டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த புதன்கிழமை (ஜூலை 6) அன்று பகுதி - 29இல் ‘நடப்பு செய்திகள் - 3’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘நடப்பு செய்திகள் - 4’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.
‘நடப்பு செய்திகள் - 4’
1. அண்மையில் இந்திய நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அர்ஜுன் மார்க் 1ஏ என்கிற பீரங்கி எங்கே தயாரிக்கப்பட்டது?
அ. திருச்சிராப்பள்ளி
ஆ. ஆவடி
இ. அருவங்காடு
ஈ. பெங்களூரு
2. இந்திய ராணுவமும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பும் இணைந்து உருவாக்கியுள்ள 9மி.மீ. இயந்திரத் துப்பாக்கியின் பெயர் என்ன?
அ. அஸ்வின் ஆ. ஆத்மி
இ. அஸ்மி ஈ. அக்னி
» டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 28
» டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 27
3. இந்தியாவின் தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பெயர் என்ன?
அ. தீபக் மிஸ்ரா
ஆ. ரஞ்சன் கோகோய்
இ. எஸ்.ஏ. பாப்டே
ஈ. என். வி. ரமணா
4. ஐ.எஸ்.ஓ 9001:2015 தரச் சான்றிதழ் பெற்ற முதல் விலங்கியல் பூங்காவான நேரு விலங்கியல் பூங்கா எங்குள்ளது?
அ. ஹைதராபாத்
ஆ. டெல்லி
இ. டேராடூன்
ஈ. முதுமலை
5. ஜூலை 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் எங்கே நடைபெறவுள்ளன?
அ. லண்டன்
ஆ. பர்மிங்காம்
இ. சிட்னி
ஈ. ஆம்ஸ்டர்டாம்
6. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்பட இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டுள்ளது?
அ. ரஷ்யா
ஆ. அமெரிக்கா
இ. பிரான்ஸ்
ஈ. ஜெர்மனி
7. 2021 சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது எந்த மாநகராட்சி தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிக்கான விருதை வென்றது?
அ. திண்டுக்கல்
ஆ. சேலம்
இ. கோயம்புத்தூர்
ஈ. தஞ்சாவூர்
8. எந்த நாவலுக்காக எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாடமி விருது (2020) வழங்கப்பட்டது?
அ. செல்லாத பணம்
ஆ. கோவேறு கழுதைகள்
இ. பேனா இனி பேசும்
ஈ. மறக்கவே நினைக்கிறேன்
9. தற்போது தமிழ்நாடு தேர்தல் ஆணையராகப் பதவி வகிப்பவர் யார்?
அ. ககன் தீப்சிங் பேடி
ஆ. ராஜேஷ் லக்கானி
இ. பழனிக்குமார்
ஈ . இறையன்பு
10. கீழ்க்கண்டவர்களில் தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகச் செயல்படுபவர் யார்?
அ. எம். துரைசாமி
ஆ. சஞ்சீப் பானர்ஜி
இ. வினித் கோத்தாரி
ஈ. முனீசுவர்நாத் பண்டாரி
11. கீழ்க்கண்ட ஆசிய நாடுகளில் எந்த நாடு காமன்வெல்த் உறுப்பு நாடாக இல்லை?
அ. இலங்கை
ஆ. சீனா
இ. பாகிஸ்தான்
ஈ. சிங்கப்பூர்
12. வருடந்தோறும் உலக சுற்றுலா தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
அ. ஜூலை 12
ஆ. டிசம்பர் 10
இ. செப்டம்பர் 27
ஈ. ஏப்ரல் 22
13. உலக வர்த்தக நிறுவனத்தின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?
அ. ஜெனிவா
ஆ. பாரீஸ்
இ. நியூயார்க்
ஈ. தி ஹேக்
14. கீழ்க்கண்டவர்களில் தற்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக (AG) செயல்படுபவர் யார்?
அ. சுஷில் சந்திரா
ஆ. ஜி.சி.முர்மு
இ. கே. கே. வேணுகோபால்
ஈ. அஜித் தோவல்
15. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
பெயர் - நிறுவனம்
அ. சுந்தர் பிச்சை - கூகுள்
ஆ. பாரக் அகர்வால் - டுவிட்டர்
இ. அரவிந்த் கிருஷ்ணா - ஐ.பி.எம்
ஈ. அஞ்சலி சட் - அடோப்
16. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) எந்த வருடம் இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது?
அ. 2000 ஆ. 2005
இ. 2008 ஈ. 2010
17. கீழ்க்கண்டவர்களில் டாஃபே டிராக்டர் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர் யார்?
அ. மல்லிகா ஶ்ரீநிவாசன்
ஆ. முகமது இஸ்மாயில்
இ. ஜெயரஞ்சன்
ஈ. டி.ஆர்.பி. ராஜா
18. நடிகர் விவேக்கிற்கு ‘சின்ன கலைவாணர்’ என்கிற பட்டம் யாரால் வழங்கப்பட்டது?
அ. எம்.ஜி. ராமச்சந்திரன்
ஆ. மு. கருணாநிதி
இ. ஜெ.ஜெயலலிதா
ஈ. எடப்பாடி பழனிச்சாமி
19. பாரதிதாசனுக்குப் பிள்ளைத்தமிழ் பாடிய கவிஞர் யார்?
அ. பா. விஜய்
ஆ. கண்ணதாசன்
இ. புலமைப்பித்தன்
ஈ. வைரமுத்து
20. மக்கள் இலக்கியர் கி. ராஜநாராயனின் முதல் கதை (சரஸ்வதி இதழில் வெளிவந்தது) எது?
அ. வேட்டி ஆ. கதவு
இ. மாயமான் ஈ. நாற்காலி
பகுதி 29இல் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள்
(பகுதி 29 - https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/822850-tnpsc-group-4-objective-type-questions-and-answers-for-practice-part-29-7.html)
1. ஈ. பழனி
2. ஆ. போர்ச்சுகல்
3. இ. புதுக்கோட்டை
4. ஈ. 13,000
5. இ. 46 வது
6. ஆ. 2019
7. அ. என். சங்கரய்யா
8. ஈ. ஶ்ரீதரன் பிள்ளை - பஞ்சாப்
(கோவா)
9. இ. ராகுல் டிராவிட்
10. ஆ. விசாகபட்டிணம்
11. ஆ. 2024
12. அ. இத்தாலி
13. ஈ. இந்தியா
14. இ. மூன்றாமிடம்
15. ஆ. ஆஸ்திரேலியா
16. ஈ. ரிச்சர்ட் பிரான்சன் (பிரிட்டன்)
17. ஆ. சேலஞ்ச்
18. இ. 2080
19. அ. தெலங்கானா
20. ஆ. ஸ்வமித்வா யோஜனா
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago