தென் அமெரிக்க நாடுகளில் வெப்பமும் பனியும் கொண்ட அற்புதமான காலநிலையைக் கொண்ட நாடு சிலி. சுற்றுலா சென்று வருவதற்கான சிறந்த தேசங்களில் ஒன்று. புவியியல் மற்றும் சூழியல் ரீதியாக உலகில் அதிகமான எரிமலைகளை கொண்ட நாடுகளில் 2,000 தொடர் எரிமலைகளைக் கொண்டிருக்கும் இரண்டாவது நாடும் இதுதான். ஆங்கிலம் பொதுமொழி என்றாலும் ஸ்பானிய மொழியே அங்கே தேசிய மொழி. அலுவல் ரீதியாக சிலிக் குடியரசு என அழைக்கப்படும் சிலி நாடு, கிழக்கில் ஆண்டிஸ் மலைத்தொடரையும் மேற்கில் பசுபிக் பெருங்கடலையும் இயற்கையின் வரமாகப் பெற்றுள்ளது. அதேபோல் வடக்கில் பெரு நாட்டையும் வடகிழக்கில் பொலிவியா, கிழக்கில் அர்ஜென்டினா மற்றும் தெற்கில் ட்ராகே பாசேஜ் ஆகியவற்றையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மூன்று பசிபிக் தீவுகளும், ஓசனியாவில் அமைந்த ஈஸ்டர் தீவும் சிலியின் ஆட்சிப்பகுதிக்கு உட்பட்டவை.
ஐக்கிய நாடு அவை தொடங்கப்பட்டபோதிலிருந்து அதன் தொடக்க கால உறுப்பினராக இருந்து வருகிறது சிலி. தவிர தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் (UNASUR), லத்தீன் அமெரிக்கா - கரிபீயன் நாடுகளின் கூட்டமைப்பு (CELAC) ஆகியவற்றிலும் உறுப்பினராக அங்கம் வகிக்கிறது.
100 ஆண்டுகளில் சிலியன் சினிமா
சிலியின் பண்பாட்டில் சினிமாவுக்கான இடம் 1910ஆம் ஆண்டில் சலனப் பட தயாரிப்பு முதலே தொடங்கிவிடுகிறது. 40 மற்றும் 50களில் வளரும் நிலையில் இருந்த சிலி சினிமாவுக்கு அரசு உதவிகள் தராளமாக கிடைத்தன. பின்னர் 60களில் ‘புதிய அலை சிலி’மாக்கள் அடுத்து வந்த மூன்று பத்தாண்டுகளுக்குத் தொடர்ந்து தனித்துவத்துடன் வெளிவரத் தொடங்கின. ஆனால், 1973இல் நடந்த ராணுவப் புரட்சி காரணமாக ஏற்பட்ட ராணுவ ஆட்சியால் திரைப் படைப்பாளிகள் நாடு கடத்தப்பட்டார்கள். என்றாலும் படைப்பாளிகள் ராணுவ ஆட்சியை விமர்சனம் செய்யும் திரைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டார்கள். ஆனால் சிலி சினிமாக்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மற்ற அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவாக இருந்தது. ராணுவ ஆட்சி முடிந்து குடியரசு மலர்ந்த பிறகு புத்தாயிரம் முதல் சிலி சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டது என்றே சொல்ல வேண்டும். அதன்பிறகு சிலி திரைப்படங்கள் இடம்பெறாத சர்வதேசப் படவிழாக்களே இல்லை எனும் நிலை உருவானது.
ஆர்லாண்டோ லுபர்ட் இயக்கிய 'எ கேப் ஃபார் த்ரீ' (2002), ஆண்ட்ரேஸ் வுட் இயக்கிய ‘மச்சுகா’(2004), பாப்லோ லாரெய்ன் இயக்கிய ‘டோனி மானேரோ’ (2008), செபாஸ்டியன் சில்வா இயக்கிய ‘தி மெய்ட்’ (2009), மத்தியாஸ் பைஸ் இயக்கிய ‘தி லைஃப் ஆஃப் ஃபிஷ்’ (2010) தொடங்கி புத்தாயிரத்தின் சிலி சினிமாக்கள் உள்ளூர் பாக்ஸ் ஆபீஸிலும் உலக சினிமா அரங்கிலும் ஆஸ்கர் அரங்கிலும் தனி கவனம் பெற்று வருகின்றன. அதேபோல் அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பிலும் சிலி தேசம் தனது பங்கினை அதிகரித்துகொண்டே வருகிறது.
சென்னையில் 3 நாள் படவிழா
இத்தனை சிறப்புகளைக் கொண்ட சிலி தேசத்தின் தற்கால உலக சினிமாக்கள் நான்கினை சென்னையில் காணும் வாய்ப்பினை சிலியன் திரைப்பட விழாவாக ஒருங்கிணைத்துள்ளது இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் திரைப்படச் சங்கம், ஆண்டு முழுவதும் பல்வேறு நாடுகளின் உலக சினிமாக்களை மூன்று நாள் திரைப்பட விழாக்களாக நடத்திவரும் ஐசிஏஎஃப், அக்டோபர் 10ஆம் தேதி நாளை தொடங்கி 12 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சிலியன் திரைப்படவிழாவை சென்னை, நுங்கம்பாக்கத்தின் கல்லூரிச் சாலையில் உள்ள அலையான்ஸ் பிரான்சேஸ் ஆப் மெட்ராஸ் வளாகத்தில் நடத்துகிறது. இந்தப் படவிழாவை, டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான சிலி தூதரகம், சென்னையில் உள்ள சிலி துணைத் தூதரகம் (Embassy of Chile in India, New Delhi and The Consulate of
Chile in Chennai) ஆகியவற்றுடன் இணைந்து இப்படவிழாவை (CHILEAN FILM FESTIVAL) ஒருங்கிணைக்கிறது.
10ஆம் தேதி ஆண்ட்ரூஸ் வுட் இயக்கிய ‘ஸ்பைடர்’ (Araña/Spider/2019/Dir. Andrés Wood/105 min) எனும் திரைப்படம் மாலை 6.15 மணிக்கு தொடக்க விழாவுக்குப் பின் திரையிடப்ப்படுகிறது. 11ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஜெய்ரோ பாய்சர் இயக்கிய ‘டியூஸ்டெ ருட்டைரி’ ( Tuesday Retiree/La jubilada/2012/Dir. Jairo Boisier/83 min) எனும் திரைப்படமும் 12ஆம் தேதி, ‘ஹெரு அண்ட் படு தி லெஜெண்ட்’ ( Heru and Patu, the legend/Patu the legend/2018/Dir. Waitiare Kaltenegger Icka/48 min) மாலை 6 மணிக்கும், ‘தி பிளாண்ட்ஸ்’ (The plants/Las plantas/2015/Dir.: Roberto Doveris/94 min) எனும் திரைப்படம் இரவு 7 மணிக்கும் திரையிடப்படவுள்ளன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago