டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த புதன்கிழமை (ஜூலை 13) அன்று பகுதி - 32இல் ‘கணிதம் - 4’ என்னும் தலைப்பின்கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘நுண்ணறிவு - 2’ என்னும் தலைப்பின்கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.
நுண்ணறிவு - 2
1. TEACHER என்கிற வார்த்தையை UFBDIFS எனக் குறியிட்டால், STUDENT என்கிற வார்த்தையை எவ்வாறு குறியிட வேண்டும்?
அ) TUVEFOU ஆ) TVUFEOU இ) TUVFEOU ஈ) UTVEFOU
» டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 31
» டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 30
2. ஒரு நாளைக்கு எத்தனை முறை ஒரு கடிகாரத்தில் மணிமுள்ளிற்கும் நிமிடமுள்ளிற்கும் இடைப்பட்ட கோணம் 90° ஆக இருக்கும்?
அ) 40 ஆ) 48 இ) 46 ஈ) 44
3. BOOK என்பதை 2662 எனக் குறியிட்டு எழுதினால் NOTE என்பதை எவ்வாறு குறியிட வேண்டும்?
அ) 5652 ஆ) 5625 இ) 6552 ஈ) 2655
4. ஒரு வரிசையில் ராமன் இருபுறம் இருந்தும் 13 வது நபராக இருப்பின் அவ்வரிசையில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை என்ன?
அ) 27 ஆ) 26 இ) 25 ஈ) 24
5. 100 பக்கங்கள் கொண்ட புத்தகத்தின் பக்கங்களில் எண்ணிடும்போது மொத்தம் எத்தனை இலக்கங்கள் அச்சிட வேண்டும்?
அ) 192 ஆ) 189 இ) 200 ஈ) 191
6. ஒரு ஆப்பிளை 12 துண்டுகளாக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் எத்தனை வெட்டுகள் வெட்ட வேண்டும்?
அ) 6 ஆ) 3 இ) 4 ஈ) 12
7. கீழ்க்கண்ட தொடரில் அடுத்த உறுப்பு எது? 0, 26, 124, 342, ... ?
அ) 511 ஆ) 728 இ) 730 ஈ) 513
8. நேற்றைய முன்தினம் புதன்கிழமை எனில் நாளைய மறுதினம் என்ன கிழமை?
அ) வெள்ளி ஆ) திங்கள் இ) சனி ஈ) ஞாயிறு
9. A என்பவர் Bயின் சகோதரர், B என்பவர் C என்பவரின் சகோதரி எனில் C என்பவர் A என்பவருக்கு என்ன உறவு?
அ) தகப்பனார் ஆ) சகோதரர் இ) சகோதரி ஈ) சகோதரர் அல்லது சகோதரி
10. 2022 ஜனவரி 26 ஆம் தேதி புதன்கிழமை எனில் 2022 ஆம் ஆகஸ்ட் 15 ஆம்தேதி என்ன கிழமை?
அ) வெள்ளி ஆ) திங்கள் இ) ஞாயிறு ஈ) புதன்
11. ஒரு விருந்தில் 24 நண்பர்கள் கலந்துகொண்டனர். ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கிக் கொள்கின்றனர். மொத்தம் எத்தனை கைகுலுக்கல்கள் நிகழ்ந்திருக்கும்?
அ) 276 ஆ) 552 இ) 300 ஈ) 600
12. கீழ்க்கண்ட எண்களுள் பொருந்தாத எண் எது?
11, 13, 15, 17, 19
அ) 13 ஆ) 11 இ) 15 ஈ) 19
13. கீழ்க்கண்ட தொடரில் பொருந்தாத உறுப்பு எது?
5, 7, 9, 17, 23, 37
அ) 23 ஆ) 9 இ) 37 ஈ) 5
14. கீழ்க்கண்ட எண்களுள் தவறானது எது?
56, 72, 90, 108, 136
அ) 90 ஆ) 136 இ) 72 ஈ) 56
15. ரூபாய் என்பது இந்தியாவுடன் தொடர்புடையது எனில் யென் என்பது எந்த நாட்டுடன் தொடர்புடையது?
அ) ரஷ்யா ஆ) துருக்கி
இ) ஜப்பான் ஈ) சீனா
16. சீனா, டேபிள் டென்னிஸ் என்ற விளையாட்டுடன் தொடர்புடையது எனில் ஜப்பான் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
அ) ஜுடோ ஆ) கால்பந்து இ) கிரிக்கெட் ஈ) சதுரங்கம்
17. மாடு : தொழுவம்: : ஆடு : ?
அ) வலை ஆ) கொட்டில் இ) வளை ஈ) பட்டி
18. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க.
அ) IRJQ ஆ) AZBY இ) CXDW ஈ) GJUK
19. மரக்கூழ் : காகிதம் : : தாது : ?
அ) இரும்பு ஆ) கனிமம் இ) பாதரசம் ஈ) வெள்ளி
20. மண் என்பது மண்ணியல் எனில் மனிதன் என்பது என்ன?
அ) மானிடவியல் ஆ) விலங்கியல் இ) சமுதாயவியல் ஈ) செல்லியல்
பகுதி 32 இல் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள்:
1. அ) 291
2. அ) ரூ.3,280
3. ஈ) 39 செ.மீ
4. ஈ) 66செ.மீ.
5. இ) ரூ.1,250
6. ஆ) 100
7. இ) ரூ.3,310
8. ஆ) ரூ.2,800
9. அ) 15 : 8
10. இ) 92
11. ஆ) 45
12. ஆ) 0.25
13. ஆ) 2485 ச.செ.மீ
14. ஈ) ரூ.6,000
15. இ) 5%
16. ஆ) 90
17. அ) பகல் 12 மணி
18. ஈ) 4
19. ஆ) 22
20. இ) 1/9
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago