ரத்த அழுத்தத்தை அளவிடுங்கள், பாதிப்பைக் கட்டுப்படுத்துங்கள், நீண்ட காலம் வாழுங்கள்

By செய்திப்பிரிவு

சமீபகாலமாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்களுக்குக்கூட உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, 20லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் ஆண்டுக்கு இரண்டு முறையாவது ரத்த அழுத்தப் பரிசோதனையைச் செய்து கொள்வது அவசியம். 40 வயதைக் கடந்தவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை ரத்த அழுத்தத்தைச் சோதித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, மரபியல் ரீதியாக உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாகத் தங்களை மருத்துவரிடம் காட்டிப் பரிசோதித்துக் கொள்வது மிக மிக அவசியம். போதுமான இடைவெளிகளில் அழுத்தப் பரிசோதனையைச் செய்து கொள்வதே, அது ஏற்படுத்தும் ஆபத்திலிருந்து நம்மைக் காக்கும் வழி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE