டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த புதன்கிழமை (ஜூன் 8) அன்று பகுதி - 17இல் ‘நமது இந்தியா - 5 (வரலாறு - அ) ’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘கணிதம் - 1’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.
கணிதம் - 1
1. 1 முதல் 100 வரை எழுதும்போது எத்தனை முறைகள் 9 என்ற இலக்கத்தைப் பயன்படுத்துகிறோம்?
அ)10 ஆ)21 இ)19 ஈ) 20
2. ஒருவர் ஒரு பொருளை ரூ. 50க்கு விற்கும்போது 25 % லாபம் அடைகிறார் எனில் அவர் அப்பொருளை வாங்கிய விலை என்ன?
அ)ரூ.28 ஆ)ரூ.25 இ)ரூ.40 ஈ) ரூ.30
» டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 17
» டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 16
3. முதல் பகா எண் எது?
அ)2 ஆ)1 இ)3 ஈ) 0
4. ஒரு புகைவண்டி மணிக்கு 99கி.மீ. வேகத்தில் செல்கிறது. அவ்வண்டி 10 நிமிடங்களில் எத்தனை மீட்டர் தூரம் சென்றிருக்கும்?
அ)1650 ஆ)16500 இ)16.5 ஈ) 165
5. கீழ்க்கண்ட எண்களில் எந்த எண் முப்படியாகவும் முழு வர்க்கமாகவும் இருக்கின்ற எண் ஆகும்?
அ)36 ஆ)125 இ)64 ஈ) 27
6. ஒரு முக்கோணத்தின் கோணங்களின் விகிதம் 3: 4 : 5 எனில் அந்த முக்கோணத்தின் மிகப் பெரிய கோணம் எது?
அ)90° ஆ)45° இ)50° ஈ) 75°
7. ஒரு செவ்வக வடிவ வயலின் சுற்றளவு 200மீ. அதன் அகலம் 40மீ எனில் அதன் பரப்பளவு என்ன?
அ)1200ச.மீ. ஆ)6400ச.மீ இ)2400ச.மீ ஈ) 4800ச.மீ
8. ஒரு மாணவன் ஒரு புத்தகக்கடையில் ரூ. 200க்கு 4 புத்தகங்களும் ரூ.150க்கு 6 புத்தகங்களும் வாங்குகிறான். எனில் ஒரு புத்தகத்தின் சராசரி விலை என்ன?
அ)ரூ.50 ஆ)ரூ.35 இ)ரூ.25 ஈ) ரூ.40
9. இரு வட்டங்களின் ஆரங்களின் விகிதம் 3 : 4 எனில் அவ்விரு வட்டங்களின் பரப்புகளின் விகிதம் என்ன?
அ)9 :16 ஆ)3 : 4
இ)16 : 9 ஈ) 4 : 3
10. எட்டு எண்களின் சராசரி14. அவற்றுள் ஆறு எண்களின் சராசரி 16. எனில் மீதமுள்ள இரு எண்களின் சராசரி என்ன?
அ)9 ஆ)12 இ)10 ஈ) 8
11. இரு எண்களின் கூடுதல் 19. அவற்றின் வர்க்கங்களின் வித்தியாசம் 95. எனில் அந்த எண்களின் வித்தியாசம் என்ன?
அ)9 ஆ)7 இ)5 ஈ) 11
12. ஒரு கோளத்தின் ஆரம் 50% அதிகரித்தால் அதன் மேற்பரப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?
அ)125 ஆ)100 இ)50 ஈ) 200
13. ஐந்து மனிதர்கள் சேர்ந்து ஒரு குழியைத் தோண்டுவதற்கு இரண்டு மணி நேரம் ஆகிறது. எனில் அதே வேலையை 12 மனிதர்கள் சேர்ந்து முடிக்க எவ்வளவு நிமிடங்கள் ஆகும்?
அ)100 ஆ)50 இ)60 ஈ) 40
14. ஒரு வகுப்பில் உள்ள 18 மாணவர்களின் சராசரி வயது 17. அவ்வகுப்பின் ஆசிரியரின் வயதையும் சேர்த்தால் சராசரி இரண்டு அதிகரிக்கிறது எனில் ஆசிரியரின் வயது என்ன?
அ)54 ஆ)37 இ)55 ஈ) 53
15. கீழ்க்கண்ட எண்களில் வேறுபட்ட எண் எது?
அ)19 ஆ)11 இ)13 ஈ) 15
16. a * b = a +b - ab எனில் 2*3 இன் மதிப்பு என்ன?
அ)-1 ஆ)5 இ)-5 ஈ) -3
17. ஒருவர் தன் வருமானத்தில் 75% செலவு செய்கிறார். அவருடைய வருமானம் 20% அதிகரித்தபோது அவர் தனது செலவை 10% அதிகரித்தால் அவருடைய சேமிப்பு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?
அ)12.50% ஆ)50% இ)100% ஈ) 75%
18. A என்பது Bஇன் மூன்றில் ஒரு பங்கு, C என்பது Bஇன் இரண்டில் ஒரு பங்கு எனில் A : B : C என்ன?
அ) 3 : 6 : 2 ஆ) 2 : 3 : 6 இ) 2 : 6 : 3 ஈ) 6 : 3 : 2
19. ஒருவரின் சம்பளம் 25% அதிகரிக்கப்படுகிறது. மீண்டும் பழைய சம்பளம் கிடைக்க வேண்டுமெனில் அவரது புதிய சம்பளம் எவ்வளவு சதவீதம் குறைக்கப்பட வேண்டும்?
அ)40 ஆ)25 இ)30 ஈ) 20
20. 31+32+33+.......+60 இன் மதிப்பு என்ன?
அ)1365 ஆ)1455 இ)1565 ஈ) 1255
பகுதி 17இல் கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கான விடைகள்
1. ஆ) பாஞ்ஞோ
2. அ) முதலாம் சந்திர குப்தர்
3. இ) உஜ்ஜயினி
4. இ) அசாம்
5. ஈ) ஹர்ஷர்
6. ஆ) சமஸ்கிருதம்
7. இ) சியூக்கி
8.ஈ) அசுவகோஷர் -சமண அறிஞர்
(பௌத்த அறிஞர்)
9. அ) கூர்ஜர்கள்
10. ஆ) முதலாம் நாக பட்டர்
11. அ) ராஜ்பாலா
(பிரதிகாரர்களின் கடைசி மன்னர்)
12. இ) கி.பி. 1193
13. இ) தருமபாலர் சமண மதத்தில் பற்றுடையவர்
14. ஆ) சந்தேலர்கள்
15. ஈ) 1307
16. ஈ) சோமதேவர் - சங்கீத சரிதம் (கதா சரிதம்)
17. அ) A-3, B-4, C-2, D-1
18. ஆ) A-4, B- 3, C-, 2, D- 1
19. இ) ராணா ரத்தன்சிங்
20. அ) அனைத்தும்
தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago