டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு பயிற்சிக்கான எளிய முறை குறிப்புகள் - பகுதி 7

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப் 1 தேர்வுகள் நவம்பர் 19 அன்று நடத்தப்பட இருக்கின்றன. குரூப்-1 தேர்வுக்கு தயார்செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு பாடத்துக்குமான எளிய முறை குறிப்புகளை போட்டித் தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர் ஜி.கோபாலகிருஷ்ணன் தொகுத்தளிக்கிறார். இன்றைய ஏழாம் பகுதியில் ‘பொருளாதாரம்’ பாடத்துக்கான எளிய முறைக் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியப் பொருளாதாரம் -1
வங்கிகள்
முக்கிய குறிப்புகள்

* இந்தியாவின் முதல் வங்கியான பாங்க் ஆப் இந்துஸ்தான் பொ.ஆ.1770 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது.
* முதன்முதலாக இந்தியர்களால் தொடங்கப்பட்ட வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி (1894)

ரிசர்வ் வங்கி


* பிரெஸ்ஸல்ஸ் நகரில் நடந்த பணவியல் மாநாட்டில் எடுத்த முடிவுகளின்படி.இந்தியாவில் 'இந்திய ரிசர்வ் வங்கி' தொடங்கப்பட்டது. இது மைய வங்கி என்று அழைக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு - 1935
தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு - 1949
* மைய வங்கியை 'வங்கிகளின் வங்கி என கூறிய பொருளாதார வல்லுநர் பி.ஏ. சாமுவேல்சன்
*இந்திய ரிசர்வ் வங்கியால் கடன் கட்டுப்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் மரபுசாரா முறை மறு கொள்முதல் வீதம் (Repo rate).
*இந்தியாவில் வட்டி வீதங்களை நிர்ணயிக்கும் பணக்கொள்கைக் குழுவின் தலைவர்
- இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்.
*இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர்
-சக்தி காந்த தாஸ்
*வங்கி விகிதம் (Bank Rate) என்பது ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் வட்டி விகிதம்

ஸ்டேட் வங்கி
*பாரத ஸ்டேட் வங்கி என்றழைக்கப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பழைய பெயர் இம்பீரியல் பேங்க்
*ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தேசிய மயமாக்கப்பட்ட ஆண்ட்- 1955

வங்கிகள் தேசியமயம்
*1969 ஆம் ஆண்டு ஜுலை 19 அன்று 14 வங்கிகள் தேசியமயமாக்கியது போல் 1980 ஆம் ஆண்டுதேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை
ஆறு. (பிரதமர் இந்திராகாந்தி)

வங்கிகள் இணைப்பு
* 1993இல் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்ட வங்கி
தி நியூ பேங்க் ஆப் இந்தியா
*இந்தியாவில் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (EXIM BANK) தொடங்கப்பட்ட ஆண்டு - 1982
*ஏப்ரல் 1, 2019 அன்று அரசு வங்கிகள் இணைப்பு விவரம்
தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி - பேங்க் ஆப் பரோடாவுடன்
இணைக்கப்பட்டது.
*ஏப்ரல் 1, 2020 அன்று அரசு வங்கிகள் இணைப்பு விவரம்
அலகாபாத் வங்கி - இந்தியன் வங்கியுடன்
சிண்டிகேட் வங்கி - கனரா வங்கியுடன்
ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா - பஞ்சாப் நேஷனல் வங்கியுடன்
ஆந்திரா வங்கி மற்றும் காரப்பொரேஷன் வங்கி - யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.

தனித்து இயங்கும் வங்கிகள்
* ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு அடுத்த பெரிய வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி
*தற்போது தனித்தியங்கும் தேசிய வங்கிகள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் அண்ட் சிந்து பேங்க், பாங்க் ஆப் மஹாராஷ்டிரா மற்றும் பாங்க் ஆப் இந்தியா


*தனியார் வங்கி தொடங்க குறைந்தபட்ச முதலீடு
ரூபாய் 500 கோடி. தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ , எச்.எப்.டி.சி, ஆக்சிஸ் போன்றவை தனியார் வங்கிகளாகும்.

பாரத வங்கிகள் இணைப்பு
* பாரத மகிளா வங்கி தொடங்கப்பட்ட வருடம்
2013 (19.11.2013 முதல்கிளை தொடக்கம் - அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்)
2017 இல் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைப்பு.
*தங்க பணமாக்கும் திட்டம் அறிமுகம் செய்த வருடம்
2015
*பாரத ஸ்டேட் வங்கியின் ஐந்து இணை வங்கிகள் அவ்வங்கியுடன் இணைக்கப்பட்ட நாள் 31மார்ச் 2017.

*இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (IDBI)தொடங்கப்பட்ட ஆண்டு1964
*1998-99 களில் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும் கிசான் கிரெடிட் கார்டுகளை இந்தியாவில் அறிமுகப்படுத்திய வங்கி
நபார்டு வங்கி
*ரூ 100 கோடி ஆரம்ப முதலீட்டில் 1982 ஆம் ஆண்டுஉருவாக்கப்பட்ட நபார்டு வங்கியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள நகரம்
மும்பை

* 246 தனியார் காப்பீடு நிறுவனங்களை ஒருங்கிணைத்து 01-09-1956 உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம்
ஆயுள் காப்பீட்டு நிறுவனம்.
(Life Insurance Corporation of India)

பன்னாட்டு வங்கிகள்

*பிரிட்டனின் உட்ஸ் மாநாட்டு முடிவுகளின்படி உலக வங்கி தொடங்கப்பட்ட வருடம்1944
*ஐ.பி.ஆர். டி. (International Bank for Reconstruction and Development) தொடக்கம் 1945.
பன்னாட்டு மேம்பாட்டுச் சங்கம் (IDA- International Development Agency) தொடங்கிய ஆண்டு1960.
1956இல் பன்னாட்டு நிதிக்கழகம் (International Finance Corporation -IFC) நிறுவப்பட்டது.
பன்னாட்டு முதலீட்டு பிணக்குகள்தீர்வு மையம் (ICSID) 1966இல் நிறுவப்பட்டது.
பலதரப்பட்ட முதலீடு பொறுப்பு உறுதி முகமை (MIGA) நிறுவப்பட்ட ஆண்டு1988. இவையணைத்தும் சேர்ந்ததுதான் உலக வங்கிக் குழுமம். 185 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. தற்போதைய தலைவர் இராபர்ட் சொல்லிக்.
உலக வங்கி தலைமையிடம் -வாஷிங்டன் D.C.

*1945ஆம் ஆண்டுதொடங்கப்பட்ட IMF (International Monetary Fund) பன்னாட்டு நாணய நிதியம்
அதன் 190 உறுப்பு நாடுகளால் நிர்வகிக்கப்படுகிறது. மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைவர் கிறிஸ்டிலினா ஜார்ஜீவா.
துணைத் தலைவர் கீதா கோபிநாத். தலைமையிடம் - வாஷிங்டன் D.C.

*பன்னாட்டு தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி (Bank for international settlements) 1930 ஆம் ஆண்டு சுவிஸ் பேசேல் நகரில் உருவாக்கப்பட்டதாகும். இவ்வமைப்பு உலகில் உள்ள அனைத்து மைய வங்கிகளுக்கும் உறுதுணையாக விளங்குகிறது. 60 மைய வங்கிகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த வங்கி அதன் இயக்குனர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

*67 ஆசிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கி 1966 ஆம் ஆண்டுபிலிப்பைன்ஸ் நாட்டு தலைநகரான மணிலாவை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. தற்போதைய தலைவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மசாட்சுகு அசகாவா.

தொகுப்பு - ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்
முந்தைய பகுதி - https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/878039-tnpsc-group-1-simple-notes-for-preparation-part-6-4.html

அடுத்த பகுதி – அக்டோபர் 7 வெள்ளி அன்று வெளியாகும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்