டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த திங்கள்கிழமை (மே 23) அன்று பகுதி-10 இல் தமிழ்நாடு - 3 (தமிழக வரலாறு - அ) என்னும் தலைப்பின்கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘இந்தியா-4’ (இந்திய மாநிலங்கள், முக்கிய நகரங்கள் - ஆ) என்னும் தலைப்பின்கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.
நமது இந்தியா - 4
இந்திய மாநிலங்கள், முக்கிய நகரங்கள் - ஆ
» டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 10
» டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 9
1. ஒடிசாவில் எந்த நகரத்தில் ஜெகநாதர் கோயில் உள்ளது?
அ) புவனேஸ்வரம் ஆ) புரி
இ) கட்டாக் ஈ) கொனாரக்
2. இந்தியாவில் மத்திய அரிசி ஆராய்ச்சி நிலையம் எந்த நகரத்தில் உள்ளது?
அ) புவனேஸ்வரம் ஆ) புரி
இ) கட்டாக் ஈ) கொனாரக்
3. ஜாரவா பழங்குடி மக்கள் அதிக அளவில் வசிக்கும் இடம் எது?
அ) அந்தமான் ஆ) லட்சத்தீவு
இ) மாகே ஈ) யானம்
4. இந்தியாவின் ஏரிகள் நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?
அ) ஜெய்ப்பூர் ஆ) அஜ்மீர்
இ) உதய்பூர் ஈ) கோட்டா
5. 18 - 05 - 1974 அன்று சிரிக்கும் புத்தர் என்கிற பெயரில் இந்தியா தனது அணுகுண்டு சோதனையை எந்த நகரில் நடத்தியது?
அ) காந்திநகர் ஆ) தன்பாத்
இ) ராஞ்சி ஈ) பொக்ரான்
6. புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி அம்மன் மலைக்கோயில் அமைந்துள்ள உதம்பூர் எந்த மாநிலம்/மத்திய ஆட்சிப் பகுதியில் உள்ளது?
அ) இமாசல பிரதேசம்
ஆ) உத்தராகண்ட்
இ) ஜம்மு & காஷ்மீர்
ஈ) அருணாசல பிரதேசம்
7. இந்தியாவின் அரண்மனை நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?
அ) கொல்கத்தா ஆ) ஜெய்ப்பூர்
இ) மைசூரு ஈ) தஞ்சாவூர்
8. நிலப்பரப்புகளின் ஒற்றுமை காரணமாக இந்தியாவில் எந்த இடத்தை மகாத்மா காந்தி ‘இந்தியாவின் சுவிட்சர்லாந்து' என குறிப்பிட்டுள்ளார்?
அ) புவனேஸ்வரம் ஆ) புரி
இ) கௌசாணி ஈ) கொனாரக்
9. இந்தியாவின் இளஞ்சிவப்பு நகரம் (pink city) என அழைக்கப்படும் நகரம் எது?
அ) கொல்கத்தா ஆ) ஜெய்ப்பூர்
இ) மைசூரு ஈ) உதய்பூர்
10. எல்லோரா குகைக்கோயில் இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ளது?
அ) குஜராத் ஆ) மகாராஷ்டிரம்
இ) ஒடிசா ஈ) பிஹார்
11. மகாராஷ்டிரத்தில் உள்ள அஜந்தா குடவரைக் கோயில்களைப் பற்றிக் குறிப்பெழுதி வைத்த சீனப் பயணி யார்?
அ) யுவான் சுவாங் ஆ) பாஹியான்
இ) இட்சிங்
ஈ) மார்க்கோ போலோ
12. இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் எந்த நகரில் உள்ளது?
அ) டெல்லி ஆ) சென்னை
இ) கொல்கத்தா ஈ) மும்பை
13. சரயு நதி பாயும் இந்திய மாநிலம் எது?
அ) மத்திய பிரதேசம்
ஆ) உத்திர பிரதேசம்
இ) உத்தராகண்ட்
ஈ) மகாராஷ்டிரம்
14. அல்மோரா சிறை இருக்கும் இந்திய மாநிலம் எது?
அ) மத்திய பிரதேசம்
ஆ) உத்தர பிரதேசம்
இ) உத்தராகண்ட்
ஈ) பிஹார்
15. 1972 ஆம் ஆண்டு எந்த நகரில் கணிதமேதை இராமானுஜம் உயர் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது?
அ) டெல்லி ஆ) சென்னை
இ) கொல்கத்தா ஈ) மும்பை
16. இந்தியாவின் மிகப் பெரிய மத்திய ஆட்சிப் பகுதி எது?
அ) சண்டிகர்
ஆ) அந்தமான் நிகோபர் தீவுகள்
இ) டெல்லி
ஈ) புதுச்சேரி
17 இயற்கைச் செழிப்புடன் காணப்படும் சுந்தரவன காடுகள் அமைந்துள்ள மாநிலம் எது?
அ) மத்திய பிரதேசம்
ஆ) உத்தர பிரதேசம்
இ) உத்தராகண்ட்
ஈ) மேற்கு வங்கம்
18. எந்த ஆண்டில் மேகாலயம் தனி மாநில அந்தஸ்தைப் பெற்றது?
அ) 1969 ஆ) 1970
இ) 1972 ஈ) 1974
19. ‘ஆப்பிள் மாநிலம்’ என அழைக்கப்பட்ட இந்திய மாநிலம் எது?
அ) ஜம்மு & காஷ்மீர்
ஆ) இமாசல பிரதேசம்
இ) உத்தரகாண்ட்
ஈ) அருணாசல பிரதேசம்
20. ‘இந்தியாவின் நறுமணத் தோட்டம்’ எனப் போற்றப்படும் மாநிலம் எது?
அ) கேரளம்
ஆ) இமாசல பிரதேசம்
இ) ஜம்மு & காஷ்மீர்
ஈ) அருணாசல பிரதேசம்
பகுதி-10இல் இடம்பெற்ற வினாக்களுக்கான விடைகள்
1. ஆ) ஜப்பானியர்
2. இ) பத்து கோடி
3. ஈ) டால்ஸ்டாய்
4. அ) இங்கிலாந்து
5. அ) பாரத ரத்னா விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது
6. ஆ) இரண்டாம் முறை நோபல் பரிசு 1909 இல் கிடைத்தது (1911)
7. இ) 22-12-2012
8. ஈ) A-1,B- 2,C- 4, D-3
9. இ) ஹெலன் கெல்லர்
10. அ) 1, 2 மற்றும் 3
11. இ) மதுரை
12. அ) 3, 2, 1, 4
13. ஈ) கோபர்நிகஸ் (போலந்து)
14. இ) மூவலூர் ராமமிர்தம்
15. ஆ) வால் நட்சத்திரம்
16. ஈ) அக்டோபர் 4
17. அ) பாஸ்டன்
18. ஆ) பிரான்ஸ்
19. இ) தூதுவளை
20. ஈ) A-4,B- 2, C-3, D-1
தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago