மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் (Staff Selection Commission) பல்வேறு துறைகளில், இளநிலை உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பணிகளுக்கு 4,500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்குத் தேர்வாணையத்தின் ssc.nic.in என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இளநிலை உதவியாளருக்கு (ரூ. 19,900 - ரூ. 63,200), டேட்டா என்ட்ரி ஆபரேட்டருக்கு (ரூ. 29,200 – 92,300), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் குரூப் ஏ பணிக்கு (ரூ. 25,500 - ரூ. 81, 100) எனவும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022 ஜனவரி 1ஆம் தேதியின்படி விண்ணப்பதாரரின் வயது 18க்கு மேலும், 27க்குக் கீழும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். இத்தகுதியைப் பூர்த்தி செய்பவர்கள் காலியிடங்களுக்காக விண்ணப்பிக்கலாம். இணையவழி விண்ணப்பத்துக்கான கட்டணம் ரூ.100ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்கள், பழங்குடியினர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. 2023 ஜனவரி 4ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ssc.nic.in இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Apply’ என்கிற பொத்தானை அழுத்தி ‘CHSL’ என்பதை அழுத்துங்கள். அங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து, தேவையான ஆவணங்களைச் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி வெளியேறுங்கள்.
» “புரோகிராமிங், பொறியியல் மட்டும் அல்ல...” - தொழில்நுட்ப துறை இளைஞர்களுக்கு சுந்தர் பிச்சை அறிவுரை
» தமிழக அரசுப் பள்ளிகளில் தொடங்கியது ‘வானவில் மன்றம்’ - நோக்கம், செயல்பாடுகள் என்னென்ன?
இணையவழியில் நடத்தப்படும் இத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டத் தேர்வு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கான இரண்டாம்கட்ட தேர்வு பின்னர் நடத்தப்படும்.
முதற்கட்ட தேர்வு நடைபெறும் இடங்கள்: புதுச்சேரி, சென்னை, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் போன்ற இடங்களில் முதற்கட்ட தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு பாடத்திட்டம், தேர்வு முறை, மதிப்பெண் வழங்கல் முறை, மேலும் பல முக்கியமான விவரங்களுக்கு https://bit.ly/3PV9Bqz என்கிற இணைப்பைப் பாருங்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago