கோழி ஒன்று குடுகு டென்று
ஓடி வந்ததாம் - வந்து
குப்பை மேட்டில் ஏறிக் கிளறிக்
கிளறிப் பார்த்ததாம்.
தின்ன ஏதும் தானியந்தான்
அங்கே இல்லையாம் - பசி
தீர்த்துக் கொள்ள வழியில் லாமல்
ஏங்கி நின்றதாம்.
அந்தச் சமயம் தரையில் ஏதோ
பளபளத்ததாம் - மிக்க
ஆவ லாக அருகிற் சென்று
கூர்ந்து பார்த்ததாம்.
கண்ணைக் கவரும் வைரம் ஒன்றைத்
தரையில் கண்டதாம் - உடன்
கலக்கத் தோடு அதனைப் பார்த்துக்
கோழி சொன்னதாம்:
'மதிப்பு மிகவும் உயர்ந்த தென்று
மனிதர் கூறிடும் - நல்ல
வைரமே நான் உன்னை வைத்து
என்ன செய்வேன்?
நெல்லில் ஒன்றே இந்த நேரம்
எனக்குக் கிடைப்பினும் - நான்
நிகரில்லாத மகிழ்ச்சி யோடு
கொத்தித் தின்னுவேன்.
பாரில் உள்ள வைரம் யாவும்
ஒன்று சேரினும் - என்
பசியைத் தீர்த்து வைக்கும் சக்தி
இல்லை, இல்லையே!'
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago