டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த திங்கட்கிழமை (மே 9) அன்று வெளியிடப்பட்ட பகுதி-4இல் ‘இந்தியா-1 (குடியரசுத் தலைவர்கள், துணைக்குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள்)’ என்னும் தலைப்பின் கீழ் 15 (16-30) கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று இந்தியா-2 (இந்திய மாநிலங்கள், முக்கிய நகரங்கள் - அ) என்னும் புதிய தலைப்பின் கீழ் முதல் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.
இந்தியா-2 (இந்திய மாநிலங்கள், முக்கிய நகரங்கள் - அ)
1. இந்தியாவில் முதல் இரும்பு தொழிற்சாலை உருவாகிய நகரம் எது?
அ) ரூர்கேலா. ஆ) ஜாம்ஷெட்பூர்
இ) பிலாய். ஈ) தன்பாத்
2. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ள பானிபட் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) குஜராத்
இ)ஹரியானா ஈ) பீகார்
3. தமிழகத்தின் மீன்பிடித்தொழில் நகரமான நாகப்பட்டிணம் எந்தக் கடல் பகுதியில் அமைந்துள்ளது?
அ) வங்காள விரிகுடா
ஆ) மன்னார் வளைகுடா
இ) இந்து மகா சமுத்திரம்
ஈ) கட்ச் வளைகுடா
4. சாஞ்சி தூபி அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?
அ) பஞ்சாப் ஆ) மத்திய பிரதேசம்
இ) குஜராத் ஈ) பீகார்
5. மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய வணிகசந்தை நகரம் எது?
அ) போபால். ஆ) உஜ்ஜயினி
இ) இந்தூர். ஈ)ஓங்காரேஸ்வரம்
6. கஜூராஹோ கோயில் எந்த மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) குஜராத்
இ)பீகார். ஈ) மத்திய பிரதேசம்
7. தென்னிந்தியாவின் தலைவாசல் என அழைக்கப்படும் நகரம் எது?
அ) சென்னை ஆ) பெங்களூரு
இ )ஹைதராபாத் ஈ) தூத்துக்குடி
8. பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்க தளங்களுள் ஒன்றான உஜ்ஜயினி நகரம் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) மத்திய பிரதேசம்
இ)ஹரியானா ஈ) பீகார்
9. தெற்காசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் நகரம் எது?
அ) மும்பை ஆ) புனே
இ)சென்னை ஈ) பெங்களூரு
10. கன்ஹா தேசியப் பூங்கா எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) குஜராத்
இ)மத்திய பிரதேசம் ஈ) பீகார்
11. தென்னிந்தியாவின் கலாச்சார தலைநகர் என அழைக்கப்படும் நகரம் எது?
அ) சென்னை ஆ) பெங்களூரு
இ) ஹைதராபாத் ஈ) திருப்பதி
12. குணோ வனவிலங்குகள் சரணாலயம் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) குஜராத்
இ)மத்திய பிரதேசம் ஈ) பீகார்
13. தென்னிந்தியாவின் நெசவுத்தொழில் தலைநகரான (மான்செஸ்டர்) எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
அ) தாமிரபரணி ஆ) பவானி
இ) நொய்யல் ஈ) காவிரி
14. செம்பு மற்றும் வைர உற்பத்தியில் முதன்மையாக உள்ள இந்திய மாநிலம் எது?
அ) பஞ்சாப் ஆ)மத்திய பிரதேசம்
இ)ஹரியானா ஈ) பீகார்
15. நீராறு அணை தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உள்ளது?
அ) நீலகிரி ஆ) தஞ்சாவூர்
இ) மதுரை ஈ) கோயம்புத்தூர்
16. சர்ஜு ஆற்றின் துணை ஆறான கோமதி எந்த இந்திய மாநிலத்தில் பாய்கிறது?
அ) உத்தராகண்ட் ஆ) குஜராத்
இ)ஹரியானா ஈ) பீகார்
17. சூரத், பரூச் ஆகிய பன்னாட்டு வணிக நகரங்கள் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளன?
அ) பஞ்சாப் ஆ) குஜராத்
இ)மகாராஷ்டிரா ஈ) பீகார்
18. ஜார்க்கண்ட் என்பதன் பொருள் யாது?
அ) மக்கள் கூட்டம் ஆ) நீர்ப்பகுதி
இ) காடுகள் நிறைந்த நிலப்பரப்பு ஈ) மலைகள் நிறைந்த பகுதி
19. இந்திய அரசின் திட்டக்குழு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக அறிவித்துள்ள டாங் மாவட்டம் எந்த இந்திய மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) பீகார்
இ)ஹரியானா ஈ) குஜராத்
20. கோனாரக் - சூரிய கோயில் எந்த மாநிலத்தில் உள்ளது?
அ) பஞ்சாப் ஆ) மத்திய பிரதேசம்
இ) ஒடிசா ஈ) பீகார்
பகுதி-4இல் இடம்பெற்ற வினாக்களுக்கான விடைகள்:
16. ஆ. சி.ராஜகோபாலாச்சாரி
17. இ. சீத்தாராம் கேசரி
18. இ. அ.பி.வாஜ்பாய்
19. ஆ. டாக்டர் மன்மோகன் சிங்
20. இ. சந்திரசேகர்
21. ஆ. இந்திராகாந்தி
22. அ. பிரதீபா பாட்டீல்
23. அ. ஜவாஹர்லால் நேரு
24. ஆ. டாக்டர் ராதாகிருஷ்ணன்
25. அ. பண்டித ஜவாஹர்லால் நேரு
26. இ. 1997
27. அ. டாக்டர் ஜாகீர் உசேன்
28. ஆ. லால் பகதூர் சாஸ்திரி
29. ஆ. நீலம் சஞ்சீவி ரெட்டி
30. இ. நரசிம்ம ராவ்
தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago