பாரம்பரிய அரிசியில் தீபாவளி பலகாரங்கள்

By நிஷா

பாரம்பரிய நெல் ரகங்களின் எண்ணிக்கையும் அவற்றின் சாகுபடியும் இன்று வெகுவாகக் குறைந்துவிட்டது. இவற்றில் பல நெல் ரகங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.

அழிவின் விளிம்பிலிருந்து பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ‘நம்ம நெல்லு’ தீவிரக் களப்பணியாற்றி வருகிறது. ‘செம்புலம் சஸ்டைனபிள் சொல்யூஷன்ஸ்’ எனும் அமைப்பின் வாயிலாகப் பாரம்பரிய அரிசி வகைகளைச் சந்தைப்படுத்த விவசாயிகளுக்கு அது உதவுகிறது.

இந்த முயற்சியின் நீட்சியாகத் தற்போது ‘நம்ம நெல்லு’ தீபாவளியை முன்னிட்டு 'ஸ்வீட் காரம் காபி’ எனும் வீட்டு உணவு தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோத்திருக்கிறது. பாரம்பரிய அரிசி ரகங்களில் தயாரிக்கப்பட்ட தீபாவளி பலகாரங்கள் அடங்கிய பரிசுப் பெட்டியை அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. பாரம்பரிய அரிசி வகைகளின் சுவையை இந்த முயற்சி வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும். அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வையும் வாடிக்கையாளர்களுக்கு அது ஏற்படுத்தும். அந்தப் பரிசுப் பெட்டியில் இருக்கும் பலகாரங்கள் :

கருப்புக் கவுனி அரிசி அதிரசம்

இந்த அதிரசம் கருப்பு கவுனி அரிசியில் தயாரிக்கப்படுகிறது. இந்த அரிசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது நம் உடலில் செல் சேதத்தைத் தடுக்கிறது அல்லது மெதுவாக்குகிறது. மேலும், இது ரத்த அழுத்த அளவை சமன் செய்கிறது. நீரிழிவு, புற்றுநோய், இதயம் தொடர்பான பிரச்சினைகளைக் குறைக்கிறது.

தூயமல்லி காரசேவ்

இந்தப் பலகாரம் தூயமல்லி சம்பா அரிசியில் தயாரிக்கப்படுகிறது. இந்த அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, மாவுச்சத்து, புரதச் சத்து உள்ளிட்டவை நிரம்பியுள்ளன. தூயமல்லி அரிசியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், நீரிழிவு நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. இது ரத்தத்தையும் சுத்தப்படுத்தி உடலைப் புத்துணர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

கைவரி சம்பா ரிப்பன் பக்கோடா

இந்த ரிப்பன் பக்கோடா கைவரி சம்பா அரிசி மூலம் தயாரிக்கப்படுகிறது. இதன் மீது கோடுகள் இருக்கும். ஊட்டச்சத்து மிகுந்த இந்த அரிசி ரத்த சர்க்கரை அளவைப் பெருமளவில் குறைக்க உதவுகிறது.

கொத்தமல்லி சம்பா அரிசி - பேரீச்சம்பழ லட்டு

இந்த லட்டு, பாரம்பரிய அரிசி வகையான கொத்தமல்லி சம்பா அரிசி மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த அரிசி ரகத்தில் புரதம், இரும்பு, கால்சியம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுக்கள் மிகுந்துள்ளன. இந்தத் தானியங்கள் கொத்தமல்லியைப் போன்று இருப்பதால் இது கொத்தமல்லி சம்பா என அழைக்கப்படுகிறது. இந்த லட்டின் சுவை குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும்.

நவரா அரிசி - முந்திரி லட்டு

இந்த லட்டு கேரளத்தின் பாரம்பரிய அரிசி ரகமான நவராவில் தயாரிக்கப்படுகிறது. இந்த அரிசி பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாகிறது. ஆயுர்வேத மருத்துவச் சிகிச்சையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த அரிசியை 6 மாதக் குழந்தை முதல் பெரியவர்கள்வரை சாப்பிடலாம். நோய்களிலிருந்து மீண்டு வருபவர்களும் இதை உட்கொள்ளலாம்.

தொடர்புக்கு: +91 97901 26979 / sempulamss@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE