டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 27

By செய்திப்பிரிவு

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த புதன்கிழமை (ஜூன் 29) அன்று பகுதி - 26இல் ‘கணிதம் - 3’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘தமிழ்நாடு - 6 விடுதலை’ (போராட்டம் - 1) என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.

தமிழ்நாடு - 6 விடுதலை (போராட்டம் - 1)

1. கி.பி. 1755 இல் நெற்கட்டும் செவல் பகுதியில் நடந்த போரில் கர்னல் ஹெரான் தலைமையேற்ற ஆங்கிலப்படை யாரால் தோற்கடிக்கப்பட்டது?
அ. மருது சகோதரர்கள்
ஆ. பூலித்தேவன்
இ. வேலு நாச்சியார்
ஈ. கட்டபொம்மன்

2. எந்த வருடத்தில் கர்னல் கேம்பெல் என்பவரால் பூலித்தேவன் தோற்கடிக்கப்பட்டுக் கோட்டை கைப்பற்றப்பட்டது?
அ. கி. பி.1762 ஆ. கி. பி.1765
இ. கி.பி.1767 ஈ. கி.பி. 1769

3. எந்த வருடத்தில் கிழக்கிந்திய கம்பெனி ஆற்காடு நவாப்புடன் ‘கர்நாடக உடன்படிக்கை’ செய்துகொண்டு பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமம் பெற்றது?
அ. கி. பி.1792 ஆ. கி. பி.1795
இ. கி.பி.1797 ஈ. கி.பி. 1799

4. களப்பூர் காட்டில் மறைந்திருந்த கட்டபொம்மனை புதுக்கோட்டை விஜயரகுநாத தொண்டைமான் மூலம் சிறைபிடித்த ஆங்கிலேயர் எந்த நாளன்று கயத்தாறு கோட்டையில் தூக்கிலிட்டனர்?
அ. 05-09-1799
ஆ.13-09-1799
இ. 16-09-1799
ஈ. 16-10-1799

5. 1801இல் ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த பிரகடனம் எங்கே வெளியிடப்பட்டது?
அ. திருநெல்வேலி
ஆ. எட்டயபுரம்
இ. சிவகங்கை
ஈ. திருச்சிராப்பள்ளி

6. 24-10-1801 இல் மருது சகோதரர்கள் எந்தக் கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்?
அ. திருப்பத்தூர்
ஆ. சிவகங்கை
இ. கயத்தாறு
ஈ. புதுக்கோட்டை

7.10-07-1806 இல் தொடங்கப்பட்ட வேலூர் புரட்சியின்போது சென்னை ஆளுநராக இருந்தவர் யார்?
அ. ரிப்பன் பிரபு
ஆ. ரீடிங் பிரபு
இ. வில்லியம் பெண்டிங்
ஈ. வெல்லெஸ்லி

8. வேலூர் கலகத்தை ‘முதல் இந்திய சுதந்திரப் போருக்கு முன்னோடி’ எனக் கூறியவர் யார்?
அ. ந.சஞ்சீவி
ஆ. வி.டி. சாவர்க்கர்
இ. கே.ராஜய்யன்
ஈ. கே. கே. பிள்ளை

9. கி.பி. 1884 ஆம் வருடம் தொடங்கப்பட்ட சென்னை மகாஜன சபையின் முதல் தலைவராகச் செயல்பட்டவர் யார்?
அ. அனந்தா சாருலு
ஆ. சீனிவாச பிள்ளை
இ. ரெங்கையா நாயுடு
ஈ. ராமசாமி முதலியார்

10. இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு (கி.பி. 1887) யார் தலைமையில் சென்னையில் நடைபெற்றது?
அ. பக்ருதீன் தியாப்ஜி
ஆ. முகமது அன்சாரி
இ. ஆல்பிரட் வெப்
ஈ. ராஷ்பிகாரி கோஷ்

11. விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழ்நாட்டுத் தீவிரவாதத்தின் தந்தை எனக் கருதபட்டவர் யார்?
அ. பாரதியார்
ஆ. விஜயராகவாச்சாரியார்
இ. ராஜகோபாலாச்சாரியார்
ஈ. வ.உ.சிதம்பரனார்.

12. 10-04-1910 இல் ‘பாரதமாதா சங்கம்’ என்கிற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?
அ. வ.வே.சு.ஐயர்
ஆ. விஜயராகவாச்சாரியார்
இ. நீலகண்ட பிரம்மச்சாரி
ஈ. வாஞ்சிநாதன்

13. தென்னாட்டு திலகர் என அழைக்கப்பட்டவர் யார்?
அ. வ.வே.சு.ஐயர்
ஆ. பாரதியார்
இ. நீலகண்ட பிரம்மச்சாரி
ஈ. வ.உ.சிதம்பரனார்

14. கி.பி. 1917ஆம் ஆண்டு எந்த நகரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் அன்னிபெசன்ட் தலைமையேற்றார்?
அ. மும்பை
ஆ. சூரத்
இ. சென்னை
ஈ. கொல்கத்தா

15. கி.பி. 1919இல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது தமிழ்நாட்டில் தலைமையேற்று நடத்தியவர் யார்?
அ. காமராஜர்
ஆ. பிரகாசம்
இ. ராஜகோபாலாச்சாரியார்
ஈ. பெரியார்

16. பூரண சுதந்திரமே இந்தியாவின் குறிக்கோள் என எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது?
அ. புனே ஆ. சென்னை
இ. மும்பை ஈ. வாராணசி

17. 30-04-1930 அன்று எந்த ஊரில் உப்பு காய்ச்சுவதற்காக ராஜாஜி தலைமையில் 100 தொண்டர்கள் திருச்சியிலிருந்து புறப்பட்டனர்?
அ. நாகப்பட்டினம்
ஆ. திருத்துறைப்பூண்டி
இ. வேதாரண்யம்
ஈ. தூத்துக்குடி

18. ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது’ என்கிற பாடலை இயற்றியவர் யார்?
அ. ராமலிங்கம் பிள்ளை
ஆ. பாரதியார்
இ. வேதநாயகம் பிள்ளை
ஈ. அழ. வள்ளியப்பா

19. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தைத் தமிழ்நாட்டில் பரப்பிய தலைவர் யார்?
அ. வ.வே.சு.ஐயர்
ஆ. காமராஜர்
இ. ராஜாஜி
ஈ. சுப்பிரமணிய சிவா

20. கி.பி.1942 இல் எந்த காங்கிரஸ் மாநாட்டில் ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?
அ. கொல்கத்தா ஆ. சென்னை
இ. மும்பை ஈ. சூரத்


பகுதி 26இல் கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கான விடைகள் (உரிய விளக்கங்களுடன்)

1. அ) 16
5ஆட்கள் 32 நாட்களில் செய்யும் வேலை = 8சிறுவர்கள் 32நாட்கள் செய்யும் வேலை.
ஆகவே 5 ஆட்களும் 8 சிறுவர்களும் இணைந்தால் 32 நாட்களில் இரு பங்கு வேலை செய்வர்.
அக்குறிப்பிட்ட ஒரு பங்கு வேலையை செய்ய 16 நாட்கள் ஆகும்.

2. 10 செ.மீ.
A = (1/2)b×h
இங்கு A = 60 ; b = 12 ;
எனவே 60 = (1/2)12×h
-> h = 10

3. இ) 4 செ.மீ.
l^2 = r^2 + h^2
இங்கு l = 5 ; r = 6/2 = 3
எனவே h = 4

4. அ)269.5 க.செ.மீ.
V = π(r^2)h
இங்கு h = 2r = 7 ; r = 7/2 = 3.5
மதிப்புகளை பிரதியிட
கன அளவு = 269.5 க.செ.மீ.

5. இ) 19.404
அரைக்கோளத்தின் கன அளவு
= (2/3)π (r^3)
இங்கு r = 21 எனப் பிரதியிட
கன அளவு = 19404 க.செ.மீ
மேலும் 1லிட்டர் = 1000க.செ.மீ
எனவே,
அரைக்கோளத்தின் கன அளவு
= 19.404 லிட்டர்

6. ஆ) 44ச.செ.மீ
கூம்பின் வளைபரப்பு πrl
r - ஆரம் ; l - சாயுயரம்
இங்கு விட்டம் = 2r = 2.8 -> r = 1.4
l = 10
வளைபரப்பு = (22/7)×1.4×10 = 44
எனவே விடை 44 ச.செ.மீ.

7. இ) 35 செ.மீ.
உருளையின் மூலைவிட்டத்தின நீளம்தான் அக்கோலின் நீளமாகும். ஆனால்,
(மூலைவிட்டம்)^2
= (விட்டம்)^2 + (உயரம்)^2
இங்கு விட்டம் = 21 ; உயரம் = 28 என்பதால் மூலைவிட்டம் = 35 செ.மீ

8. ஈ) 25
அசல் ரூ100 எனில் மூன்று மடங்கு ரூ300.
வட்டி மட்டும் 300 - 100 = 200
வருட வட்டிவீதம் 8% என்பதால்
வருடங்களின் எண்ணிக்கை
= 200/8 = 25

9. ஆ) 2431
இரு எண்களின் விகிதம் a : b. அவற்றின் மீப்பொது வகு எண் (HCF) h எனில் அவ்விரு எண்களின் மீச்சிறு மடங்கு (LCM)
= abh ஆகும்
எனவே 11×17×13 = 2431

10. ஈ) 13
சராசரி × எண்ணிக்கை
= மொத்தம்
இங்கு
x + x + 2 + x + 4 + x + 6+ x + 8
=15 × 5 -> 5x + 20 =75 -> x = 11
x, x+3 x+4 ஆகிய மூன்று எண்களின் சராசரி = x + 2
= 11 + 2 = 13.

11. அ) 51
முதல் ‘n’ இரட்டைப்படை எண்களின் சராசரி ‘n + 1’.
1 முதல் 100 முடிய 50 இரட்டைப்படை எண்கள் உள்ளதால், சராசரி 51

12. இ) 223
70 முதல் 80 வரையில் உள்ள
பகா எண்கள் 71, 73, 79.
எனவே 71 + 73 + 79 = 223

13. ஆ) 209
n எண்களின் சராசரி m ஆக இருக்கட்டும். ஒவ்வொரு எண்ணையும் x ஆல் பெருக்கி கிடைக்கும் புதிய தொடரில் உள்ள n எண்களின் சராசரி mx.
இங்கு n = 17 ; m = 19 ; x = 11
எனவே mx = 19×11 = 209

14. ஈ) 35
10000 ×(0.35/100) = 35

15. ஆ) 336
30 பங்கு என்பது 126 எனில் 80 பங்கு = (126/30) × 80 = 336

16. அ) 24
A மட்டும் தனியே ஒருவேலையை முடிக்க x நாட்கள் ஆகும்போது B மட்டும் தனியே அவ்வேலையை முடிக்க y நாட்கள் ஆகும் எனில்
A யும் Bயும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க (xy)/(x + y)
நாட்கள் ஆகும். கணக்கின்படி
6 = (8y)/(8+y) -> y = 24

17. ஈ) 25
வி.விலை = 5/4 மடங்கு
வா.விலை = 1மடங்கு
லாபம் = வி.விலை - வா.விலை
= 1/4 மடங்கு
இலாப சதவீதம் = (1/4)×100 = 25%

18. இ) 315 ச.மீ.
நான்கு சுவர்களைக்கொண்ட ஓர் அறையின் நீளம், அகலம், உயரம் விகிதம் l , b, h அலகுகள் எனில் அதன் நான்கு சுவர்களின் பரப்பு 2h(l + b).
கணக்கின்படி 7y, 5y மற்றும் 4y ஆக இருக்கட்டும்.
இங்கு 2×4y×(7y+5y) = 864
-> 96 (y^2) = 864 -> y ^2 = 9 -> y = 3

19. ஆ) 331/3
15 நாற்காலிகள் விற்றால் 5 நாற்காலிகள் லாபம். 15 க்கு 5 எனில் 100க்கு = (5/15)×100 = 331/3.

20. அ) 1000
வட்டத்தின் சுற்றளவு = 2 πr
மொத்த தூரம்/ சுற்றளவு
= 22000/(2×22/7×3.5)
= 1000 முறைகள்

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்