மூக்கில் ஒரு பிரிட்ஜ்!

By செய்திப்பிரிவு

Russian forces destroyed a bridge linking two cities in eastern Ukraine, severing a vital evacuation path for civilians.

மேற்கூறிய செய்தியைப் படித்ததும் என்ன தோன்றுகிறது? ரஷ்யாவை ஒரு உலுக்கு உலுக்கி ‘போதுமே இந்தச் சண்டை’ என்று கத்தத் தோன்றுகிறதா? அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைப் பார்த்து ‘எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்காதீர்கள்’ என்று எச்சரிக்கை செய்யத் தோன்றுகிறதா? உலக அமைதிக்காகப் பிரார்த்தனை செய்யத் தோன்றுகிறதா?

எல்லாமே எனக்கும் தோன்றுகிறதுதான். கூடவே மேற்படி செய்தியைக் கொண்டு நம் ஆங்கில மொழியறிவை மேலும் கொஞ்சம் வளர்த்துக் கொள்ளலாமே என்றும் தோன்றுகிறது! மேற்படி செய்தியில் ‘Russian forces’ என்பது எதைக் குறிக்கிறது?

‘Russia forces Ukaraine’ என்றால் ரஷ்யா ஏதோ விஷயத்தில் உக்ரைனை நிர்பந்தத்துக்கு ஆளாக்குகிறது என்று பொருள். ‘Force’ என்றால் ஒன்றை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் வலிந்த செயல்பாடு. ஆனால், இங்கே ‘Russian forces’ என்பது ரஷ்ய ராணுவம் என்பதைக் குறிக்கிறது.


      
கிழக்கு உக்ரைனில் உள்ள ஒரு பாலம் தகர்க்கப்பட்டதாகச் செய்தியில் உள்ளது. ‘Bridge’ என்றால் பாலம் என்பது தெரியும். ‘Bridge’ என்கிற பெயரில் சீட்டுக்கட்டு விளையாட்டும் உண்டு. கப்பலின் ஒரு குறிப்பிட்ட பகுதியைக்கூட ‘bridge’ என்பார்கள். உடனே ஜாக்கும் ரோஸும் கைகளை விரித்தபடி நிற்கும் பகுதியை மனதுக்குள் கொண்டு வர வேண்டாம். கப்பலைக் கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக அதன் கேப்டனும் பிற அதிகாரிகளும் நின்றபடி பேசும் பகுதிதான் ‘bridge’.
      
நம் முகத்திலேயே ஒரு ‘bridge’ இருக்கிறது தெரியுமா? நம் மூக்கின் இரு துவாரப் பகுதிகளையும் பிரிக்கும் உறுதியான எலும்பு அடங்கிய பகுதியை ‘bridge’ என்பார்கள். அதாவது, மூக்குக் கண்ணாடி உட்காரும் பகுதி. மூக்குக் கண்ணாடியின் ‘மூக்கில் உட்காரும் பகுதி’யைக்கூட ‘bridge’ என்பார்கள். அதாவது, ‘bridge’ன் மேல் ‘bridge’ உட்காருகிறது!

நாம் அவ்வளவாக அறிந்திருக்காத வேறு சில உடல் பாகங்களின் பெயர்களையும் தெரிந்துகொள்ளலாமே. குதிகால் என்பதை ‘ஹீல்’ (heel) என்கிற வார்த்தையின் மூலம் அறிந்து வைத்திருப்போம். ‘Kybe’ என்கிற வார்த்தையின் மூலமும் இதைக் குறிப்பிடுவார்கள். ‘Brannock device’ என்பதற்கும் நம் காலுக்கும்கூடத் தொடர்பு உண்டு.
      
காதைத் தொடு என்றால் நாம் தொடும் பகுதி மட்டுமே காது அல்ல. அதன், உட்புறப் பகுதிகளும் காதுதான். நாம் தொடும் வெளிப்புறப் பகுதி எது என்று கேட்டால் கன்னாபின்னாவென நீங்கள் பதிலளித்தால் அதுவும் பாதி சரிதான்! அதன் பெயர் ‘pinna’.
      
வியர்வையைப் பொங்கச் செய்து ‘டியோ’ நிறுவனங்களின் வாழ்வை வளமாக்கும் அக்குள் பகுதியை ‘armpit’ என்று தெரிந்து கொண்டால் போதும்தான். ஆனால் ஏனோ ‘oxter’ என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டாம். கை அல்லது காலின் சுண்டுவிரலை ‘minimum’ என்பதுண்டு. கண் இமைகளுக்கு நடுவே உள்ள வெற்றுப் பகுதிக்கு மட்டும் பெயர் இருக்கக் கூடாதா என்ன? Glabella.
      
அடுத்த வார்த்தையான ‘severing’ என்பதற்கு வருவோம். ‘Severe’ என்றால் சீரியஸான என்று பொருள். ‘Severe pain’, ‘severe injury’. ஆனால், ‘Severing’ என்றால் முழுமையாகத் துண்டித்தல் என்று பொருள். ‘Severing the ties’, ‘severing the relations’. இதற்கு அடிப்படையான வார்த்தை ‘sever’ (கவனிக்க. இறுதியில் ‘e’ இடம் பெறவில்லை).

‘Vital’ என்ற வார்த்தையும் செய்தியில் உள்ளது. ‘விடல்’ அல்ல, ‘வைடல்’. ‘Vital’ என்றால் முக்கியமான. ‘Vital for health’, ‘vital parameters’, ‘information of vital importance’. ‘He remained vital’ என்றால் அவன் உற்சாகமாக இருக்கிறான் என்று பொருள். ‘A vital evacuation path’ என்பது இங்கே வெளியேற்றத்துக்கான முக்கியப் பாதை என்பதைக் குறிக்கிறது.

‘Brannock device’ குறித்து யோசித்தீர்களா? ஷூ விற்கும் கடைக்குச் சென்றால் உங்கள் பாதத்தை ஒரு கருவியின் மீது வைத்து அதன் அளவை அறிவார்கள் அல்லவா, அந்தக் கருவிதான் அது.

ஜி.எஸ்.எஸ்.

(தொடரும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

19 mins ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

23 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்