300 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: எல்.ஐ.சி அறிவிப்பு

By ராகா

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியில் உதவி நிர்வாக அலுவலர் (Additional Administrative Officer) பதவிக்கான 300 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக எல்.ஐ.சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முக்கிய தேதிகள்: ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் இணையவழியில் மட்டும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளக் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படவில்லை என்பதால் கவனமாகப் பிழையின்றி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இணையவழியில் நடைபெறும் தேர்வுகளில் பிப்ரவரி 15ஆம் தேதிக்குப் பின் முதல்நிலை தேர்வும், மார்ச் 15ஆம் தேதிக்குப் பின் முதன்மைத் தேர்வும் நடைபெற உள்ளது. உறுதி செய்யப்பட்ட தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு அடிப்படை ஊதியம் ரூ. 53,600 வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.01.2023 அன்று 21 வயது பூர்த்தி செய்தவராகவும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டியது அவசியம். மேலும் அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களுக்கு எல்.ஐ.சி இணையதளத்தைப் பார்க்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: எல்.ஐ.சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களைச் சரியாகப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ. 700ஐ செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் முதல் நிலை, முதன்மைத் தேர்வுகளும், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி மாவட்டங்களில் முதல் நிலைத் தேர்வு மட்டும் நடைபெற உள்ளது.

தேர்வு முறை: முதல் நிலைத் தேர்வில் கலந்து கொண்டவர்களிலிருந்து தகுதியானவர்கள் முதன்மைத் தேர்வுக்கும், அதனை அடுத்து நேர்முகத் தேர்வுக்கும் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதியில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு: https://licindia.in/Bottom-Links/Careers/Recruitment-of-AAO(Generalist)-2023

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்