தித்திக்கும் திராட்சைகள்!

By ஆதன்


* திராட்சைகள் 6.5 கோடி ஆண்டுகளாகப் பூமியில் வாழ்கின்றன.

* மக்கள் விரும்பிச் சாப்பிடக்கூடிய பழங்களில் திராட்சையும் ஒன்று.

* மனிதர்கள் எட்டாயிரம் ஆண்டுகளாகத் திராட்சையைப் பயிரிடுகிறார்கள். திராட்சை பயிரிடும் முறை ஜார்ஜியாவில் இருந்து ஐரோப்பாவுக்குப் பரவியது.

* எட்டாயிரத்துக்கு மேற்பட்ட திராட்சை வகைகள் உள்ளன. இவற்றில் சாப்பிடும் திராட்சை, ஒயின் எடுக்கும் திராட்சை, உலர் திராட்சை வகைகள் முக்கியமானவை.

* நாம் சாப்பிடும் திராட்சைகளில் இருந்து ஒயின் தயாரிக்கப்படுவதாக நினைக்கிறோம். ஆனால், அது உண்மையல்ல. நாம் சாப்பிடும் திராட்சை மென்மையான தோலுடன் காணப்படுபவை. மிகச் சிறிய விதைகளுடனோ விதை இல்லாமலோ சாப்பிடக்கூடிய திராட்சைகளை விளைவிக்கிறார்கள். ஒயின் எடுக்கப்படும் திராட்சைகள் கடினத் தோலுடனும் விதைகளுடனும் காணப்படுகின்றன.

* திராட்சை சாகுபடியில் ஸ்பெயின், இத்தாலி, சீனா, துருக்கி ஆகிய நாடுகள் முன்னணியில் இருக்கின்றன.

* ஒரு கொடியில் அதிகமான திராட்சைக் கொத்துகள் இருப்பது நல்லதல்ல. வகையைப் பொறுத்து ஒவ்வொரு கொத்திலும் 15 முதல் 300 திராட்சைப் பழங்கள் இருக்கலாம். திராட்சைக் கொடியில் ஆரோக்கியம் இல்லாத பூக்களையும் பூச்சித்தாக்குதலுக்கு ஆளான திராட்சைக் கொத்துகளையும் வெட்டிவிடுவது நல்லது. இல்லை என்றால் திராட்சைகளின் தரம் குறைந்துவிடும்.

* தினசரி வைட்டமின் தேவையில் 27 சதவீதத்தைத் திராட்சை வழங்குகிறது. வைட்டமின் சி, கே அதிகமாக இருக்கின்றன. திராட்சையில் கொழுப்புச் சத்து இல்லை.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE