தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மதுரை மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிகளுக்காகப் பட்டியல் எழுத்தர், உதவியாளர், பருவகால காவலர் ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப உள்ளது. மதுரை மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்டவர்கள் உரிய ஆவணங்களுடன் இந்தக் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பட்டியல் எழுத்தர் (150), உதவியாளர் (பெண்கள் உள்பட) (150), பருவகால காவலர் (150) என மொத்தம் 450 காலியிடங்களுக்கான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் 2023 ஜனவரி 10ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பட்டியல் எழுத்தர் பணிக்கு இளநிலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டம் முடித்தவர்கள்; உதவியாளர் பணிக்கு பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்; பருவகால காவலர் பணிக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 32 வயதுக்குட்பட்டோர் உரிய கல்வி தகுதிகளுடன் இருப்பின் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்பலாம். எஸ்.சி., எஸ்.டி, எஸ்.சி (ஏ) பிரிவினருக்கு 37 வயது வரையும், எம்.பி.சி, பி.சி, பி.சி (எம்) பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 34 வயது வரையும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. இப்பணிகளுக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» “புரோகிராமிங், பொறியியல் மட்டும் அல்ல...” - தொழில்நுட்ப துறை இளைஞர்களுக்கு சுந்தர் பிச்சை அறிவுரை
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
விண்ணப்பங்களை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 10, குருவிக்காரன் சாலை, அண்ணாநகர், மதுரை 20 என்று முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஒரு நபர் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்களுக்கான நேர்காணல் ஜனவரி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதிக்குள் நடைபெறும்.
இது குறித்த விரிவான தகவல்கள் அறிய: https://bit.ly/3voQ7kE
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago