இரண்டு வெள்ளைக் காகிதங்கள், செல்லோ டேப், கத்திரிக்கோல் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.
எப்படிச் செய்வது?
மேஜிக் செய்யும் முன் செய்ய வேண்டியவை:
• செல்லோ டேப்பைச் சிறிது வெட்டி , அதன் இரண்டு முனைகளையும் வெளிப்பக்கம் பசை இருக்குமாறு ஒட்டிவிடுங்கள்.
• ஒரு வெள்ளைக் காகிதத்தை மேஜை மீது வைத்துவிடுங்கள். அதன் இடது பக்கத்தின் நடுவே செல்லோ டேப்பை ஒட்டிவிடுங்கள்.
• இன்னொரு வெள்ளைக் காகிதத்தை செல்லோ டேப்பின் மீது வைத்து ஒட்டிவிடுங்கள். இப்போது இரண்டு காகிதங்களும் செல்லோ டேப் மூலம் இணைந்துள்ளன.
• பிறகு மேலே உள்ள காகிதத்தை செல்லோ டேப்பிலிருந்து பிரியாமல் கசக்கி, சிறிதாக மடித்துக்கொள்ளுங்கள்.
மேஜிக் செய்யும் போது செய்ய வேண்டியவை:
• முழுமையாக இருக்கும் காகிதம் நண்பருக்குத் தெரியும்படி வைத்துக்கொள்ளுங்கள். செல்லோ டேப்பில் ஒட்டிய கசங்கிய காகிதத்தை உங்கள் பக்கம் வைத்துக்கொள்ளுங்கள்.
• இடது கை கட்டை விரலில் கசக்கி வைத்த காகிதத்தைப் பிடித்து, மறைத்துக்கொள்ளுங்கள். முழுதாக இருக்கும் தாளை மூன்று துண்டுகளாகக் கிழியுங்கள்.
• கிழித்த காகிதத்தை உங்கள் நண்பர்களிடம் காட்டுங்கள்.
• கிழித்த காகிதத்தை ஏற்கெனவே கசக்கி வைத்திருக்கும் காகிதத்தின் முன் பக்கத்தில் மடித்து, கசக்கி வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது கிழித்து கசக்கிய காகிதமும் கிழிக்காது கசக்கிய காகிதமும் ஒரே மாதிரி தெரியும்.
• பிறகு கிழித்து கசக்கி மடித்த காகிதத்தை உங்கள் பக்கம் வைத்துக்கொண்டு கிழிக்காத கசக்கி வைத்த காகிதத்தைப் பிரித்துக் காட்டினால், உங்கள் நண்பர்கள் ஆச்சரியப்படுவார்கள். மேஜிக் செய்து அசத்துங்கள் பார்க்கலாம்!
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago