தமிழ் மண்ணின் மாண்பு - பாரம்பரிய அரிசியில் பொங்கல்

By நிஷா

பாரம்பரிய நெல் ரகங்களின் எண்ணிக்கையும் அவற்றின் சாகுபடியும் இன்று வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்தச் சூழலில், பாரம்பரிய நெல் ரகங்களைக் கவனப்படுத்தி, அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் ‘செம்புலம்’ அமைப்பு தீவிரக் களப்பணியாற்றி வருகிறது.

பொங்கல் பண்டிகை அரிசியுடன் நெருக்கமாக இணைந்த ஒன்று என்பதால், ‘செம்புலம்’ அமைப்பினர் பொங்கல் பண்டிகைக்கு என்று பாரம்பரிய அரிசி வகைகளை உள்ளடக்கிய ‘தமிழ் மண்ணின் மாண்பு’ எனும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிவருகின்றனர்.

அரிசி தமிழ் மக்களின் பிரதான உணவாகும். பொங்கல் பண்டிகை காலத்தில் தமிழ்நாட்டில் பரவலாக நெல் அறுவடை செய்யப்படுகிறது. ‘செம்புலம்’ வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களின் தனித்துவமான 38 அரிசி வகைகளை ஒன்று சேர்த்து வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் அரிசி பல்வகைமையை கொண்டாடும் ஒரு நிகழ்வாகவும் அதைப் பல நூற்றாண்டுகளாகப் பாதுகாத்து வரும் விவசாயிகளைக் கௌரவிக்கும் விதமாகவும் இந்தப் பரிசுத் தொகுப்பைச் செம்புலம் வழங்குகிறது.

பாரம்பரிய அரிசி வகைகளின் சுவையை இந்த முயற்சி வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும். அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வையும் வாடிக்கையாளர்களுக்கு அது ஏற்படுத்தும். அந்தப் பொங்கல் தொகுப்பில், நான்கு பேருக்குச் சீரகச் சம்பா சர்க்கரைப் பொங்கல் தயாரிக்கத் தேவையான அனைத்துப் பொருட்களும், நான்கு பேருக்கு தூயமல்லி வெண்பொங்கல் தயாரிக்கத் தேவையான அனைத்துப் பொருட்களும் அடங்கியுள்ளன.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.sempulam.com/product-page/pride-of-tamil-nadu-rice-gift-box

தொடர்புக்கு: +91 97901 26979 / sempulamss@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE