முனைவர் கு.வி. கிருஷ்ணமூர்த்திக்கு விருது

By நிஷா

ஆண்டுதோறும் ‘உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தால் வழங்கப்படும் விருதுகள் தமிழ்ச் சமூகத்தின் பெருமைக்குரிய விருதுகளாகக் கருதப்படுகின்றன. தமிழ் உலகில் சிறந்து விளங்கும் தமிழறிஞர்களையும் தமிழ்ப் படைப்பாளிகளையும் பிறதுறை வல்லுநர்களையும் ஊக்குவிக்கும் விதமாக அந்தப் பண்பாட்டு மையம் 2013 முதல் தொடர்ந்து விருதுகளை வழங்கிவருகிறது. அந்த வகையில் இந்தாண்டு பிறதுறை வல்லுநருக்கான விருதுக்கு முனைவர் கு.வி.கிருஷ்ணமூர்த்தியை அது தேர்வு செய்துள்ளது.

பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி தாவரவியல் சார்ந்து தமிழில் எழுதி வருபவர்களில் முதன்மையானவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தாவரவியல் துறையின் தலைவராகச் செயல்பட்டு ஓய்வு பெற்றவர். ‘தமிழரும் தாவரமும்’, ‘அறிவியலின் வரலாறு’, அறிவியலில் பெண்கள் – ஒரு சமூக வரலாற்றுப் பார்வை’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர்.

மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற அவரது ‘தமிழரும் தாவரமும்’ எனும் நூல் தமிழ் உலகின் முக்கியமான நூல்களில் ஒன்று. உலகின் மூத்த குடிகளில் ஒன்றான தமிழர்களுக்கும், தாவரங்களுக்கும் இடையிலான தொன்மையான உறவை விளக்கும் அந்த நூல், தாவரங்களுடன் தமிழர்கள் கொண்டுள்ள நுட்பமான உறவின் நீண்ட நெடிய தொடர்ச்சியை நமக்கு அறிமுகம் செய்கிறது. அந்த நூலில் இடம்பெற்றுள்ள தமிழகத்தின் இயற்கைச் சூழல், தமிழரின் தாவர அறிவியல் புலமை, தமிழகத்தின் இயல் தாவரங்களும், அயல் தாவரங்களும் தமிழரின் ஆன்மவியலும், வேளாண் மற்றும் தோட்டத்தாவரங்களும் தமிழரும், தாவரங்களும், தமிழர் உணவும், தாவரங்களும், தமிழர் மருந்தும், தமிழகத்தில் தாவரப் பயன்பாடும் தாவரம் சார் தொழில்களும், தமிழகத் தாவரப் பொருட்களின் வணிகம் உள்ளிட்ட ஆய்வுக்கட்டுரைகள் நம் மேன்மையைப் பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளன.

நம் பண்பாட்டின் சிறப்பையும் கலாச்சாரத்தின் பெருமையையும் உணர்த்தும் விதமாக இவர் எழுதியிருக்கும் நூல்கள் அனைத்தும் மாணவர்களும், பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் வாசகர்களும் படைப்பிலக்கியாவதிகளும் தவறாமல் வாசிக்க வேண்டியவையாகத் திகழ்கின்றன. நமது தொன்மையான பாரம்பரியத்தின் நீட்சியாக வாழ்ந்துவரும் / எழுதிவரும் கு.வி.கிருஷ்ணமூர்த்திக்குப் பிறதுறை வல்லுநருக்கான விருது 2023 ஜனவரி 7 அன்று வழங்கப்பட இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்