டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 26

By செய்திப்பிரிவு

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த திங்கள்கிழமை (ஜூன் 27) அன்று பகுதி - 25இல் ‘நமது இந்தியா - 8 (வரலாறு - ஆ)’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘கணிதம் - 3’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.

கணிதம் 3

1. 5ஆட்கள் அல்லது 8 சிறுவர்கள் ஒரு வேலையை 32 நாள்களில் முடிக்க முடியும் எனில் 5ஆட்கள் 8 சிறுவர்கள் இணைந்து வேலைசெய்தால் அதே வேலையை எத்தனை நாள்களில் முடிப்பர்?
அ) 16 ஆ) 32 இ) 24 ஈ) 8

2. ஒரு முக்கோணத்தின் பரப்பு 60ச.செ.மீ. அதன் அடிப்பகுதி 12 செ.மீ எனில் அதன் உயரம் என்ன?
அ) 5செ.மீ. ஆ) 10செ.மீ. இ) 20செ.மீ. ஈ) எதுவுமில்லை

3. ஒரு கூம்பின் விட்டம் 6 செ.மீ. சாய்வு உயரம் 5 செ.மீ. எனில் அக்கூம்பின் உயரம் எவ்வளவு?
அ) 5.செ.மீ. ஆ) 8செ.மீ. இ) 4செ.மீ. ஈ) 6 செ.மீ.

4. ஒரு உருளையின் உயரம் அதன் ஆரத்தைப் போன்று இரு மடங்கு. அதன் விட்டம் 7 செ.மீ. எனில் அவ்வுருளையின் கன அளவு என்ன?
அ) 269.5 க.செ.மீ
ஆ) 539 க. செ.மீ
இ) 1078க.செ.மீ.
ஈ) எதுவுமில்லை

5. 21 செ.மீ. ஆரமுடைய ஒரு அரைக்கோள வடிவ பாத்திரத்தில் எத்தனை லிட்டர் நீரைச் சேமிக்க முடியும்?
அ) 9.702 ஆ) 38.808 இ) 19.404 ஈ) 16.404

6. ஒரு கூம்பின் விட்டம் 2.8 செ.மீ. அதன் சாயுயரம் 10 செ.மீ எனில் அதன் வளைபரப்பு என்ன?
அ) 68ச.செ.மீ ஆ) 44ச.செ.மீ இ) 22ச.செ.மீ. ஈ) 88 ச.செ.மீ

7. ஒரு உருளையின் விட்டம் 21செ.மீ. அதன் உயரம் 28 செ.மீ. எனில் அவ்வுருளையில் வைக்கப்படும் மிகப்பெரிய கோலின் நீளம் என்ன?
அ) 49 செ.மீ ஆ) 28 செ.மீ இ) 35 செ.மீ ஈ) 24.5 செ.மீ

8. ஒரு குறிப்பிட்ட அசல் 8 சதவீத தனி வட்டி வீதத்தில் எத்தனை வருடங்களில் மூன்று மடங்காகும்?
அ) 24 ஆ) 37.5 இ) 30 ஈ) 25

9. இரு எண்களின் விகிதம் 11 : 17. அவற்றின் மீப்பொது வகு எண் 13 எனில் அவ்விரு எண்களின் மீச்சிறு மடங்கு என்ன?
அ) 2021 ஆ) 2431 இ) 2341 ஈ) 3421

10. x, x+2, x+4, x+6, x+8 ஆகிய ஐந்து எண்களின் சராசரி 15 எனில், முதல் மூன்று எண்களின் சராசரி என்ன?
அ) 14 ஆ) 15 இ) 17 ஈ) 13

11. 1 முதல் 100 வரை உள்ள இரட்டைப்படை எண்களின் சராசரி என்ன?
அ) 51 ஆ) 50 இ) 100 ஈ) 101

12. 70 முதல் 80 வரையுள்ள பகா எண்களின் கூட்டுத்தொகை என்ன?
அ) 225 ஆ) 224 இ) 223 ஈ) 227

13. 17 எண்களின் சராசரி 19. ஒவ்வொரு எண்ணையும் 11 ஆல் பெருக்கி கிடைக்கும் புதிய தொடரில் உள்ள 17 எண்களின் சராசரி என்ன?
அ) 30 ஆ) 209 இ) 187 ஈ) 201

14.10,000இல் 0.35% இன் மதிப்பு என்ன?
அ) 3500 ஆ) 350 இ) 3.5 ஈ) 35

15. ஒரு எண்ணின் 30% என்பது 126 எனில் அவ்வெண்ணின் 80% எவ்வளவு?
அ) 420 ஆ) 336
இ) 294 ஈ) 216

16. A, B இருவரும் சேர்ந்து 6 நாட்களில் ஒரு வேலையை முடிக்கின்றனர். A மட்டும் தனியே அவ்வேலையை முடிக்க 8 நாட்கள் ஆகும் எனில் B மட்டும் தனியே அவ்வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
அ) 24 ஆ) 16 இ) 12 ஈ) 10

17. ஒரு பொருளை 5/4 மடங்கு வாங்கிய விலையில் விற்கும்போது கிடைக்கும் லாப சதவீதம் என்ன?
அ) 50 ஆ) 40 இ) 30 ஈ) 25

18. நான்கு சுவர்களைக்கொண்ட ஓர் அறையின் நீளம், அகலம், உயரத்தின் விகிதம் 7 : 5 : 4. அதன் நான்கு சுவர்களின் பரப்பு 864 ச.மீ. எனில் அதன் தரைதளத்தின் பரப்பு யாது?
அ) 225 ச.மீ. ஆ) 350ச.மீ. இ) 315 ச.மீ. ஈ) 420 ச.மீ.

19. 15 நாற்காலிகளின் விற்பனை விலை 20 நாற்காலிகளின் அடக்க விலைக்குச் சமம் எனில் லாப சதவீதம் யாது?
அ) 25 ஆ) 331/3 இ) 39 ஈ) 50

20. ஒரு வட்ட சக்கரத்தின் ஆரம் 3.5மீ. அது 22கி.மீ. பயணிக்க எத்தனை முறை சுற்றவேண்டும்?
அ)1000 ஆ) 2000 இ)1500 ஈ) 2500

பகுதி 25இல் கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கான விடைகள்

1. ஆ. A D B C

2. இ. இந்துக்களின் மீது காட்டிய வெறுப்பு

3. ஈ. அபுல் பாசல்

4. அ. ஜாரிப்

5. ஆ. குல்பதான் பேகம்

6. இ. சத்ரபதி சிவாஜி

7. இ. அக்பர் மூன்றாவது பானிபட் போருடன் தொடர்புடையவர்.
(இரண்டாம் பானிபட் போர் கி.பி.1556)

8. ஆ. தேவகிரி

9. ஈ. அலாவுதீன் கில்ஜி

10. அ. முகமது கோரி

11. இ. கி.பி. 1792

12. ஆ. இல்டுமிஷ்

13. இ. அக்பர்

14. ஈ. குருநானக்

15. ஈ. மும்தாஜ் - ஜஹாங்கீர்
(ஷாஜஹான்)

16. ஆ. 2 1 4 3

17. அ. A - 3 B - 4 C - 2 D - 1

18. இ. கோழிக்கோடு

19. ஈ. ஔரங்கசீப்

20. ஆ. குரு தேஜ் பகதூர்

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE