மத்திய அரசு பணிகள் காத்திருக்கிறது... விண்ணப்பிக்க இரண்டே நாள்தான்

By ராகா

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வுக்கான அறிவிப்பை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.

இதன்படி காலியாக உள்ள 20,000 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் குரூப் பி, குரூப் சி பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவர். பட்டப் படிப்பை படித்த 18 - 32 வயதுக்குட்பட்டவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீட்டுப் பிரிவின் அடிப்படையில் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அக்டோபர் 8ஆம் தேதி கடைசி நாள். கடைசி நேரத்தில் விண்ணப்பங்களை இணையவெளியில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க முன்கூட்டியே விண்ணப்பிப்பது நல்லது.

விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் சமர்பித்த பிறகு விண்ணப்பக் கட்டணத்தை அக்டோபர் 9ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் செலுத்தலாம். ரூ. 100 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்கள், பட்டியலினம், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

சமர்பித்த விண்ணப்பங்களில் மாற்றங்கள் எதுவும் இருப்பின், அதை அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் சரி செய்து இறுதியாக சமர்ப்பிக்கவும் வாய்ப்பு உண்டு. முதல் நிலைத் தேர்வு (Tier I) 2022 டிசம்பர் மாதத்திலும், இரண்டாம் கட்டத் தேர்வுக்கான (Tier 2) தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in./ என்கிற இணையதளத்தைப் பார்க்கவும்.
(விண்ணப்பிக்கும் முன்பு விதிமுறைகளை ஒருமுறை படித்துக்கொள்ளவும்.)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE