டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 35

By செய்திப்பிரிவு

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த திங்கள்கிழமை (ஜூலை 18) அன்று பகுதி - 34இல் ‘கணிதம் - 5’ என்னும் தலைப்பின்கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘பொது-7 (இந்தியப் பொருளாதாரம்)’ என்னும் தலைப்பின்கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.

பொது-7 (இந்தியப் பொருளாதாரம்)

1. இந்தியாவில் வர்த்தகத்தில் ஏக போக உரிமையைத் தடுக்கும் சட்டம் (MRTP) எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
அ) 1966 ஆ) 1969
இ) 1972 ஈ) 1975

2. 1991 புதிய தொழிற் கொள்கையின்படி கீழ்க்கண்ட சரத்துகளில் தவறானது எது?
அ) தனியார் முதலீடுகளுக்கு அதிகமாக அணுமதி அளிக்கப்பட்டது.
ஆ) உற்பத்தியில் நிலையான வளர்ச்சி
இ) லாபகரமான வேலைவாய்ப்பு
ஈ) மனித வளத்தைக் குறைவாகப் பயன்படுத்துதல்

3. ‘பணத்தின் மதிப்பு குறைவதும் விலைகள் உயர்ந்துகொண்டே செல்வதும்தான் பணவீக்கம்’ என வரையறுத்த பொருளாதார அறிஞர் யார்?
அ) ஆல்ஃப்ரட் மார்ஷல் ஆ) ஆடம் ஸ்மித்
இ) கிரௌத்தர் ஈ) செம்ஸ்போர்டு

4. கீழ்க்கண்டவர்களில் பணவீக்கத்தினால் பயன்பெறாதவர்கள் யார்?
அ) கடன் கொடுத்தவர்
ஆ) கடன் வாங்கியவர்
இ) ஏற்றுமதியாளர்கள்
ஈ) சேமிப்பாளர்கள்

5. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறைகளில் கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
அ) விலைக் கட்டுப்பாடு
ஆ) இறக்குமதியில் கட்டுப்பாடு விதித்தல்
இ) மூலதனத் திட்டங்களில் அரசு செலவைக் குறைத்தல்
ஈ) வரிவிதிப்பைப் குறைத்தல்

6. இந்தியத் திட்டக்குழுவின் மாற்று அமைப்பான நிதி ஆயோக் எந்த வருடம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது?
அ) 01-01-2014
ஆ) 01-01-2015
இ) 01-01-2016
ஈ) 01--01-2017

7. 1952 இல் தொடங்கப்பட்ட தேசிய வளர்ச்சிக் கவுன்சிலின் அலுவல் சாராத் தலைவர் யார்?
அ) குடியரசுத் தலைவர்
ஆ) துணைக் குடியரசுத் தலைவர்
இ) பிரதமர்
ஈ) நிதி அமைச்சர்

8. 15 ஆவது நிதிக்குழு தலைவர் யார்?
அ) Y.V. ரெட்டி
ஆ) N. K. சிங்
இ) உர்ஜித் படேல்
ஈ) மாண்டேக்சிங் அலுவாலியா

9. கீழ்க்கண்ட மாவட்டங்களில் தமிழ்நாட்டின் நெசவுப் பள்ளத்தாக்கில் அமையாத மாவட்டம் எது?
அ) கோயம்புத்தூர்
ஆ) ஈரோடு
இ) திண்டுக்கல்
ஈ) திருப்பூர்

10. தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம் என எந்த நகரம் பெயர் பெற்றுள்ளது?
அ) காஞ்சிபுரம்
ஆ) கரூர்
இ) ஈரோடு
ஈ) கும்பகோணம்

11. இந்தியாவின் பட்டு நெசவுத் தொழிலில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?
அ) முதலாமிடம்
ஆ) இரண்டாமிடம்
இ) மூன்றாமிடம்
ஈ) நான்காமிடம்

12. இந்தியன் ஆயில் நிறுவனத்துக்குச் சொந்தமான மதுரா பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை எந்த மாநிலத்தில் உள்ளது?
அ) உத்தராகண்ட்
ஆ) உத்தரப் பிரதேசம்
இ) மத்தியப் பிரதேசம்
ஈ) பிஹார்

13. ரோம ஆடைத்தொழிலில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
அ) பஞ்சாப்
ஆ) ஹரியானா
இ) மேற்கு வங்கம்
ஈ) இமாசலப் பிரதேசம்

14. இந்தியாவில் பட்டு ஆராய்ச்சி நிறுவனம் எந்த நகரில் அமைந்துள்ளது?
அ) காஞ்சிபுரம்
ஆ) திருபுவனம்
இ) மைசூரு
ஈ) ஆரணி

15. பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா திட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
அ) 1990 ஆ) 1993
இ) 1996 ஈ) 1999

16. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ) கங்கா கல்யாண் திட்டம் - 1997
ஆ) அந்தோத்யா அன்ன யோஜனா திட்டம் - 2000
இ) பிரதம மந்திரி சுரக்க்ஷாபீமா யோஜனா - 2015
ஈ) பிரதம மந்திரி அவாஸ் கிராம யோஜனா - 2018

17. ஜிஎஸ்டி எத்தனை அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
அ) இரண்டு ஆ) மூன்று
இ) நான்கு ஈ) ஐந்து

18. கீழ்க்கண்ட வரிகளில் எது மாநில வரி அல்ல?
அ) நில வருவாய்த் தீர்வை
ஆ) மது வகை மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வைகள்
இ) வளர்விகித, தேய்விகித வரிகள்
ஈ) நிலம், மணை, கட்டிடங்கள் மீதான வரிகள்

19. இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்டும் அறிவியலார் யார்?
அ) டாக்டர் வர்கீஸ் குரியன்
ஆ) நார்மன் போர்லாக்
இ) டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்
ஈ) டாக்டர் வேணுகோபால்

20. விவசாய முன்னேற்றம், விவசாயிகளின் நலன் காத்தல் எனும் கிரிஸி கல்யாண் திட்டம் எந்த ஆண்டு இந்திய அரசால் கொண்டுவரப்பட்டது?
அ) 2016 ஆ) 2018
இ) 2020 ஈ) 2022


பகுதி 34இல் இடம்பெற்ற வினாக்களுக்கான விடைகள்

1. அ) ரூ4000

2.ஆ) 10 : 18 : 25

3. அ )50

4. ஈ) 49

5. இ) 25

6. ஆ) 46

7. அ) 20 கி.மீ/மணி

8. இ) 4

9. ஈ) 45

10. ஆ) 335

11. ஈ) 450

12. இ) 10%

13. அ) 44

14. ஆ) ரூ. 360

15. இ) லாபம் 25%

16. அ) 25

17. ஈ) 33

18. ஆ) 1940

19. அ) ரூ 7300

20. இ) 500

(இந்தப் பகுதியில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள் அடுத்த பகுதியில் இடம்பெறும். அத்துடன் இந்தத் தொடர் நிறைவடையும்.)

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE