டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 8

By செய்திப்பிரிவு

இந்தியா - 3 (அரசமைப்பு - அ)

1. உலகின் மிக நீண்ட அரசமைப்புச் சட்டம் (Constitution) இந்தியாவுடையது. உலகின் மிகச் சுருக்கமான அரசமைப்புச் சட்டம் எந்த நாட்டுடையது?
அ) இலங்கை ஆ) பங்களாதேஷ்
இ) மொராக்கோ ஈ) பின்லாந்து

2. இந்திய அரசமைப்பு எந்தப் பிரிவின்படி அரசமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றம் மேற்கொள்ள முடியும்?
அ) 368 (1) அ) 358
இ) 386(1) ஈ) 356

3. இந்திய அரசமைப்பு இறுதி வடிவத்தில் எத்தனை உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்?
அ) 234 ஆ) 284
இ) 332 ஈ ) 248

4. இந்தியாவின் மிகப் பழமையான உயர் நீதிமன்றம் எங்குள்ளது?
அ) சென்னை ஆ) அலகாபாத்
இ) கொல்கத்தா ஈ) மும்பை

5. இந்திய அரசமைப்பின் எந்தப் பிரிவின்படி குடியரசுத் தலைவரைக் கைது செய்யவோ குற்றவியல் நடவடிக்கையோ எடுக்க முடியாது?
அ) 351 ஆ) 288
இ) 316 ஈ ) 361

6. எந்த ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம் இந்திய நாடாளுமன்ற மக்களவையில் ஆங்கிலோ-இந்திய உறுப்பினர்களுக்கு இடங்களை ஒதுக்கும் வழக்கத்தை ரத்துசெய்தது?
அ) 2016 ஆ) 2018
இ) 2019 ஈ) 2020

7. 12-03-1930 அன்று சபர்மதி ஆசிரமத்திலிருந்து 78 உறுப்பினர்களுடன் தண்டி யாத்திரை புறப்பட்ட காந்தி எத்தனை கிலோமீட்டர் நடைப்பயணம் செய்தார்?
அ) 384 ஆ) 484
இ) 348 ஈ) 448

8. 1905 ஆம் வருடம் கர்சான் பிரபுவால் பிரிக்கப்பட்ட வங்காளம் எந்த ஆண்டில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது?
அ) 1909 ஆ) 1911
இ) 1912 ஈ) 1913

9. இந்திய அரசமைப்பின் எந்தச் சட்ட விதியின்படி உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்குக்குக் குறையாத இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்?
அ) 342 ஆ) 324
இ) 234 ஈ) 243

10. இந்திய அரசமைப்பு நிர்ணய அவை முதல் கூட்டம் நடைபெற்ற நாள் எது?
அ) 15-8-1946 ஆ) 9-12-1946
இ) 9-11- 1946 ஈ) 15-12-1946

11. இந்திய அரசமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளான நவம்பர் 26 ‘இந்திய அரசமைப்பு நாளா’க எந்த ஆண்டில் முதல்முறையாகக் கொண்டாடப்பட்டது?
அ) 2000 ஆ) 2010
இ) 2015 ஈ) 2020

12. எந்த ஆண்டில் கிரிப்ஸ் தூதுக்குழு அரசமைப்பு நிர்ணய அவையை உருவாக்க பரிந்துரைத்தது?
அ) 1940 ஆ) 1941
இ) 1942 ஈ) 1943

13. அரசமைப்பு நிர்ணய அவை தொடங்கப்பட்டபோது அதன் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ) ராஜேந்திர பிரசாத்
ஆ) பி.ஆர்.அம்பேத்கார்
இ) வல்லபபாய் படேல்
ஈ) சச்சிதானந்த சின்ஹா

14. இந்தியக் குடிமக்களின் அடிப்படை கடமைகள், எந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம்
பகுதி- 4இல் சேர்க்கப்பட்டன?
அ) 1976-42ஆவது ஆ) 1976-44ஆவது
இ) 1976-46ஆவது ஈ) 1976-48ஆவது

15. பொருத்துக:
A. சாதி, சமய, இன, நிற
அடிப்படையில் வேறுபடுத்தல்
கூடாது. - 1.பிரிவு 18
B. பொதுப்பணி, வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு - 2. பிரிவு 17
C. தீண்டாமை
ஒழிப்பு. - 3. பிரிவு 16
D. அரசு அணுமதியின்றி
பெறப்படும் பட்டயங்களைத்
தடை ய்தல். - 4. பிரிவு 15
அ) A-1, B- 2, C-3, D-4 ஆ) A-4, B-3, C-2, D-1
இ) A- 4, B-3, C-1, D-2 ஈ) A-1,B- 2,C-4, D-3

16. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ) தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் (NREP) - 1980
ஆ) கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (RLEG) - 1983
இ) ஜவஹர் ரோஜ்ஹர் யோஜனா திட்டம் (JRY) - 1989
ஈ) பிரதம மந்திரி ரோஜ்ஹர் யோஜனா (PMRY) - 1996

17. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ) தேசிய குழந்தைத் தொழிலாளர் கொள்கை சட்டம் - 1980
ஆ) கொத்தடிமை ஒழிப்புச் சட்டம். - 1976
இ) உடன்கட்டைஏறுதல் ஒழிப்புச் சட்டம் - 1829
ஈ) கைம்பெண் மறுமணச் சட்டம் - 1856

18. இந்தியக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க எந்தத் தேர்தல் முறை பின்பற்றப்படுகிறது?
அ) நேரடித் தேர்தல்
ஆ) விகிதாச்சார பிரதிநிதித்துவம்
இ) மக்களவை உறுப்பினர்களின் வழியாக மறைமுகத் தேர்தல்
ஈ) ஏதுமில்லை

19. கீழ்க்கண்ட தொடர்களில் ஆளுநருக்குப் பொருந்தாதது எது?
அ) நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லாதவர்
ஆ) உயர் நீதிமன்ற நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர்
இ) ஒரு மாநிலத்தின் ஆளுநர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
ஈ) குடியரசுத் தலைவர் ஆளுநருக்கு பதவி நீட்டிப்பு செய்யலாம்; பதவிக் காலம் முடியும் முன்னரே பதவி நீக்கம் செய்யலாம்.

20. பொருத்துக:
A. அரசமைப்பு மூலமாகத் தீர்வு காணும் உரிமை. - 1. பிரிவு 29, 30
B. பண்பாடு, கல்வி உரிமை. - 2. பிரிவு 32
C. சுரண்டலுக்கு
எதிரான உரிமை. - 3. பிரிவு 23, 24
D. சமத்துவ உரிமை - 4. பிரிவு 14-18
அ) A-2,B-1,C-3,D-4 ஆ) A-1,B-2,C-4,D-3
இ) A-1,B-2,C-3,D-4 ஈ) A-4,B-3,C-2,D-1

பகுதி 7இல் இடம்பெற்ற வினாக்களுக்கான விடைகள்

1. அ) A-4, B-1, C-2, D-3

2. ஈ) நார்வே - சூரிய உதயம்
(நடு இரவில் சூரியன் தோன்றும்)

3. அ) இலங்கை - ரூபாய்

4. ஆ) சிகாகோ

5. இ) லத்தீன்.

6. இ) வி.கே.கிருஷ்ண மேனன்

7. ஈ) ஜெனீவா

8. ஆ) ஜூலை 11

9. ஈ) பிரஸ்ஸெல்ஸ்

10. அ) G - 5

11. ஈ) இராக் - டெஹ்ரான்

12. அ) டோக்கியோ

13. ஈ) சுவீடன்

14. இ) 1999

15. இ) 2024

16. அ) திம்பு

17. ஈ) கனடா

18. இ) ஐரோப்பா

19. ஆ) டான்சானியா

20. ஈ) அடகாமா

தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க
: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்