டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 24

By செய்திப்பிரிவு


வேதியியல்

ஒரே மாதிரியான மூலக்கூறுகள் அல்லது அணுக்களால் உருவாக்கப்பட்டது தனிமம் ஆகும்.
தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களின் எண்ணிக்கை 112. அவற்றுள் தீங்கு விளைவிக்கக்கூடிய கதிர்களை உமிழும் கதிரியக்க தனிமங்களின் எண்ணிக்கை 30 . தனிமத்தின் மிகச்சிறிய அலகு அணு. அணு என்ற சொல்லுக்கு 'பிரிக்க முடியாத' என்று பொருள். அணுவில் உள்ள பிரிக்கக்கூடிய துகள்கள் புரோட்டான்கள், எலெக்ட்ரான்கள், நியூட்ரான்கள். ஒரு பொருளின் வேதியியல், தன்மைகளைக் காட்டும் மிகச்சிறிய அலகுதான் மூலக்கூறு எனப்படுகிறது. ஆக்சிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன், குளோரின் போன்றவை ஈரணு மூலக்கூறு உடையவை. ஓசோன் மூலக்கூறுக்கு மூன்று அணுக்கள் உள்ளன. தாமிரம், வெள்ளி ஆகியவை ஓரணு தனிமங்களாகும்.

சில வேதிப்பெயர்களும் அவற்றுக்கான லத்தீன்பெயர்களும்

வேதிப்பெயர் லத்தீன் பெயர் ஆண்டிமணி ஸ்டிபியம் டங்ஸ்டன் உல்ஃப்ரம் தங்கம் ஆரம் வெள்ளி அர்ஜென்டம் பாதரசம் ஹைட்ரார்ஜீரம் தாமிரம் குப்ரம் காரீயம் ப்ளம்பம் தகரம் ஸ்டான்னம் இரும்பு ஃபெர்ரம் சோடியம் நேட்ரியம் பொட்டாசியம் காலியம்

டோமியோ என்கிற கிரேக்கச் சொல்லிற்கு பிரி அல்லது உடை என பொருள்படும். அனைத்துத் தனிமங்களும் மேலும் பிளக்க முடியாத அணுக்கள் என கூறப்படும் சிறு துகள்களால் ஆனது எனக் கூறியவர் ஜான் டால்டன். சேர்மம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் இணைந்து உருவாகும் பொருள். கார்பன்-டை-ஆக்ஸைடு, குளோரோஃபில், நீர் ஆகியன சேர்ம வகையைச் சார்ந்தவை.

சில பொருள்களின் வேதிப்பெயர்

பொருள் வேதிப்பெயர் மண் சிலிகான் - டை ஆக்ஸைடு எரிசோடா சோடியம் ஹைடிராக்சைடு எரி பொட்டாஷ் பொட்டாசியம் ஹைடிராக்சைடு சலவை சோடா சோடியம் கார்பனேட் ரொட்டி சோடா சோடியம் - பை கார்பனேட் சலவைத்தூள் கால்சியம் ஆக்சி குளோரைடு சமையல் உப்பு சோடியம் குளோரைடு முகரக்கூடிய உப்பு அம்மோனியம் கார்பனேட் சுண்ணாம்புக் கல் கால்சியம் கார்பனேட் ஹைப்போ சோடியம் தயோ சல்பேட் சோப்பு சோடியம் பால்மிடேட் எப்சம் மக்னீசியம் சல்பேட் பாரீஸ் சாந்து கால்சியம் சல்பேட் சர்க்கரை சுர்க்கோஸ் வெள்ளை விட்ரியால் ஜிங் சல்பேட் பச்சை விட்ரியால் ஃபெர்ரஸ் சல்பேட் நீற்று சுண்ணாம்பு கால்சியம் ஹைடிராக்சைடு மயில் துத்தம் காப்பர் சல்பேட் உறைகலவை பனிக்கட்டி+ சோடியம் குளோரைடு

நீரின் மூலக்கூறை ஹைட்ரஜன் மோனாக்சைடு அல்லது ஆக்சிஜன் ஹைட்ரைடு எனலாம்.
நீரின் கன அளவை ஹாப்மன் வோல்டா மீட்டர் மூலம் கண்டறியலாம். எதிர் சவ்வூடு பரவல் முறையில் கடல்நீரைக் குடிநீராக மாற்றலாம்.
காப்பர் சல்பேட்டும் சுண்ணாம்பு நீரும் சேர்ந்த கலவை போர்டோ கலவையாகும். காற்று ஒருபடித்தான கலவையாகும். இரும்புத்தூள், மரத்தூள், சாதாரண உப்பு ஆகியவை பலபடித்தான கலவைகளாகும். புகை என்பது காற்றும் கார்பன் துகள்களும் கலந்த கலவையாகும். பியூட்டேன், பென்டேன் வாயுக்களின் கலவையே சமையல் எரிவாயு ஆகும்.

சில பொருட்கள், தயாரிப்புகள், செயல்களுக்குத் பயன்படும் வேதிப்பொருள்கள்

பொருட்கள்/தயாரிப்புகள்செயல்கள் வேதிப்பொருள்கள் சாக்பீஸ் கால்சியம் கார்பனேட் நீரைத் தூய்மைபடுத்த பொட்டாஷ் படிகாரம் உணவுப் பொருள் கெடாமலிருக்க சோடியம் பென்சோயேட் முடிச்சாயம் தயாரிப்பு சில்வர் நைட்ரேட் எலும்பு முறிவு சிகிச்சை பாரீஸ் சாந்து அன்ட்ஆசிட் மருந்துகள் சோடியம் பை கார்பனேட் தீப்பெட்டித் தொழில் பொட்டாசியம் குளோரேட் வெடி மருந்துகள் பொட்டாசியம் நைட்ரேட் புகைப்படத் தொழில்

சில்வர் நைட்ரேட்

சில்வர் புரோமைடு


ஹைப்போ

பிளீச்சிங் குளோரின் தீயணைக்கும் கருவி சோடியம் பை கார்பனேட் சலவைத்தூள், போர்டோகலவை கால்சியம்
ஹைடிராக்சைடு சாயத் தொழில், அச்சுத் தொழில், முலாம் பூசுதல் காப்பர் சல்பேட் சோப்பு தயாரிப்பு, கண்ணாடி தயாரிப்பு, கடின நீரை மென் நீராக்க சோடியம் கார்பனேட் காளான் கொல்லி காப்பர் சல்பேட் பூச்சிக்கொல்லி போர்டோ கலவை மலச்சிக்கல் எப்சம் உப்பு துப்பாக்கி தூள், பட்டாசுகள் சோடியம் நைட்ரேட் தோல் பதனிடுதல் பொட்டாஷ் படிகாரம்

அம்மோனியம் பாஸ்பேட் உரமாக பயன்படுகிறது. எதஎரிதலுக்கு துணை புரியும் வாயு ஆக்சிஜன். எலும்பு மற்றும் பற்களில் உள்ள தனிமம் கால்சியம் பாஸ்பேட்.
அமிலத்துக்கான ஆங்கிலச் சொல்லான ஆசிட்(Acid), அசிடஸ் என்ற லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து வந்தது. நீரில் கரைக்கப்படும் போது ஹைடிரஜன் அயனிகளைக் கொடுப்பது அமிலம் ஆகும். தாவரங்களிலிருந்தும் விலங்குகளிலிருந்தும் பெறப்படும் அமிலங்கள் கரிம அமிலங்கள் எனவும் தாதுப்பொருட்களிலிருந்து பெறப்படும் அமிலங்கள் கனிம அமிலங்கள் எனவும் கூறுகிறோம். வேதிப் பொருட்களின் அரசன் என அழைக்கப்படும் அமிலம் கந்தக அமிலமாகும். நைட்ரிக் அமிலத்தின் பொதுப்பெயர் அக்குவா போர்டிஸ். தோல், உலோகங்கள் ஆகியவற்றை அரிக்கும் தன்மையுடையது அமிலம். அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பு நிறமாக மாற்றும். பினாப்தலின் நிறங்காட்டியுடன் அமிலங்கள் வினைபுரிந்து நிறமற்ற தன்மையைத் தரும். மேலும் மெதில் ஆரஞ்சுடன் வினைபுரிந்து இளஞ்சிவப்பு நிறத்தை கொடுக்கும்.

சில அமிலங்களும் அவை காணப்படும் பழம்/பொருட்களும

அமிலம் பழம்/பொருள் சிட்ரிக் சிட்ரஸ் பழங்கள் (எலுமிச்சை போன்றவை) லாக்டிக் புளித்த பால் ஃபார்மிக் தேனீ, எறும்பு
கொடுக்கு பியூட்ரிக் கெட்டு போன வெண்ணெய் டார்டாரிக் திராட்சை, புளி அசிட்டிக் வினிகர் மாலிக் ஆப்பிள் ஆக்சாலிக் தக்காளி யூரிக் சிறுநீர் ஸ்டியரிக் கொழுப்புகள் கோலிக் பித்த நீர் கார்பானிக் பருகக்கூடிய சோடா.

தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்
முந்தைய பகுதி
- https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/896879-tnpsc-group-1-simple-notes-for-preparation-part-23-3.html

நிறைவுப் பகுதி நவம்பர் 18 (வெள்ளிக்கிழமை) அன்று வெளியிடப்படும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்