதுவுமே செயலற்றுப்போகும். இது எதற்குப் பொருந்துமோ இல்லையோ மின்னணு சாதனங்களுக்குப் பொருந்தும்.
வீட்டுக்கொரு மரம் இருக்கிறதோ இல்லையோ வீட்டில் ஆளுக்கொரு போன் இருக்கிறது. அந்த மொபைலை சார்ஜ் போட முடியாத சூழலில் நமக்குக் கைகொடுப்பது ‘பவர் பேங்க்’தான். தங்கள் மொபைலுக்கு விலையுயர்ந்த கவர் போடுகிறவர்கள்கூட பவர் பேங்க் இந்த விலைக்குப் போதும் என்று முடிவெடுத்து விடுவார்கள். அங்கேதான் நாம் தவறு செய்கிறோம்.
பொதுவாக நாம் பயன்படுத்தும் பவர் பேங்கின் தரத்தை நாம் கண்டுகொள்வதே இல்லை. விலை மலிவாகக் கிடைக்கும் மின்னணு சாதனங்களால் எப்படிச் சிறப்பான ஆற்றலை வெளிபடுத்த முடியும் என்று யோசிப்பதுகூட இல்லை. 2021ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் 28 வயது இளைஞர் ஒருவர் தரமற்ற பவர் பேங்க் மூலம் மொபைலை சார்ஜ் போட்டதால் பவர் பேங்க் வெடித்து இறந்துவிட்ட செய்தியை நாம் அறிந்திருக்கக்கூடும். அதனால் பவர் பேங்க் வாங்கும்போது கவனம் தேவை. இவற்றைக் கவனியுங்கள்:
• பவர் பேங்க்கின் பயனீட்டு அளவு (mAh) எவ்வளவு இருக்கவேண்டும் என்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.
• பவர் பேங்க்கிற்குப் பயனாளர்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு (Review Star), பயனாளர்களின் கருத்து போன்றவற்றை அவர்களது இணையதளத்தில் பாருங்கள்.
நாம் வாங்கப்போகிற அல்லது வாங்கி வைத்துள்ள பவர் பேங்க்கின் தரத்தை எப்படி அறிவது? ஒவ்வொரு பவர் பேங்க்கின் பின்புறம் அல்லது கீழ்ப்பகுதியில் அந்தந்த பவர் பேங்க் குறித்த விவரங்களைப் போட்டிருப்பார்கள். அதில் BIS (Bureau of Indian Standards)முத்திரை இருக்கிறதா என்று பாருங்கள்.
தங்கம் வாங்கும்போது ஹால் மார்க் மற்றும் BIS முத்திரை உள்ளதுபோல் நாம் வாங்கும் பவர் பேங்க்கிலும் இந்த முத்திரை கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி BIS முத்திரை உள்ள பவர் பேங்க்கைத் தாராளமாக வாங்கலாம். BIS முத்திரை இல்லை என்றால் அதை வாங்காதீர்கள்.
வெறும் முத்திரைதானே அதை யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாமே என்று நினைக்கலாம். அந்த முத்திரை அசலானதா அல்லது போலியானதா என்று கண்டுபிடிக்க ஒரு வழி உள்ளது.
• கூகுள் பிளே ஸ்டோருக்குச் சென்று அதில் BIS CARE என்கிற செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.
• பதிவிறக்கம் செய்யப்பட்ட அந்தச் செயலியினுள் சென்றால் Verify R-no. under CRS என்று BIS சின்னத்துடன் இருப்பதைத் தேர்வு செய்யுங்கள்.
• அதில் இரண்டு தேர்வுகள் இருக்கும். ஒன்று பதிவு எண் மூலம் போவது, மற்றொன்று க்யூ ஆர் கோடு (QR Code) மூலம் போவது.
• பதிவு எண் மூலம் போக நீங்கள் வாங்கிய பவர் பேங்க்கில் BIS முத்திரைக்குக் கீழ் R என்கிற எழுத்தில் ஆரம்பித்து எட்டு இலக்கு எண்கள் கொடுத்திருப்பார்கள். அந்த எட்டு இலக்கு எண்ணை இந்தச் செயலியில் இருக்கும் R என்று ஆரம்பிக்கும் தேர்வுக் கட்டத்தில் டைப் செய்யுங்கள்.
• இன்னொரு வழி உங்கள் பவர் பேங்க்கில் க்யூ ஆர் கோடு இருந்தால் கீழே கொடுத்திருக்கும் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் உள்ளே செல்லுங்கள்.
• இப்பொழுது நீங்கள் கைத்திருக்கும் பவர் பேங்க்கின் மொத்த தகவலும் உங்களுக்கு வந்துவிடும். அதில் Status என்கிற இடத்தில் Operative என்று பச்சை நிறத்தில் தெரிந்தால் அது அசல். நீங்கள் சரியான பதிவு எண் கொடுத்தும் எந்த விவரத்தையும் காட்டவில்லை என்றால் அது போலி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago