பரபரப்பான தெருவின் ஓரத்தில் கடவுள் படம் ஒன்று பெரிதாக வரையப்பட்டிருக்கும். அதை ஒட்டி ஒரு ரூபாய் இரண்டு ரூபாயோ ஐந்து ரூபாயோ அதைவிட அதிகமான ரூபாய் நோட்டுகளோ இறைந்து கிடக்கும். இந்தக் காட்சியைப் பெரும்பாலானோர் கடந்திருப்போம். அழகான ஓவியம் வரைந்து யாசகம் கேட்பது நமது நாட்டில் மிகவும் சுலபமாகக் காணக் கிடைக்கும் காட்சியே. நோக்கம் எதுவாக இருந்தாலும் சுவரோவியங்கள், தெரு ஓவியங்கள் போன்ற அனைத்துமே மனதை மயக்கும் அற்புதக் கலை வடிவங்களே.
இப்படி நீட்டி முழக்க காரணம் உலகின் மிக நீளமான, பெரிய தெரு ஓவியம் ஒன்று சீனாவில் வரையப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்கவே. 3டி ஓவியமான அதை வரைந்து முடிக்க 20 நாட்களுக்கு மேல் ஆனதாக அந்த ஓவியத்தை வரைந்த யங் யாங்சுன் (Yang Yongchun) தெரிவிக்கிறார். அவரது குழுவினர் 20க்கும் மேற்பட்ட நாட்கள் தொடர்ந்து உழைத்து அந்த ஓவியத்தைப் பூர்த்தி செய்துள்ளனர். அதை வரைந்த நாட்களில் தங்களது கண்கள் முழுக்க வண்ணங்கள் மாத்திரமே நிரம்பி இருந்ததாக ஓவியக் குழுவினர் கூறுகிறார்கள்.

வசீகரமான வண்ணத்தில் கண்ணைப் பறிக்கும் அந்த ஓவியம் சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் தலைநகரான நாண்ஜிங்கில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் தெருவை அழகுபடுத்தியுள்ளது. அந்தக் கலைப்படைப்புக்கு ‘ரிதம்ஸ் ஆஃப் யூத்' எனப் பெயரிட்டுள்ளார் ஓவியர் யங் யாங்சுன். சீனாவில் வரும் ஆகஸ்ட் மாதம் நிகழவுள்ள இரண்டாம் சம்மர் யூத் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு அந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.
அந்த முப்பரிமாண ஓவியம் 2737.5 சதுர மீட்டர் பரப்பை ஆக்கிரமித்துள்ளது. இதன் நீளம் 365 மீட்டர்; அகலம் 7.5 மீட்டர். நகரத்தின் அழகையும் அந்நகரத்தின் இயற்கை எழிலையும் எடுத்துக்காட்டும் வகையில் அது தீட்டப்பட்டுள்ளது. உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள அந்த ஓவியம் இரண்டு கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளது. உலகின் மிக நீண்ட, பெரிய ஓவியம் என்ற வகையில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் அது இடம்பெற்றுள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago