ஆங்கிலம் அறிவோமே - 112: சின்ன கோடு, பெரிய கோடு!

By ஜி.எஸ்.எஸ்

எந்த வார்த்தையில் q இடம்பெற்றாலும் அதைத் தொடர்ந்து u என்ற எழுத்தும் இடம்பெறுவது வழக்கம். Queen, quit, queue, quantity, quality.

ஆனால் q வைத் தொடர்ந்து u அல்லாத வேறொரு எழுத்து இடம்பெறும் வார்த்தைகளும் உண்டு. எடுத்துக்காட்டு QWERTY. கணினியின் key board-ஐ இந்த வார்த்தை குறிக்கிறது. எதனால் இந்தப் பெயர் என்பதைக் கொஞ்சம் யோசித்தால் உங்களால் கண்டுபிடித்துவிட முடியும்.

முஸ்லிம் மக்களுக்கான நீதிபதியை Qadi என்பார்கள். இந்து அல்லது முஸ்லிம் சாமியார்களை Faqir என்றோ, Fakir என்றோ குறிப்பிடுவதுண்டு. Qindar என்பது அல்பேனியா நாட்டில் முன்பு புழக்கத்தில் இருந்த ஒரு நாணயம். குறைவான மதிப்பு கொண்டது.

Qwerty என்ற எழுத்துகளைக் கொஞ்சம் கவனித்தால் அவை கணினி அல்லது தட்டச்சு விசைப்பலகையின் (keyboard) மேல் வரிசையில் இடப்புறமாக அடுத்தடுத்து அமைந்த எழுத்துகள் என்பது தெரியவரும். அதனால்தான் அதற்கு அந்தப் பெயர்.

Chord - Cord - Cored

ஒரு வளைவின் இர ண்டு புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டை chord என்பார்கள். இசைப் பிரிவில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மியூசிக் டோன்களை ஒலிக்க விடுவதையும் chord என்பார்கள்.

Cord என்பது கயிறு. அதேபோல நன்கு வளையக்கூடிய எந்தப் பொருளையும்கூட cord என்பார்கள்.

ஒன் றின் மையப் பகுதியை நீக்குவதை cored என்பதுண்டு.

“En dash, Em dash என்றெல்லாம் கேள்விப்படுகிறேனே. இவை என்ன?’’ என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

Hyphen என்பது சிறு கோடு. Eye - opener என்பதில் இருப்பதை ப் போல.

En dash என்பது hyphen-ஐவிட அளவில் சற்று நீளமான ஒரு கோடு. ‘n’ என்ற எழுத்தின் அளவு அகலம் கொண்ட கோடு என்பது ஐதீகம்! கால அளவைக் குறிக்கும்போது இதை முக்கியமாகப் பயன்படுத்துகிறோம்.

2013 -- 2016, February -- July இவை சில எடுத்துக்காட்டுகள்.

Em dash என்பது முன்பு குறிப்பிட்டதைவிட மேலும் சற்று நீளமான கோடு. ‘m’ எழுத்துக்குத் தேவைப்படும் நீளம் என்று வைத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு எழுதும் கடிதங்களில் em dash பயன்படுத்தப்படுகிறது.

ஒரு comma அல்லது colonனுக்குப் பதிலாக சில இடங்களில் em dash பயன்படுத்தப்படுகிறது.

You are the friend -- -the only friend -- - who offered to help me.

Please call my assistant -- -Stephen -- - about this training programme.

எண்ண ஓட்டம் சடாரென மாறுபடுவதைக் குறிக்கவும் em dash பயன்படுகிறது.

I wish you would -- -oh, never mind leave it.

Perpetrate என்றால் ஒன்றைச் செய்வது என்று பொதுவாகச் சொல்லலாம். என்றாலும் சட்ட மீறலான அல்லது ஒழுங்கு மீறலான ஒரு காரியத்தைச் செய்யும்போது இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

A crime has been perpetrated against the local residents.

இந்த வார்த்தையை perpetuate என்ற வார்த்தையோடு குழப்பிக்கொள்பவர்கள் உண்டு. Perpetuate என்றால் ஒன்றை இடைவிடாமல் தொடர்ந்து செய்வது. This is a monument to perpetuate the memory of those died in Jallianwala Bagh massacre.

Perpetuate என்பதன் மற்றொரு வடிவம்தான் perpetual. இந்த வார்த்தையைக் கூறும்போது அதோடு தொடர்புடைய indefinitely என்பதையும் குறிப்பிடத் தோன்றுகிறது.

Consensus of opinion என்றால் என்ன? இது ஒரு வாசகரின் வினா.

ஒருமித்த முடிவு எனலாம். ஆனால் consensus என்றாலே ஒருமித்த கருத்து என்றுதான் அர்த்தம். எனவே consensus மட்டுமே போதும். அல்லது unanimity of opinion எனலாம்.

The proposal was accepted with single voice என்பது தவறு. The proposal was accepted with one voice என்பதே சரி.

தொடர்புக்கு: >aruncharanya@gmail.com

டிப்ஸ்

# Siesta என்றால் கொண்டாட்டம்தானே?

அது fiesta. Siesta என்றால் பெரும்பாலும் வெப்ப மண்டல நாடுகளில் மதிய நேரத்தில் எடுத்துக்கொள்ளும் ஓய்வு அல்லது அந்த நேரத்திலான சிறு தூக்கம்.

# Earnest expression என்றால்?

Serious expression என்று அர்த்தம்.

# ‘’This shop is open from eight to five’’ எனும் அறிவிப்பு சரியா?

அப்படியானால் 4.52 மணியிலிருந்து திறந்திருக்குமா? காலையிலா, மாலையிலா? “The shop is open from 8.00 a.m. to 5.00 p.m.’’ என்பது குழப்பமில்லாமல் இருக்குமே

திருத்தம்

கடந்த வாரம் ‘She is histotrionic’ என்றால்?’ என இடம்பெற்ற வார்த்தையில் எழுத்துப் பிழை நேர்ந்துவிட்டது. Histrionic என்பதுதான் சரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்