தாவரவியல் - 1 எளிய குறிப்புகள்
பலதரப்பட்ட உயிரினங்களுக்கு இடையே காணப்படும் வேறுபாடுகளை உயிரனப்பன்மை (Bio - Diversity) எனக் கூறுகிறோம்.
உயிரியலின் ஒரு பிரிவான வகைப்பாட்டியல் (Taxonomy) தொடர்புடையவை- உயிரினங்களை இனம் கண்டறிதல், பெயரிடுதல், வகைப்படுத்துதல் .
இந்திய ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் சராகா சில தாவரங்களையும் விலங்குகளையும் இனமறிந்து விவரித்தார். மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் ஹிப்போகிரேட்டஸ் மருத்துவம் சார்ந்த சில உயிரினங்களைப் பட்டியலிட்டார். முதன்முறையாக செயற்கை வகைப்பாட்டு முறையை ப்ளைனி தி எல்டர் தனது நூலான ‘ஹிஸ்டாரியா நாச்சுராலி’ஸில் (Historia Naturalis) அறிமுகம் செய்தார். அறிவியல் அறிஞர் ஜான் ரே சிற்றினம் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார். வகைப்பாட்டியலின் அடிப்படை அலகு சிற்றினம் (Species). வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படும் கரோலஸ் லின்னேயஸ் தனது நூலான ஸ்பிசிஸ் பிளேண்ட்டேரம் (Species Plantarum) என்ற நூலில் 5900 தாவர சிற்றினங்களையும், சிஸ்டமே நேச்சுரே (Systama Naturae) என்ற நூலில் 4200 விலங்கு சிற்றினங்களைப் பற்றியும் விளக்கமாக விவரித்துள்ளார்.
மொனிரா, புரோட்டிஸ்டா, பூஞ்சைகள், தாவரங்கள், விலங்குகள் எனும் ஐந்துலக வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் விட்டேகர் ஆவார். மேம்பாடு அடையாத உட்கருவைக் கொண்ட உயிரினங்கள் புரோகேரியாட் ஆகும். மொனிராவில் அனைத்து புரோகேரியாட் உயிரினங்களும் அடங்கும். மேம்பாடு அடைந்த உட்கருவைக் கொண்ட உயிரினங்கள் யூகேரியாட் ஆகும். புரோட்டிஸ்டாவில் ஒர் செல்லாலான நீர் வாழ் யூகேரியாட்கள் அனைத்தும் அடங்கும். மோல்டுகள், மஸ்ரூம்கள், நாய்க்குடைகள், பஃப் பந்துகள், நிலக்குடைகள் பூஞ்சையில் அடங்கும். ஆல்காக்கள், பிரையோபைட்டுகள், டெரிடோபைட்டுகள், ஜிம்னோஸ்பெர்ம் மற்றும் ஆஞ்சியோஸ்பெர்ம் ஆகியவை தாவரங்களில் அடங்கும். விலங்கினங்களில் பல செல்கள் உடைய யூகேரியாட் உயிரினங்கள் அடங்கும்.
மூலக்கூறு அறிவியல் அறிஞர்கள்
இ. வோஸ், ஓ காண்ட்லர், எம். வீலிஸ் ஆகியோர் 1990 ஆம் வருடம் உயிரினங்களை யூகேரியா, பாக்டீரியங்கள், ஆர்க்கியா ஆகிய மூன்று வகைகளாக பிரித்தனர். 80 டிகிரி செல்சியஸ், அதிக உப்புச்செறிவு, அமிலத்தன்மை கொண்ட மண், ஆக்சிஸஜனற்ற நிலை போன்றவற்றில் ஆர்க்கியா பாக்டீரியங்கள் உயிர் வாழ்கின்றன.
» டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 22
» டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 21
தாவரப்பிரிவுகள்
தாவரங்களைப் பற்றிய படிப்பு தாவரவியல் எனப்படுகிறது. தாவரவியலின் தந்தை தியோபிராஸ்டஸ் ஆவார். தாவரங்களை பூக்கும் தாவரம் (Phenerogams) பூவா தாவரம் (Cryptogams) என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். பூக்கும் தாவரத்தை ஜிம்னோஸ்பெர்ம்(Gymnosperm) ஆஞ்சியோஸ்பெர்ம் (Angiosperm) என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். மேலும் ஆஞ்சியோஸ்பெர்மை ஒருவித்திலைத் தாவரம், இருவித்திலைத் தாவரம் என இரு பிரிவுகளாக பகுக்கலாம். பூவாத் தாவரத்தை தாலோபைட்டா (Thallophyte) (ஆல்கா, பூஞ்சை, பாக்டீரியா), பிரையோபைட்டா (Bryophyta) (ரிக்சியா, மார்கன்சியா) மற்றும் டெரிடோபைட்டா (Pteridophyte)பெரணி வகைகள்) என மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
வைரஸ்கள்
நுண்ணிய எலெக்ட்ரான் நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க முடிந்த உயிருள்ள, உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்று நோய்களை உருவாக்கக் கூடியவையாக செல்லுக்குள் வாழும் ஒட்டுண்ணிகள் என வைரஸ் வரையறுக்கப்படுகிறது. பொ.ஆ. 1892 இல் வைரஸை ரஷ்ய அறிவியல் அறிஞர் டிமிட்ரி ஐவனோஸ்கி கண்டறிந்தார். விஷம் எனும் பொருள் படும் விரியான் (virion) என்ற சொல்லிலிருந்து வைரஸ் என்ற சொல் வந்திருக்கலாம். படிக வடிவில் வைரஸை பிரித்தெடுத்த அறிவியல் அறிஞர் W.M ஸ்டான்லி. வைரஸ்கள், கேப்சிட் எனும் புரத உறையால் சூழப்பட்ட நியூக்ளிக் அமிலத்தை உடையவை. கேப்சிட்டின் ஒரே மாதிரியான சிறிய அலகு கேப்சோமியர்கள் ஆகும். அவை ஓம்புயிர் செல் அல்லது விலங்கு செல்லினுள் மட்டுமே பெருக்கம் அடையும். வளர்சிதை மாற்றத்திற்கான அமைப்பை வைரஸ் பெற்றிருப்பதில்லை. அடினோ வைரஸ்கள், எச்.ஐ.வி வைரஸ்கள் கனசதுர அமைப்பில் உள்ளவை. புகையிலை மொசைக் வைரஸ்,இன்புளுயன்சா வைரஸ் சுருள் வடிவ அமைப்பில் உள்ளன. பாக்டீரியாபேஜ்,பாக்ஸ் முதலியன சிக்கலான அல்லது அசாதாரண வடிவமுள்ளவை.
ஒம்புயிரின் அடிப்படையில் வைரஸ் தாவரம், விலங்கு, பூஞ்சை, பாக்டீரியா வைரஸ் என நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. காலிஃபிளவர் மொசைக் வைரஸ் (டி.என்.ஏ.) தவிர அனைத்து தாவர வைரஸ்களும் ஆர்.என்.ஏ. வை மரபுப் பொருளாக கொண்டிருக்கும். விலங்குகளை தாக்கி உருவாகும் வைரஸ்கள் விலங்கு வைரஸ்களாகும்.
சில விலங்கு வைரஸ்கள்
1. கரோனா (சார்ஸ்)
2. ரெட்ரோ (அ) எச்.ஐ.வி.(எய்ட்ஸ்)
3. ரேபிஸ் (அ) (வெறி நாய்க்கடி)
லிஸ்ஸா
4. பாராமிக்சோ (பொன்னுக்கு வீங்கி)
5. ஹெப்படைட்டிஸ் (மஞ்சள்காமாலை)
6. ஃபிளேவி (டெங்கு)
7. போலியோ
8. வேரிசெல்லா சோஸ்டர் (சின்னம்மை)
9. ஆன்கோஜெனிக் (SV 40)
(புற்றுநோய்)
நீலப்பச்சைபாசிகளைத் தாக்கி நோய் ஏற்படுத்தும் வைரஸ்கள் சயனோஃபேஜ்கள் என்றும் பூஞ்சைகளுக்கு நோய் உண்டாக்கும் வைரஸ்கள் மைக்ரோ வைரஸ்கள் என்றும் பாக்டீரியங்களைத் தாக்கி அழிக்கும் வைரஸ்கள் பாக்டீரியாஃபேஜ்கள் எனவும் கூறப்படுகின்றன. எயிட்ஸ் நோய்க்கு. மருந்து இல்லையென்றாலும் அசிட்டோ தைமிடின் போன்ற மருந்தினால் தாக்கப்பட்டவர்கள் வாழ்நாளை ஒரு சில மாதங்கள் அதிகரிக்க மட்டுமே முடியும். ரத்த மாற்று, திசு மற்றும் உறுப்பு
மாற்றம் ஆகியவற்றை நோய் வாய்ப்பட்டவரிடமிருந்து தானமாக பெறுதல், மேலும் கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகள், சிரிஞ்சுகள் ஆகியவற்றை உபயோகப்படுத்துதல் மூலமாக பரவும்.
வைரஸ் தாக்குதலுக்கு மனித உடலில் தோன்றும் முதல் எதிர்ப்பு பொருள் இன்டர்ஃபெரான்கள் (Interferon) ஆகும். இவை சைட்டோகைனின் பிரிவைச்சார்ந்த புரதங்கள்.
ஆண்டன்வான் லியுவென்காக் முதன்முதலில் பாக்டீரியங்களை கண்டறிந்தார். நோய்கள் பற்றிய ஜெர்ம் (Germ) கொள்கையை வெளியிட்டவர் லூயி பாஸ்டர்.
தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்
முந்தைய பகுதி - https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/895571-tnpsc-group-1-simple-notes-for-preparation-part-22-6.html
அடுத்த பகுதி நவம்பர் 16 (புதன்கிழமை) அன்று வெளியிடப்படும்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago